Thursday, November 26

Blog

ரேகை _ விமர்சனம்

ரேகை _ விமர்சனம்

Reviews
ரேகை _ விமர்சனம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கதை ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர்தான் ரேகை. ஜீ 5 தமிழில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் சீரிசை சிங்காரவேலன் தயாரிக்க, தினகரன் இயக்கியிருக்கிறார். சப் இன்ஸ்பெக்டர் பால ஹாசனும் அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் பெண் காவலர் பவித்ரா ஜனனியும் முன்னாள் காதலர்கள். தற்போது இருவருக்கும் பிரேக் அப் ஆகி, பவித்ராவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆயினும் தங்கள் பணியில் இருவருமே மிக நேர்மையாக இணைந்து கடமையாற்றுகின்றனர். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆக பணியாற்றிய ஒரு மாணவன் மீது மிகவும் அன்பு கொண்டு அவன்  படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார் பால ஹாசன். இந்த சூழ்நிலையில் அந்த மாணவன் தங்கியிருந்த ஹாஸ்டலில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வரவே புலன் விசாரணையில் இறங்குகிறார் பால ஹாசன். அதேசமயம் வே...
‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி!

‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி!

News
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது ! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான ஆக்சன் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் விருத்தி சினிமாஸ் சார்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பிரமாண்டமாக வழங்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். தற்போது ராம் சரண் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்க ஒரு முக்கியமான, அதிரடி நிறைந்த ஃபைட் சீன் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ...
ரஜினி கேங்_ விமர்சனம்

ரஜினி கேங்_ விமர்சனம்

Reviews
ரஜினி கேங்_ விமர்சனம் ஞாபக மறதிக்காரரான கதையின் நாயகனான ரவி கிஷன் நிகழ்ச்சிகளுக்கு ஆடியோ ஏற்பாடு செய்யும் ஆடியோ செட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தன் காதலி திவிவிகாவுடன் இரவு ஊரை விட்டு ஓடிப்போகும் திட்டத்தில் இருக்கும் தினத்தன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த  திட்டத்தையே மறந்து விடுகிறார். திவிவிகா போன் செய்து நினைவூட்டும்போது,  தான் மைக் முன்னால் நின்று கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து போனில் காதலியுடன் பேசுவது ஊர் முழுக்க கேட்கிறது. காதலர்கள் இருவரையும் ஊரார் துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க முனிஷ்காந்த் ஓட்டி வரும் காரில் காதலர்கள் ஏறி கொள்கின்றனர். சற்று தூரம் சென்றதும் ஒரு கொள்ளை சம்பவத்தை நடத்திவிட்டு நகைகளுடன் வரும் திருடன் கல்கியும் அந்த காரில் லிப்ட் கேட்டு ஏறி கொள்கிறார். கார் சேலத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க, தா...
ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம்

Reviews
ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம் ஊரையே நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய ரவுடி சூப்பர் சுப்பராயனை, முன் பகை காரணமாக ஆந்திராவில் உள்ள ரவுடி அஜய் கோஷ் திட்டமிட்டு அதற்காக கூலிக்கு கொலை செய்யும் கல்யாண் மாஸ்டரை ஏற்பாடு செய்கிறார். ஒரு நாள் பெண் சுகம் தேடி சென்ற சூப்பர் சுப்பராயன் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். நிறை போதையில் நிற்கும் சூப்பர் சுப்பராயன், கீர்த்தி சுரேஷின் தாயார் ராதிகாவால் தாக்கப்பட்டு இறந்து போகிறார். சூப்பர் சுப்பராயன் இறந்ததை தெரிந்து கொண்ட ஒரு குழு பிணத்தைக் கைப்பற்றி அஜய் கோஷிடம் பணம் பெற துடிக்கிறது. வீட்டில் கிடக்கும் பிணத்தை அப்புறப்படுத்த கீர்த்தி சுரேஷ் தன் தாயார் ராதிகா மற்றும் இரு சகோதரிகளுடன் முயற்சி செய்கிறார். இதற்காகவே ஒரு காரை வாங்கி பிணத்தை ஆள் அரவமற்ற மறைவான இடத்தில் கொண்டு போய் போட்டு விட திட்டமிடுகின்றனர். இதற்கிடையில்...
பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில்  படமாக்கப்பட்ட ‘அனலி’ திரைப்படம்!

பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில்  படமாக்கப்பட்ட ‘அனலி’ திரைப்படம்!

