Wednesday, November 18

Reviews

ஆதார் திரைப்பட விமர்சனம்

ஆதார் திரைப்பட விமர்சனம்

Reviews
ஆதார் - திரைப்பட விமர்சனம் குழந்தை பெற்றெடுத்த கையோடு காணாமல் போன மனைவியைத் தேடி அலையும் கணவனின் கதைதான் ஆதார். கட்டிடத் தொழிலாளியான கருணாஸ் தன் நிறைமாத கர்பிணி மனைவி ரித்விகாவை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார். கட்டுமானப் பொருள்களை திருடும் இனியாவை ஒரு முறை கையும் களவுவாகப் பிடிக்கிறார் கருணாஸ். ஆயினும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் கருணாஸ் மனைவிக்கு உதவியாக இருக்க இனியா மருத்துவமனையில் தங்குகிறார். இந்த சூழலில் குழந்தை பெற்றெடுத்த ரித்விகா திடீரென காணமல் போகிறார். மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் கருணாஸ் புகார் செய்ய, புலன் விசாரணையில் இறங்குகிறது போலீஸ். உதவி செய்ய உடனிருந்த இனியா பிரேதமாகக் கிடக்கிறார். கள்ளக்காதலனுடன் ரித்விகா ஓடிவிட்டதாக போலீசார் கண்டுபிடித்து (?) சொல்ல, அதை நம்ப மறுத்த கருணாஸ் கதறித் துடிக்கிறார். உண்மையில் ரித்விகா என்ன ஆனார்.....
கோப்ரா – திரைப்பட விமர்சனம்

கோப்ரா – திரைப்பட விமர்சனம்

Reviews
கோப்ரா - திரைப்பட விமர்சனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம்,  இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார்,சுரேஷ்மேனன், ரோபோ ஷங்கர், ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அசத்தலாக இருக்கின்றன படத்தின் ஆரம்பக் காட்சிகள். ஸ்காட்லாந்து நாட்டின் இளவரசர் கொல்லப்படுகிறார். இந்தியாவின் வட மாநில முதலமைச்சர் ஒருவர் கொல்லப்படுகிறார். ரஷ்யாவில் இருக்கும் ராணுவ தளபதி கொல்லப்படுகிறார் உலகின் வெவ்வேறு பகுதிளிலும் அதிமுக்கிய பிரமுகர்கள் கொல்லப்படுவதன் காரணம் என்ன.... ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாதவர்களாக இருக்கும் இவர்கள் ஏன் கொல்லப்படுகிறரா்கள். இவர்களை கொல்வது யார்.... எதற்காக இந்த கொலைகள் நடக்கின்றன என்பதுதான் கோப்ரா படத்தின் கதை. இந்தக் கொலைகள் செய்யப்படு...
ஜீவி 2 – விமர்சனம்

ஜீவி 2 – விமர்சனம்

Reviews
ஜீவி 2 - விமர்சனம் ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜீவி திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக் கருவுக்காகவும், புதுமையான திரை வடிவத்துக்காகவும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடி படத்தில் நடித்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித் தந்தது. ஜீவி படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பே இப்போது இரண்டாம் பாகம் உருவாகக் காரணமாக அமைந்திருக்கிறது. ஆஹா ஓடிடியில் ஆகஸ்ட் 19ந்தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. ஜீவி 2 முதல் பாகத்தைப் பார்க்காமல் தவற விட்டவர்களுக்காக இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே முதல் பாகத்தின் முக்கிய பகுதிகளை தொகுத்துக் காட்டியிருப்பதால் முதல் பாகத்தைப் பார்க்காதவர்களும் ஜீவி 2 படத்துக்குள் எளிதாக நுழைந்து விடலாம். நாயகன் வெற்றி, ஹவுஸ் ஓனர் அக்காவின் பார்வையற்ற மகளை மணந்து ஷேர் ஆட்டோ ஓட்டி தன் வாழ்க்கை...
எமோஜி – விமர்சனம்

