Wednesday, November 18

Reviews

கீனோ _ விமர்சனம்

கீனோ _ விமர்சனம்

Reviews
  கீனோ_ விமர்சனம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தம்பதியரான மகாதாரா பகவத் மற்றும் ரேணுகா சதீஷின் மகன் கந்தர்வா. பதின் பருவத்தில் நிற்கும் கந்தர்வாவுக்கு அடிக்கடி கருப்பு உடை அணிந்த ஓர் உருவம் தோன்றி "நான்தான் கீனோ... என்னுடன் வந்துவிடு... "என்று அழைத்து பயமுறுத்துகிறது. வீட்டில்தான் இந்தத் தொந்தரவு என்று பார்த்தால் சாலையில் தனியாக இருக்கும் காலி இடத்தை கண்டாலே அந்த உருவம் தோன்றி கந்தர்வாவை பயமுறுத்துவதும், தன்னிடம் வா என்று அழைப்பதுமாக இருக்கிறது. ஏதேனும் துஷ்ட சக்தியாக இருக்கலாம் என்று நினைத்து சாமியார்கள் சிலரை அழைத்து வந்து இந்த அமானுஷ்யத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் அப்பா பகவத். இதற்குக் காரணம் தீய சக்திகள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தாலும் கீனோ என்பது யார் அல்லது என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாமலே இருக்கிறது. யார் இந்த கீனோ? இதன் நோக்கம் என்ன? கந்தர்வாவின் கதி என்ன ஆகிறது ...
என் காதலே _ விமர்சனம்

என் காதலே _ விமர்சனம்

Reviews
சிறு வயதிலேயே தன் தாய் தந்தையரை இழந்துவிட்ட லிங்கேஷ், மாமன் மதுசூதனன் ஆதரவில் வளர்ந்து மீன்பிடித் தொழிலை செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஒன்றாக லிங்கேஷுடன் வளர்ந்து வரும் மதுசூதனின் மகள் திவ்யா தன் மாமன் லிங்கேசன்தான் தனது உலகம் என்று நினைத்து வாழ்ந்து வருகிறார். மாமன் மீது அளவு கடந்த காதலை வைத்து இருக்கிறார் திவ்யா. தமிழக கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு குழுவினருக்கு கிராமத்தை சுற்றி காட்டுவது, ஆட்களுடன் கலந்துரையாட செய்வது என்ற பொறுப்பை லிங்கேசுக்கு வழங்குகிறார் மதுசூதனன். வெளிநாட்டில் இருந்து வரும் குழுவில் இருக்கும் நீ லியாவ என்ற பெண்ணும் லிங்கேஷும் ஆரம்பத்தில் சாதாரணமாக பழகினாலும் பின்னர் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்து, ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மாமன் லிங்கேஷை மணந்து கொண்டு மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கலாம் என்று க...
ஹிட் 3 _ விமர்சனம்

ஹிட் 3 _ விமர்சனம்

Reviews
ஹிட் 3 _ விமர்சனம் போலீஸ் அதிகாரியான நானி கொடூரமாக ஒரு கொலை செய்வதுடன் அதை வீடியோவாகவும் எடுக்கிறார் என்று ஹிட் படம் துவங்கும் போது ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இழுத்து வந்து விடுகிறது. அடுத்ததாக மீண்டும் ஒரு கொலையை இதே பாணியில் நானி செய்யும்போது அதை மற்றொரு பெண் போலீஸ் அதிகாரி பார்த்து விடுகிறார். இப்படி தொடர்ந்து வரும் பரபரப்பான காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை மேலும் மேலும் கூட்டுகின்றன.  இந்த இரண்டு கொலைகளையும் நான் ஏன் செய்தார் என்று தெரிய வரும்போது அதிர்ச்சியும் பரபரப்பும் இன்னும் அதிகரிக்கிறது. பிளாக் வேர்ல்ட் எனப்படும் கருப்பு உலகத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர்கலை கூண்டோடு பிடிக்கவே நானி இந்தக் கொலைகளை செய்து அவர்களுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார். பின்னர் அந்தக் குழுவுக்குள் நுழைகிறார். பிளாக் வேர்ல்ட் சீரியல் கில்லர்களின் தலைவன் நானி போலீஸ் அதிகாரி என்பதை கண்டுபிடி...
டூரிஸ்ட் பேமிலி _ விமர்சனம்