News
சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் பிரமாண்ட தயாரிப்பில் சிந்தியா லூர்டே நடிப்பில் உருவாகியுள்ள அனலி! *இயக்குனர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு வெளியிட்ட "அனலி" ஃபர்ஸ்ட் லுக்* சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "அனலி". இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை  தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த  இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் டாடா, கராத்தே பாபு படங்களின் இயக்குனர் திரு.கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் தினேஷ் தீனா அனலி படத்தை பற்றி கூறியதாவது, "இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் ...
வெள்ளக் குதிர _ விமர்சனம்

வெள்ளக் குதிர _ விமர்சனம்

Reviews
வெள்ளக் குதிர _ விமர்சனம் தவறான வாழ்க்கை வாழும் கதாநாயகன் ஹரிஷ் ஓரி,  ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்க,  தன் மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனோடு அடைக்கலம் வேண்டி மலை கிராமம் ஒன்றுக்கு செல்கிறார். "இனி எந்த தவறும் செய்ய மாட்டேன்... திருந்தி வாழ்வேன்..." என்று மகன் தலையில் சத்தியம் செய்து சொல்கிறார் ஹரிஷ். முன்னோர்கள் வசித்து வந்தபோது 400க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த அந்த மலை கிராமத்தில் தற்போது மிகச் சில வீடுகளே இருக்கின்றன. படிப்பறிவு இல்லாத அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, சொற்ப தொகை கொடுத்து அவர்களது நிலத்தை எழுதி வாங்கிக் கொள்கிறார் முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போதுள்ள பெண் ஊராட்சி தலைவரும் படிப்பறிவு இல்லாதவர் என்பதால் பெயருக்கு மட்டும் ரப்பர் ஸ்டாம்ப்போல் அவரை வைத்துக் கொண்டு தானே மறைமுக ஊராட்சி தலைவர் போல் செயல்படுகிறார் முன்னாள் ஊராட்சி தலைவர். அரசாங்கத்திலிருந்து வரு...
துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

News
துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்  இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர் ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந...
Gautham Ram Karthik Wraps Dubbing for “ROOT”

Gautham Ram Karthik Wraps Dubbing for “ROOT”

News
Verus Productions presents Gautham Ram Karthik Wraps Dubbing for “ROOT” Verus Productions is happy to announce that Hero Gautham Ram Karthik has successfully completed dubbing for his portions in the much-awaited Sci-Fi Crime Thriller “ROOT – Running Out of Time.” This marks a significant milestone in the film’s post-production journey. “ROOT,” written and directed by Sooriyaprathap S, features a powerful ensemble cast including Bollywood actor Aparshakti Khurana in his Tamil debut, along with Bhavya Trikha, Y. Gee. Mahendra, Pavni Reddy, Linga, RJ Anandhi, and others. The film delves into an intriguing sci-fi concept intricately woven with deep emotional layers. Extensively shot across Chennai and other key locations, the film is progressing steadily and is now moving closer to co...
கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”!

கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”!

News
கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் "ரோஜா மல்லி கனகாம்பரம்"படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் ...
பிபி 180_ விமர்சனம்

பிபி 180_ விமர்சனம்

Reviews
பிபி 180_ விமர்சனம் மீனவ சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதுடன், மதிப்பிற்குரியவராகவும் வலம் வரும் பாக்கியராஜின் மகள் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து போகிறார். பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரேதத்தை போஸ்ட் மார்டம் செய்யாமல் தன்னிடம் கொடுத்து விடும்படி பாக்யராஜ் கேட்க, அதற்கு அரசு மருத்துவரான தன்யா ரவிச்சந்திரன் "கொலை தற்கொலை விபத்து ஆகியவற்றில் இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் கொடுக்க முடியும்" என்று சொல்லி மறுத்துவிடுகிறார். கொலை பாதக செயல்களுக்கு அஞ்சாத தாதா டேனியல் பாலாஜியின் உதவியை பாக்கியராஜ் நாட, அவரது மிரட்டலுக்கும் அடிபணியாத தன்யா பிரேத பரிசோதனை செய்து விடுகிறார். அந்தப் பிரேத பரிசோதனையில் இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியும் பாக்கியராஜுக்கு தெரிய வருகிறது. டேனியல் பாலாஜி தன்னை போனில் மிரட்டுவதை பதிவு செய்து அதை போலீசுக்கு புகாராகவும் கொ...
CLOSE
CLOSE