Tuesday, January 20

சாரா_ விமர்சனம்

Loading

சாரா_ விமர்சனம்

தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிவாற்றி வருகிறார் நாயகி சாக்‌ஷி.

அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய் விஸ்வாவுடன் இரண்டு நாட்களில் சாக்ஷிக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது அபசகுணமாக சில தடங்கல்கள் ஏற்பட்டு, குடும்பத்தாரை சங்கடத்துக்குள்ளாக்குகிறது.

சாக்ஷி பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் மிரட்டல் செல்வா, சில முறைகேடுகளில் ஈடுபடுகிறார்.

சாக்ஷிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மிரட்டல் செல்வா அந்த நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் ரோபோ சங்கரிடம் சாக்‌ஷியை கொலை செய்யும்படி கூறுகிறார்.

இதே நிறுவனத்தில் யோகி பாபு, தங்கதுரை, மற்றும் செல்லக்குட்டி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிப் பருவத்தில் சாக்‌ஷியும் செல்ல குட்டியும் நெருக்கமான நண்பர்களாக பழகியிருக்கின்றனர்.

சாக்க்ஷிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது தெரியாமலேயே அவரை மணந்து கொள்ள ஆசைப்படும் செல்லக்குட்டி, திடீரென அவரை கடத்த முயற்சி செய்கிறார்.

சாக்ஷி விஜய் விஸ்வா திருமணம் நடந்ததா?
செல்லக்குட்டியின் ஒரு தலை காதல் என்னவானது? என்பதே சாரா படத்தின் கதை.

சாரா படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் செல்லக்குட்டிதான் பிரதான பாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார்.

நடிப்பில் இவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

அழகு தேவதையாக வரும் சாக்‌ஷி,படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.

ரோபோ சங்கர் மற்றும் தங்கதுரையில் நகைச்சுவை காட்சிகள்தான் படத்துக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது.

சாதாரண கதையைக் கூட அருமையான திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான படமாக உருவாக்கி இருக்க முடியும்.
ஆனால் இயக்குனர் ஏனோ அதை செய்ய தவறி விட்டார்.