Thursday, November 12

Reviews

‘அயலி’ – வெப் சீரிஸ் விமர்சனம்

‘அயலி’ – வெப் சீரிஸ் விமர்சனம்

Reviews
'அயலி' - வெப் சீரிஸ் விமர்சனம் ஜனவரி 26ஆம் தேதி முதல் ஜீ5 ஒரிஜினலாக ஸ்ட்ரீமாகும் அயலி வெப் சீரிஸில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கப் போகிறது என்றால் மிகையல்ல. பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அல்லது நடந்த விஷயங்களை, குறிப்பாக பெண் கல்வி மறுக்கப்படுவதையும், பூப்பெய்திய பெண்ணை உடனடியாக திருமணம் செய்து கொடுப்பதையும், அதனால் ஏற்படும் மோசமான பின் விளைவுகளையும் முகத்தில் அறைந்தாற்போல் விரிவாகவும் சுவைபடவும் சொல்லியிருக்கிறாள் அயலி. விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு கதையை எழுதி இயக்கியதற்காகவே இயக்குநர் முத்து குமாருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம். குக்கிராமம் ஒன்றில் 1990ஆம் ஆண்டு பின்னணியில் நடப்பதாக புனையப்பட்ட கதை என்றாலும் மாதவிடாய் காலத்தில் இன்னும் பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்தாமல், பழைய துணியை கிழித்து பயன்படுத்துவதும், அந்தத் துணியையே துவைத...
வி 3 – திரைப்பட விமர்சனம்

வி 3 – திரைப்பட விமர்சனம்

Reviews
திரைப்படங்கள் என்பது பொழுதை போக்க மட்டுமல்ல. நல்ல கருத்துக்களைச் சொல்லி சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் சில இயக்குநர்கள் படமெடுப்பார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர் வி3 படத்தை இயக்கிய அமுதவாணன். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்தால் மட்டும் போதுமா... அவ்வகைக் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தனது பார்வையில் சொல்லியிருக்கிறார் அமுதவாணன். பத்திரிகை முகவராகப் பணியாற்றும் ஆடுகளம் நரேனுக்கு இரண்டு பெண்கள்.தேர்வு எழுதச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பி வருகிறாள் மூத்த மகள். வழியில் அவரது இரு சக்கர வாகனம் நின்றுவிட ரிப்பேரை சரி செய்ய உதவுவதுபோல் நடிக்கும் ஐந்து காமுகர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள் அந்தப் பெண். முகமே தெரியாத அளவுக்கு தீயிட்டு கொழுத்தப்பட்ட அவளது பிரேதம் மட்டுமே போலீசாருக்குக் ...
காலேஜ் ரோடு – திரைப்பட விமர்சனம்

காலேஜ் ரோடு – திரைப்பட விமர்சனம்

Reviews
காலேஜ் ரோடு திரைப்பட விமர்சனம் கல்யாணம் முதல் கருமாதிவரை வணிகமயமாகிவிட்ட சூழலில் கல்வியும் கல்விக்கூடங்களும் விதிவிலக்காகிவிடுமா என்ன? தமிழகத்தின் மிகப்பெரிய பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவராக சேருகிறார் லிங்கேஷ். வங்கிகளின் தரவுகளை திருடமுயற்சிக்கும் மென் பொருளை யாரேனும் பயன்படுத்தினால் அந்த மென்பொருளின் முழுவிவரம் குறித்து லிஙகேஷ் நிறுவிய மென்பாருளுக்கு தகவல் வரும்.... அப்படி ஓர் அகுமையான மென்பொருள் லிங்கேஷ் கண்டுபிடித்திருப்பது... லிங்கேஷ் அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே ஒரு வங்கிக்கொள்ளை நடைபெறுகிறது. நாயகன் லிங்கேஷ்கும் வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், கல்வி எப்படிப் பட்டவர்கள் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது படத்தின் திரைக்கதை. முதன்மை நாயகனா...
டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