எமோஜி – விமர்சனம்

Reviews
எமோஜி - விமர்சனம் இன்றைய இளைணைய தலைமுறையின் காதலும் பிரேக் அப்பும் கல்யாணமும் கதையாக்கப்பட்டு ஆஹா ஓடிடியில் எமோஜி என்ற பெயரில் வெப் சீரியஸாகியிருக்கிறது. இளம் தலைமுறையினர் அவசரம் அவசரமாக காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதைவிட அவசரமாக பிரேக் அப் செய்து கொள்கின்றனர். "முன்பெல்லாம் அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் கல்யாணம்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் விவாகரத்தும் செய்து கொள்கிறார்கள்..." என்று துவக்க காட்சி ஒன்றில் வரும் வசனமே படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பதை புரிய வைக்கிறது. திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன... கிடைத்திருக்கும் இந்த வெப் சீரிஸ் வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் பாருங்கள் என்று சொல்வதுபோல் நாயகன் வேடத்தில் வரும் மஹத் ராகவேந்திரா அசத்தலாக நடித்திருக்கிறார். தேவிகா சதீஷ், மான...

காட்டேரி – விமர்சனம்

Reviews
காட்டேரி - விமர்சனம் டி.கே இயக்கி சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 'யாமிருக்க பயமே' திரைப்படம்தான் பேய் படங்களை நகைச்சுவையாக சொல்வதில் முன்னோடி என்று சொல்லலாம். ட்ரெண்ட் செட்டராக விளங்கிய படத்தைத் தந்த டி.கே. இயக்கிய காட்டேரி படம் என்பதால் எதிர்பார்ப்புகளுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருமணம் முடிந்த கையோடு பெரும் புதையலைத் தேடி வைபவ், சோனம் பாஜ்வா தம்பதியினர் நண்பர்களுடன் ஒரு கிராமத்துக்கு வருகின்றனர். அந்த கிராமமே மிகப் பெரிய சுடுகாடுபோல் காட்சியளிக்கிறது. கிராமத்தில் இருந்த அனைவரும் ஒட்டு மொத்தமாக மரணமடைந்து ஆவிகளாக சுற்றித் திரிகின்றனர். புதையல் எடுக்க வந்தவர்களுக்கோ கிராமத்தைவிட்டு வெளியேறும் வழி தெரியவில்லை. அவர்கள் உயிர் பிழைத்தார்களா.... புதையல் கிடைத்ததா......கிராம மக்கள் அனைவரும் இறந்தது எப்படி என்பதை எல்லாம் திகில் கலந்து சொல்ல வேண்டிய கதை ஏனோ தானோவென்று திர...
சீதா ராமம் – விமர்சனம்

சீதா ராமம் – விமர்சனம்

Reviews
  சீதா ராமம் - விமர்சனம் பாகிஸ்தானில் படிக்கும் கல்லூரி மாணவி ராஷ்மிகாவின் தாத்தா, இந்தியாவில் உள்ள ஒருவரிடம் கடிதமொன்றை சேர்ப்பிக்கும் பொறுப்பை தன் பேத்தியிடம் ஒப்படைத்து, அதை செய்தால் மட்டுமே தன் சொத்து கிடைக்கும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். ஏற்கெனவே சரியான முகவரியின்றி இரண்டு முறை திரும்பி வந்த அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ராஷ்மிகா இந்தியா வருகிறார். இந்தக் கடிதம் யாருக்கு யாரால் எழுதப்பட்ட கடிதம் என்பதெல்லாம் சுவையான காட்சிகள் மூலம் பிளாஷ் பேக்காக விரிகிறது ராணுவ வீரர் துல்கர் சல்மான் தனக்கு உறவு என்று யாருமில்லை என்பதை ஒரு வானொலி பேட்டியில் யதேச்சையாகச் சொல்ல, அதைக் கேட்ட பலரும் உறவென தாங்கள் இருப்பதாகச் சொல்லி கடிதங்களை எழுதிக் குவிக்கின்றனர். அதில் ஒரு கடிதம் துல்கரை தன் கணவர் என்று விளித்து அவரை திக்கு முக்காட வைக்கிறது. யார் இந்த ...
பொய்க்கால் குதிரை – விமர்சனம்