டூரிஸ்ட் பேமிலி _ விமர்சனம்

Reviews
டூரிஸ்ட் பேமிலி _ விமர்சனம் இலங்கையில் வசிக்கும் சசிகுமார்,  அங்குள்ள பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தன் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்கு படகில் வருகிறார். சிம்ரனின் அண்ணன் யோகி பாபு,  சசிகுமார் குடும்பத்தை சென்னையில் உள்ள இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டில் வாடகைக்கு குடியமர்த்துகிறார். தங்கள் குடும்பம் கேரளாவிலிருந்து வந்திருப்பதாக பொய் சொல்லி சசிகுமார் குடும்பம் அங்கு குடியேறுகிறது. சசிகுமாரின் மூத்த மகன் மிதுன் ஜெய்சங்கர் என்ன காரணத்தாலோ தன் அப்பாவுடன் முகம் கொடுத்து பேசாதது மட்டுமின்றி அவ்வப்போது கோபப்படுவதுடன் எரிந்தும் விழுவதுமாக இருக்கிறார். சசிகுமார் எதிர் வீட்டில் வசிக்கும் எம் எஸ் பாஸ்கரிடம் கார் டிரைவராக சேர்வதுடன் தன் இயல்பான குணத்தால் அந்த காலனியில் உள்ள எல்லா குடும்பங்களிடமும் நன்றாக பழகி நல்ல உறவை வளர்த்துக் கொள்கிறார். ராமேஸ்வரத்த...
ரெட்ரோ_ விமர்சனம்

ரெட்ரோ_ விமர்சனம்

Reviews
ரெட்ரோ_ விமர்சனம் தாய் தந்தையை இழந்த சூர்யாவை சிறுவயதிலிருந்தே வளர்த்து வருகிறார்  ஜோஜூ ஜார்ஜ். குழந்தைப் பருவத்திலிருந்தே  சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல், சிரிக்கத் தெரியாதவனாக வளர்ந்து வாலிபன் ஆகிறார் சூர்யா. தாதாவாக வலம் வரும் ஜோஜூ ஜார்ஜ் தனது அடியாட்களில் ஒருவராகவே சூர்யாவை கருதுகிறார். தான் காதலிக்கும் பூஜா ஹெக்டேவை திருமணம் செய்ய  முடிவெடுக்கும் சூர்யா,  அதன் பிறகு அடிதடி சண்டைகளை விட்டொழிக்க நினைக்கிறார். ஆனால் சூர்யாவின் திருமண தினத்தன்று தங்கமீன் தொடர்பான பிரச்சனையில் ஜோஜூ ஜார்ஜுக்கும் சூர்யாவிற்கும் மோதல் வெடிக்கிறது. இந்த மோதலில் ஜோஜூ ஜார்ஜின் கையை வெட்டி விடுகிறார் சூர்யா. திருமணம் தடைபட,  சிறைக்குச் செல்ல நேரிடுகிறது சூர்யா. சில வருடங்களுக்குப் பிறகு பூஜா ஹெக்டே அந்தமானில் இருப்பது தெரியவர, ்ஒரு கடத்தல் கும்பலின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பி அந்தமான் செ...
நாங்கள்_ விமர்சனம்

நாங்கள்_ விமர்சனம்

Reviews
நாங்கள்_ விமர்சனம் தாயைப் பிரிந்து தந்தையுடன் வசிக்கும் மூன்று டீன் ஏஜ் சிறுவர்களின் கதைதான் நாங்கள். தந்தை மிக மிக கண்டிப்பு காட்டுபவர். கண்டிப்பு என்றால் மிக மிகக் கடுமையான கண்டிப்பு. சில சமயங்களில் இவர் என்ன சைக்கோவா என்று நினைக்கத் தோன்றும் வகையில் நடந்து கொள்பவர். கிட்டத்தட்ட அடிமைகள் போலவே தன் மூன்று மகன்களையும் நடத்துகிறார் அந்த தந்தை. அப்பா இல்லாத போது மகிழ்ச்சி ஆட்டம் போடும் சிறுவர்கள் அப்பா வரும் அரவம் கேட்டதுமே அப்படியே மாறி பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள். ஊட்டியில் தந்தை நடத்தி வரும் தனியார் பள்ளியிலேயே மகன்கள் மூவரும் படிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தந்தையின் அராஜகம் பொறுக்க முடியாமல் தாய் வீட்டுக்கு செல்கின்றனர் மூவரும். தாயாரின் அப்பா அதாவது இவர்களுடைய தாத்தா மூவரையும் வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் சில பொருளாதாரப் பிரச்சினைகளால் அந்தப் ப...
டென் ஹவர்ஸ் _ விமர்சனம்