Reviews
டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம் கார் டிரைவரான ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்படுகிறரா். இதனால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறார் ஐஸ்வர்யாவின் தாயர். குடும்ப பாரத்தை ஏற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையைப் போலவே கார் டிரைவராக தன் பணியைத் துவக்குகிறார். செல்வாக்கு மிக்க அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய மூன்று பேர் கொண்ட கூலிப்படை ஒன்று செல்லும் கார் வழியில் விபத்துக்குள்ளாகிறது. இதனால் அந்த கொலைகார கும்பல் வாடகைக்காரை வரவழைக்கிறது. அந்த வாடகைக்காரை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டி வருகிறார். கொலைகார கும்பலைப் பற்றிய விவரம் தெரியாமலும், நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாமலும் அவர்களை தன் காரில் ஏற்றிச் செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காசுக்காக கொலை செய்யும் கூலிப்...
விட்னஸ் – திரைவிமர்சனம்

விட்னஸ் – திரைவிமர்சனம்

Reviews
விட்னஸ் - திரைவிமர்சனம்   சாலை நடுவே அமைந்திருக்கும் கழிவு நீர்க்கால்வாயில் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் காட்சியைப் பார்த்து நாம் முகத்தை சுழித்தபடியோ, மூக்கைப் பொத்திக் கொண்டோ கடந்து செல்வதுதான் வழக்கம். அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றிய கதைதான் விட்னஸ். அடுக்கில்ல குடியிருப்பு ஒன்றின் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய செல்லும்போது பார்த்திபன் என்ற தூய்மைப் பணியாளர் தன் உயிரை இழக்கிறார். பார்த்திபனின் தாய் இந்திராணி தன் மகன் இறப்புக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தோழர் ஒருவர் பார்வதிக்கு உறுதுணையாக இருந்து உதவுகிறரா். கட்டிட வடிவமைப்பாளராகப் பணியாற்றும் பார்வதி என்ற இளம் பெண்ணும் இந்த வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்களை இந்திராணியிடம் கொடுப்பத...
மஞ்சக்குருவி – திரை விமர்சனம்

மஞ்சக்குருவி – திரை விமர்சனம்

Reviews
  மஞ்சக்குருவி - திரை விமர்சனம் கோவில் நகரமாம் கும்பகோணத்தில் நடக்கும் கதை. காசு கொடுத்தாலா கை, கால்களை எடுத்து விடுவதையே பிழைப்பாகக் கொண்டவர் கிஷோர். அவரது பெயரைக் கேட்டாலே ஊரே நடுநடுங்கும் வகையில் வைத்திருக்கிறார். அம்மா அப்பா இல்லாத கிஷோருக்கு அன்புத் தங்கை நீரஜாதான் எல்லா உறவும். நீரஜாவை விஷ்வா காதலிக்க, மனதிற்குள் விஷ்வாமீது ஈடுபாடு இருந்தாலும் அவரது காதலை ஏற்க மறுக்கிறார் நீரஜா. காரணம் தன்னுடன் காதல் வசப்பட்ட ஒரே காரணத்துக்காக இளைஞன் ஒருவனை தன் அண்ணன் கொலை செய்துவிட்டதைச் சொல்லி தன்னை மறந்து விடச் சொல்கிறார் நீரஜா. இந்த சூழ்நிலையில் கிஷோரை மற்றொரு கோஷ்டி கொலை செய்ய முயற்சிக்கும்போது, தக்க சமயத்தில் தன் நண்பர்களுடன் வந்து அவரைக் காப்பாற்றுகிறார் கிஷோர். இதற்காக நன்றி தெரிவித்து கிஷோர் கொடுக்கும் பணத்தையும் வாங்க மறுக்கிறார் விஷ்வா. பணத்துக்காக யார் ...
வதந்தி வெப் சீரிஸ் – விமர்சனம்