பொய்க்கால் குதிரை – விமர்சனம்

Reviews
பொய்க்கால் குதிரை - விமர்சனம் நடனப்புயல் என்றும் தென்னகத்து மைக்கேல் ஜாக்ஸன் என்றும் கொண்டாடப்படுவரை ஒரு கால் இல்லாதவராக படம் முழுவதும் வரும் வேடத்தில் நடிக்க வைப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் பொய்க்கால் குதிரை படத்தை எழுதி இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமாருக்கு நிறையவே இருக்கிறது. சாதித்தும் காட்டிவிட்டார் மனிதர். விபத்தொன்றில் மனைவியையும் தன் ஒரு காலையும் இழந்த பிரபுதேவா தன் மகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்கிறார். விபத்து காரணமாக கிடைத்த நஷ்டஈடு தொகையை வைத்து மகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்க பிரபு தேவா ஆசைப்பட, மகள் தன் படிப்பைவிட அப்பாவுக்கு ப்ராஸ்தடிக் லெக் பொருத்துவதே முக்கியம் எனக் கருதி, அதற்காக அப்பாவிடம் சண்டை போட்டு அந்த செயற்கை காலை பொருத்தச் செய்கிறார். இந்த சூழலில் திடீரென மகளுக்கு உடல் நலம் மோசமடைகிறது. பல லட்ச...
லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் _ விமர்சனம்

லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் _ விமர்சனம்

Reviews
கிரைம் த்ரில்லர் படங்கள் ஷார்ப்பாக, திரில்லாக இருக்க வேண்டும். அந்த வகையில் லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் ஷார்ப் அண்ட் த்ரில். அதில் இப்ராஹிம், விவியா மற்றும் சில நண்பர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் வாழ்க்கையில் பெரிதாக கொள்ளை யடித்து செட்டிலாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சின்னச் சின்ன திருட்டுக்கள் செய்யும் அவர்கள் ஒரு பங்களாவை விற்பதற்காக ரூ 30 கோடி வியாபாரம் நடப்பதாகவும் அதில் 20 கோடி பிளாக் மணி என்றும் அந்த தொகையை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்றும் விவியா சொல்கிறார். அந்த பணத்தை கொள்ளையடிக்க வருகின்றனர். பங்களாவுக்குள் நுழையும் அவர்கள் அங்குள்ள லாக்கரை தேடுகின்றனர். அப்போது எழும் சத்தத்தை கேட்டு உஷாராகிறார். பங்களாவிலிருக்கும் பரத். பரத்துக்கு பார்வை கிடையாது. ஆனாலும் நன்கு கேட்டும் திறன் இருப்பதால் சத்தம் வரும் திசைக்கு சென்று கொள்ளையடிக்க வந்த வர்களை அட...
குலு குலு – விமர்சனம்

குலு குலு – விமர்சனம்

Reviews
குலு குலு - விமர்சனம் அமேசான் காடுகளில் பிறந்து, குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பேசும் ஒரு மொழியை தாய் மொழியாகக் கொண்ட சந்தானம் பதிமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து தமிழ்நாடு வருகிறார். நல்ல பழக்கம் என்பதா கெட்ட பழக்கம் என்பதா என்றே சொல்ல முடியாத மாதிரி ஒரு பழக்கம் இவரிடம் இருக்கிறது. அதாவது உதவி என்று யார் என்ன உதவி கேட்டாலும் செய்து, உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்யும் பழக்கம்தான் அது. பசியால் தவித்த பிச்சைக்காரிக்கு சந்தானம் வாங்கித் தந்த உணவை திமிர் பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலையில் தட்டிவிட்டு வீணாக்கி விடுகிறார். "உனக்கு தைரியம் இருந்தால் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை அடி" என்று சொல்லி பிச்சைக்காரி சந்தானத்துக்கு கொம்பு சீவிவிடவே, பலர் பார்க்க இன்ஸ்பெக்டரை அறைகிறார் சந்தானம். கடத்தப்பட்ட தங்கள் நண்பனை மீட்பதற்கு இயலாதிருக்கும் நண்பர்கள் மூன்று ப...
Mahaveeryar starts with laughter and ends with thoughtful

Mahaveeryar starts with laughter and ends with thoughtful

Reviews
  The lead actors in the movie Mahaveeryar are Nivin Pauly and Asif Ali. directed by Abrid Shrine Siddique, Lalu Alex, Shanvi Shrivastava, and Lal are also featured. Story of the Film Nivin Pauly's Swami Apoornanthan is taken into custody and brought before the court in a case involving the theft of a religious object. Then, after a while, what occurs in court is unbelievable. Time travel and historical fiction in an unusual way . The concept of this film will make it a favourite among true movie fans. Since realistic movies are becoming more and more common, this one is exceptional. This film will undoubtedly be one of those works of art that endures over time. And I'm grateful beyond words to Nivin Pauly for making these kinds of films. Lead actress Shanvi Srivastava's pe...