டென் ஹவர்ஸ் _ விமர்சனம்

Reviews
டென் ஹவர்ஸ் _ விமர்சனம் ஆத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ், சபரிமலைக்கு விரதம் இருந்து புறப்படும் நாளன்று ஒரு பெண்ணை காணவில்லை என்று புகார் வருகிறது. காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் சிபிராஜ். அந்த இரவு 10 மணி நேரத்தில் ஓடும் பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? குற்றவாளியை சிபிராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் டென் ஹவர்ஸ் படத்தின் கதை. நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு புலன் விசாரணையை துவங்கும் இன்ஸ்பெக்டர் சிபிராஜின் மிடுக்கு, கம்பீரம் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு கணம் சேர்க்கிறது. மொத்த படம் முழுவதும் சிபிராஜின் ஆட்சி தான். சிபிராஜுடன் வரும் சப்-இன்ஸ்பெக்டர் கஜராஜ் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று சொன்னால் மிகையாகாது.தன் பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்து கவ...
அம்…ஆ விமர்சனம்

அம்…ஆ விமர்சனம்

Reviews
அம்...ஆ விமர்சனம் இயற்கை எழில் கொஞ்சும் அழகான கேரள மலைப்பகுதி ஒன்றில் தேவதர்ஷினி குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தக் குழந்தையுடன் யாராவது பேச்சு கொடுத்தாலோ, நெருக்கம் காட்ட முயன்றாலோ தேவதர்ஷினிக்கு சற்றும் பிடிப்பதில்லை. அந்த கிராமத்துக்கு தார் ரோடு போடுவதற்காக வரும் திலீஷ் போத்தனுக்கு தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்வது உதவுகிறார் கிராம பஞ்சாயத்து மெம்பர். திலீப் போத்தேன் ஒருமுறை தேவதர்ஷினியுடன் பேச வரும்போது அவர் பதற்றமடைந்து மிகவும் பயப்படுகிறார். தேவதர்ஷினியின் இந்த பயத்திற்கும் பதற்றத்துக்கும் காரணம் என்ன? குழந்தையுடன் மற்ற யாரும் நெருங்காமல் பார்த்துக் கொள்ள தேவதர்ஷிணிக்கு என்ன அவசியம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது அம்மா...ஆ திரைப்படம். வாடகைத்தாய் என்ற கருப்பொருளை வைத்து இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சென்டிமென்ட் கலந்த அழுத்தமான கதையுடன், பலமான திரைக்கதை அமைத்த...
குட் பேட் அக்லி _ விமர்சனம்

குட் பேட் அக்லி _ விமர்சனம்

Reviews
குட் பேட் அக்லி _ விமர்சனம் அஜித் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்லிவிடலாம். பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை கலக்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய டானாக திகழ்ந்திருக்கிறார் ஏ கே என்ற அஜித் குமார். மனைவி திரிஷாவுக்கு குழந்தை பிறந்த போது அதை பார்க்க ஆவலுடன் சென்ற அஜித்துக்கு தடை விதிக்கிறார் திரிஷா. டான் வாழ்க்கையின் கருப்பு நிழல் தன் மகன் மீது விழக்கூடாது என உறுதியாக த்ரிஷா சொல்ல, போலீசில் சரணடைந்து சிறைச்சாலைக்கு செல்கிறார் அஜித். அஜித் ஒரு பிஸ்னஸ் மேன் என்று சொல்லி ஸ்பெயின் நாட்டில் தன் மகனை வளர்த்து வருகிறார் த்ரிஷா . செல்வாக்கு மிக்கவரான அஜித், சிறைச்சாலையில் இருந்தபடியே வீடியோ காலில் அவ்வப்போது மகனுடன் பேசுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகி மகனை காண ஸ்பெயின் செல்லும்...

இ எம் ஐ _ விமர்சனம்

Reviews
இ எம் ஐ _ விமர்சனம் பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல பொருட்களை தவணை முறையில் வாங்கி அவற்றுக்கு ஈ எம் ஐ கட்ட முடியாமல் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறை பற்றிய கதை இஎம்ஐ. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலிக்கிறான். காதலிக்கும் பெண்ணிடம் தன் இமேஜை உயர்த்திக்கொள்ள கடனில் பைக் வாங்கி வலம் வருகிறான். திடீரென எதிர்பாராமல் அவனது வேலை பறிபோகிறது. வருமானம் இல்லாத காரணத்தால் பைக்குக்கான இ எம் ஐ யை கட்ட முடியாத நிலை. கடன் கொடுத்த பைனான்சியர் பைக்கை பறிமுதல் செய்கிறார். இதற்குப் பிறகாவது அந்த இளைஞன் திருந்தினானா என்றால் அதுதான் கிடையாது. காதலித்த பெண்ணை மணந்து கொண்டால் சந்தோஷமாக வாழ்வதற்கு கார் ஒன்றையும் தவணை முறையில் வாங்கி விடுகிறான். காருக்கான இஎம்ஐ கட்ட முடியாமல் மீண்டும் அவதி ஆரம்பமாகிறது. பல்வேறு அவமானங்களை சந்திக்கிறான். இவனது நடவடி...