வதந்தி வெப் சீரிஸ் – விமர்சனம்

Reviews
அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருக்கிறார். பெரும் வரவேற்பைப் பெற்ற சுழல் வெப் சீரிஸைத் தயாரித்த புஷ்கர் காயத்ரி இரட்டையர்கள் தயாரிப்பில் இது உருவாகியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக பிரதான வேடத்தில் நடித்திருக்கும் வெப் சீரிஸ் இது. ஆங்கிலோ இந்தியப் பெண்மணியான வெரோனி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவளைக் கொன்றது யார் கொலைக்கான காரணம் என்ன என்பது எட்டு எபிஸோட்களாக விரிகிறது. வெலோனி தன்னைக் காதலிப்பதாக பொய் சொல்லி பந்தா காட்டித் திரியும் ஓர் இளைஞன், வெலோனியின் விருப்பத்துக்கு மாறாக அவளது அம்மாவின் ஆதரவுடன் அவளைத் திருமணம் செய்யக் காத்திருக்கும் ஓரு குடிகார இளைஞன், சமூக விரோத செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடும் அண்ணன் தம்பிகள் என்று பலரும் காவல்துறை அதிகாரி சூர்யாவின் விசாரணை வளை...
காரி – திரைப்பட விமர்சனம்

காரி – திரைப்பட விமர்சனம்

Reviews
கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிக் கொடி நாட்டிய 'சர்தார்'  படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரித்திருக்கும் படம்தான் காரி. சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ராஜ் கிரண், ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், ஜே டி சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மலையாளப் படங்களில் நடித்து வரும் பார்வதி அருண் கதாயாகி வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களுக்கிடையே பொதுவாக உள்ள கோவிலை யார் நிர்வகிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இரண்டு ஊர்காரர்களும் ஜல்லிக் கட்டு போட்டியை நடத்தி வெற்றி பெறும் அணியைச் சேர்ந்த ஊருக்கு கோவில் நிர்வாகத்தை ஒப்படைப்பது என முடிவு செய்கின்றனர். ஒரு ஊர்க்காரர்...
பேட்டைக் காளி வலைத் தொடர் விமர்சனம்

பேட்டைக் காளி வலைத் தொடர் விமர்சனம்

Reviews
பேட்டைக் காளி வலைத் தொடர் விமர்சனம் இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமாரின் இயக்கத்தில் வலைத் தொடராக மலர்ந்திருக்கிறது பேட்டைக் காளி. பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நாம் பார்த்துப் பழகிய வேல ராமமூர்த்தி பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இத்தொடரில் கலையரசன், கிஷோர், ஷீலா ராஜ்குமார் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்திருக்கும் ஜல்லிக் கட்டுதான் இத்தொடரின் அடிநாதம். பண்ணையார் செல்வசேகரன் வேடத்தில் படு கெத்தாக நடித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி. தன் வளர்ப்பு மாட்டை ஜல்லிக்கட்டில் யாராவது பிடித்து விட்டாலே தன் செல்வாக்கு சரித்து விடும் என்று நினைக்கும் செல்வசேகரன் தன் மகனுக்குகூட தன்னுடன் சேர்த்து பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யக்கூடாது என்று மறுக்கும் மமதை மிக்கவர். இதன் காரணமாக பெற்ற மகனே தந்தையின்...

கலகத் தலைவன் – விமர்சனம்

Reviews
கலகத் தலைவன் - விமர்சனம் வித்தியாசமான கதையை கையிலெடுத்து அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் திரைப்படம் எடுப்பதில் விற்பன்னர் மகிழ் திருமேனி. அந்த வகையில் கலகத் தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் துணையோடு தனக்கேயுரிய தனி பாணியில் முத்திரை பதித்து வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். கலகத் தலைவன் படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரமான நிஜமுகத்தையும், லாபவெறியில் அவை எந்த அளவுக்கு கீழிறங்கி கொடூர செயல்களைச் செய்யும் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர். உதயநிதி பணியாற்றும் வஜ்ரா என்ற நிறுவனம் பல்வேறு தொழில்களிலும் வேரூன்றி, அரசின் ஆதரவுடன் ராட்சத வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில் புதிதாக கனரக வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வாககனம் எரிபொருள் செலவை பாதியாக குறைக்கும் என்ற அறிவிப்பை வஜ்ரா நிறுவனர் வெளியிட எதிர்பார்ப்ப...