Thursday, November 12

Reviews

வீர தீர சூரன் பார்ட் 2 _ விமர்சனம்

வீர தீர சூரன் பார்ட் 2 _ விமர்சனம்

Reviews
வீர தீர சூரன் 2விமர்சனம் ஒரு நல்ல திரைப்படம் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை தன்னுள் இழுத்துக்கொண்டு படத்தின் கடைசி காட்சி வரை ஒன்ற வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் பார்த்தால் வீரதீர சூரன் பார்வையாளர்களை கட்டிப்போட்டு படம் பார்க்க வைத்திருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். பெரியவர் என்றழைக்கப்படும் மாருதி பிரகாஷ் ராஜும், அவரது மகன் சூரஜ் வெஞ்சரமூடும் மதுரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தாதாவாக வலம் வருகின்றனர். அந்த ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் அதிகாரி எஸ் ஜே சூர்யா இருவரையும் என்கவுண்டரில் போட்டு தள்ள திட்டமிடுகிறார். அதற்கேற்றவகையில் சந்தர்ப்பம் ஒன்றும் அமைகிறது. இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பழைய விசுவாசி விக்ரம் உதவியை நாடுகின்றனர். தற்போது அடிதடி வம்புகளுக்கெல்லாம் போகாத விக்ரம் மளிகை கடை ஒன்றை நடத்திக் கொண்டு, மனைவி மக்களுடன் வசித்து வருகிறார். ...
டோர் _ விமர்சனம்

டோர் _ விமர்சனம்

Reviews
டோர் _ விமர்சனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்க வந்திருக்கும் பாவனா டோர் படத்தின் மூலம் மிகச் சிறந்த கம் பேக் கொடுத்திருக்கிறார். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள அழுத்தமான பாத்திரம் என்பதால் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார் பாவனா. கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்காக பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் போது, அதில் உள்ள கோவிலையும் அகற்ற நேரிடுகிறது. இதைத்தொடர்ந்து மதுரையில் வசிக்கும் பாவனாவின் தந்தை பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைகிறார். அந்த கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திலும் தொடர் மரணங்கள் ஏற்படுகின்றன. பாவனாவும் அவரது தோழியும் தங்கியிருக்கும் வீட்டிலும் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. பாவனாவின் தோழி காரணமே இல்லாமல், திடீரென்று சுவரில் தன் நெற்றியை மோதிக்கொண்டு காயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பாவனாவ...

அறம் செய் _ விமர்சனம்

Reviews
அறம் செய் _ விமர்சனம் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறது அரசாங்கம். இதை எதிர்க்கும் மாணவ மாணவிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த தொடங்குகிறார் பாலு எஸ்.வைத்தியநாதன். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு ஆட்சி மாற்றம் அல்ல... அதிகார மாற்றம் மட்டுமே என்ற தீர்க்கமான முடிவுடன் 'அறம் செய்' என்ற அமைப்பின் கீழ் அஞ்சனா கீர்த்தி ஒரு குழுவினருடன் போராட்டத்தை துவக்குகிறார். இந்த இரண்டு வகை போராட்டங்களும் இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று அரசுடைமை ஆக்கப்படுவதும், பின்னர் நடைபெறும் ஆட்சி மாற்றத்தால் அது மீண்டும் தனியாருக்கே செல்வதும் சில காலத்திற்கு முன்பு நாம் பார்த்த சம்பவங்கள் தான். இது போன்ற சம்பவங்கள் மட்டுமின்றி வசனங்கள் பலவும் சமகால அரசியலை நினைவூட்டுகின்றன. உதாரணத்திற்கு...

ட்ராமா _ விமர்சனம்

Reviews
ட்ராமா _ விமர்சனம் நாடெங்கும் புற்றிசல் போல் பல்கிப் பெருகி இருக்கும் 'கரு'த்தரிப்பு மையங்களை 'கரு'வாகக் கொண்ட கதை இது. விவேக் பிரசன்னா சாந்தினி தமிழரசன் தம்பதியினர் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு தேடி ஒரு கருத்தரிப்பு மையத்தை அனுகுகின்றனர். சில நாட்களில் சாந்தினி கர்ப்பமடைகிறார். இனியாவது அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக கடந்ததா என்றால் அதுதான் இல்லை. இதே காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுனராக வரும் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா ரவியை காதலிக்கிறார் பிரதோஷ். காதலர்கள் இருவரும் சற்றே அத்துமீறவே பூரணிமா கர்ப்பம் அடைகிறார்.இந்த சூழலில் பிரதோஷ் கொல்லப்படுகிறார். கருத்தரிக்காமல் கவலையில் வாழும் மனைவி, மற்றும் கணவனே இல்லாமல் கருத்தரித்த பெண்ணைப் பற்றிய கதை இது. கதையின் நாயகன் பாத்திரத்தில் வரும் பிரசன்னா நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். அவருக்கு இணையாக வரும் சாந்தினி தமிழரசனும் முதிர்ச்சி...
விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

News, Reviews
மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்...
ஸ்வீட் ஹார்ட் _ விமர்சனம்

ஸ்வீட் ஹார்ட் _ விமர்சனம்

Reviews
ஸ்வீட் ஹார்ட் _ விமர்சனம் சிறு வயதில் தன் தந்தையை விட்டுவிட்டு தன்னுடைய தாயார் வேறொருவருடன் வாழ சென்று விட்டதை கண் முன் பார்த்த சிறுவன் ரியோ, வளர்ந்த பிறகு குடும்பம் குழந்தைகள் உறவுகள் என பலவற்றிலும் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். ரியோ ராஜும் கோபிகா ரமேஷும் காதலிக்கிறார்கள். தேவையின்றி திருமணத்தை தள்ளிப் போடுவதாக நினைக்கும் ரியாவை பிரிவதற்கு முடிவு செய்கிறார் கோபிகா. இருவரும் பிரிந்த ஓரிரு மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பது கோபிகாவுக்கு தெரிய வருகிறது. கர்ப்பத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன. குழந்தை வேண்டாம் என்பது ரியோவின் நிலைப்பாடு. குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் கோபிகா. இறுதியில் நடந்தது என்ன என்பதை இக்கால இளைய சமுதாயத்திடம் ஏற்படும் பிரச்சனைகளை தொட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார். யார் யாரோ தயாரிக்கும்...

City of dteams _ ஆங்கிலப்பட விமர்சனம்

Reviews
Cast: Ari Lopez, Renata Vaca, Alfredo Castro, Paulina Gaitán, Jason Patric, Diego Calva Directed By : Mohit Ramchandani Music By : Lisa Gerrard Produced By : Rufus Parker City of dteams _ ஆங்கிலப்பட விமர்சனம் அமெரிக்கா என்றதும் அந்த நாட்டின் செல்வ செழிப்பும், வளமான வாழ்க்கையும்தான் நினைவுக்கு வரும். பூலோக சொர்க்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஆங்கில படம். 14 வயது சிறுவன் ஆரி லோபஸ் கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறான். ஆனால் அந்தக் கனவு எப்படி சிதைக்கப்பட்டு, அவன் வாழ்க்கை சின்னாபின்னம் ஆகிறது என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லும் படம் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ். சிறுவன் ஆரி லோபஸ் ஹியூமன் ட்ராபிக்கிங் கும்பலால் அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படுகிறான். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்...

வருணன் _ விமர்சனம்

Reviews
வருணன் விமர்சனம் ராதாரவி சரண்ராஜ் துஷ்யன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் வருணன். வடசென்னையை மையப்படுத்தி பல அடிதடி கதைகள் வந்திருக்கின்றன என்றாலும் வருணன் படம் அவற்றில் இருந்து சற்றே மாறுபட்டு வடசென்னையில் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் இரண்டு பெரிய குழுக்களை பற்றிய கதையாக அமைந்திருக்கிறது. ராதாரவியும் சரண்ராஜும் வடசென்னை பகுதியில் ஆட்களை வைத்து வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே போட்டி என்று இருந்தாலும் அது எல்லை மீறாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இருவரிடமும் பணியாற்றும் இளைஞர்கள் அடிக்கடி பல்லை கடித்துக்கொண்டு மல்லு கட்டி நிற்கின்றனர். சரண் ராஜின் மனைவி தனது தம்பியின் துணையுடன் சட்ட விரோதமாக சுண்டக் கஞ்சி காய்ச்சி அதை விற்பனைக்கு அனுப்ப முயலுகிறார். இதை மோப்பம் பிடித்து விடும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சரண்ராஜை கையும் ...
நிறம் மாறும் உலகில் _ விமர்சனம்

நிறம் மாறும் உலகில் _ விமர்சனம்

Reviews
நிறம் மாறும் உலகில் _ விமர்சனம் கண்டிப்பு மிக்க தாய் விஜி சந்திரசேகரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் மகள் லவ்லின். தோழியின் வீட்டில் தங்குவதற்காக ரயிலில் புறப்படுகிறார் லவ்லின். டிக்கெட் பரிசோதகராக ரயிலில் வரும் யோகி பாபு, லவ்லின் மூட் அவுட் ஆகி இருப்பதை பார்த்து மெதுவாக அவருடன் பேச்சு கொடுத்து, தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வந்ததை அறிந்து கொள்கிறார். பெற்ற தாய் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தான் அறிந்த சில கதைகளை சொல்லி லவ்லினுக்கு புரிய வைக்கிறார் யோகி பாபு. தமிழ்நாட்டில் இருந்து மும்பை சென்று மிகப் பெரிய தாதாவாக உருவெடுத்த நட்டி, சிறுவயதில் தன் தாய் பாலியல் தொழில் செய்து தன்னை வளர்த்ததை மறக்க முடியாமல், தற்போது பாலியல் தொழிலாளியிடமே தாய் அன்பை தேடுகிறார். இது முதல் கதை. இரண்டாவது கதை மீனவர் ரியோவைப் பற்றியது. தந்தை இழந்த ரியோவை கஷ்டப்பட்டு படிக்க...
கிங்ஸ்டன் _ விமர்சனம்

கிங்ஸ்டன் _ விமர்சனம்

Reviews
கிங்ஸ்டன் _ விமர்சனம் ஜிவி பிரகாஷின் 25 ஆவது படமாக மலர்ந்திருக்கிறது கிங்ஸ்டன். படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்று படத்தையும் தயாரித்து இருக்கிறார் ஜீவி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் சிறிது காலமாக அவர்களால் கடலுக்குச் சென்று மீன் பிடி தொழிலை செய்ய முடியவில்லை. காரணம் கடலுக்குள் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பிரேதத்தின் ஆத்மா கடல் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு மீன் பிடிக்க வரும் மீனவர்களை கொன்று விடுவதாக மீனவ மக்களே நம்புகிறார்கள். இந்த துஷ்ட ஆவியின் அட்டகாசங்கள் சுமார் 40 ஆண்டுகளாக நீடிக்கின்றன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த இளைஞர்கள் கடல் அட்டையை கடத்தும் தொழிலில் ஈடுபடுகின்றனர். கிங்ஸ்டன் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், கிங் என்று எல்லோராலும் அழைக்கப்...