Tuesday, October 6

Reviews

காந்தி டாக்ஸ்_ விமர்சனம்

காந்தி டாக்ஸ்_ விமர்சனம்

Reviews
காந்தி டாக்ஸ்_ விமர்சனம் நட்சத்திரங்கள்: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஒளிப்பதிவு: கரண் பி. ராவத் இசை: ஏ ஆர் ரகுமான் எழுத்து இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலேகர் தன் வயது முதிர்ந்த தாயுடன் மும்பையில்   வசிக்கிறார் விஜய் சேதுபதி. உடல்நிலை சரியில்லாத தாயாரை  குடியிருப்பு பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு தூக்கிச் சென்றுதான் காலைக் கடன் செய்விக்க வேண்டும்.  வருமானமின்றி கஷ்டப்படும் விஜய் சேதுபதி வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் பணக்கார பெண்ணான அதிதி ராவ் ஹைதரியுடன் விஜய் சேதுபதிக்கு காதல் ஏற்படுகிறது. மற்றொருபுறம் பெரும் செல்வந்தரான அரவிந்த்சாமி புரமோட்டராக இருந்து கட்டி வரும் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி தீ விபத்தில் சிக்கி, அரவிந்த்சாமிக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. வருமானம் இன்றி தவிக்கும் விஜய் சேதுபதி அரவிந்த் சாமி வீ...
லாக் டவுன்_ விமர்சனம்

லாக் டவுன்_ விமர்சனம்

Reviews
லாக் டவுன்_ விமர்சனம் தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அது விஷயமாக ஒருவரை சந்திக்கச் செல்கிறார். கொண்டாட்டம் மிக்க பார்ட்டியிலிருந்த அந்த நபர் வேலை வாங்கித் தருவதாக உறுதி கொடுக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் வற்புறுத்தல் காரணமாக அந்த பார்ட்டியில் மது அருந்தும் அனுபமா, சற்று நேரத்தில் ஓவராக குடித்துவிட்டு சுயநினைவை இழக்கும் நிலைக்குச் சென்று விடுகிறார். இரண்டு மாதங்கள் கழித்து அனுபமாவுக்கு வேலை கிடைத்து விடுகிறது. அதே சமயம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்ல, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியும் தெரிகிறது. யாரால் இந்த விபரீதம் நடந்தது? எப்போது நடந்தது? என்பதைக் கூட அவரால் யூகிக்க முடியவில்லை. அனுபமாவின் மிக நெருங்கிய தோழி உதவ முன் வரவே இருவரும் சேர்ந்து மருத்துவர் ஒருவரை சந்தித்து கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அது கொர...
க்ராணி _ விமர்சனம்

க்ராணி _ விமர்சனம்

Reviews
க்ராணி _ விமர்சனம் வெளிநாட்டில் வசித்து வந்த ஆனந்த் நாக்_அபர்ணா தம்பதி, தங்கள் இரண்டு குழந்தைகளுடன் தாய்நாடு திரும்பி கிராமத்தில் உள்ள தங்கள் பாரம்பரிய வீட்டில் செட்டில் ஆக திட்டமிடுகின்றனர். பார்க்கும்போதே பயத்தை ஏற்படுத்தும் அந்த பிரும்மாண்டமான பாரம்பரிய மாளிகைக்குள் வரும் தினத்தன்றே மிக முதிர்ந்த தோற்றத்தில் மயக்கமடைந்திருக்கும் வடிவுக்கரசியை பார்க்கின்றனர். அவர் யார் என்ற விவரம் தெரியாமலேயே வீட்டுக்குள் அழைத்து வந்து முதலுதவி செய்கின்றனர். இதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய விஷயங்கள் அந்த வீட்டில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வாய் பேச முடியாத, காது கேளாத மாற்று திறனாளிகளான குழந்தைகள் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது. சூனியக்காரியைப் போல் தோற்றமும் நடையுடை பாவனையும் கொண்ட வயதான பெண்மணி வடிவுக்கரசி யார்? அவரது பின்னணி என்ன? குழந்தைகள் இருவரையும் ஆபத்திலிருந்து பெற்றோரா...
கருப்பு பல்சர்_ விமர்சனம்

கருப்பு பல்சர்_ விமர்சனம்

Reviews
கருப்பு பல்சர்_ விமர்சனம் நாயகன் அட்டகத்தி தினேஷ் சிறிய அளவில் வாட்டர் பியூரிஃபையர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திருமணத்துக்கு பெண் தேடும் இவருக்கு மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் அறிமுகம் கிடைக்கிறது. ஒருவருக்கொருவர் பிடித்து விடவே நேரில் சந்தித்து பேசுகின்றனர். தான் ஒரு பிளாக் பல்சர் வண்டி வைத்திருப்பதாக அப்போது பொய் சொல்லுகிறார் தினேஷ். இந்தப் பொய்யை உண்மையாக்க மதுரையில் இருக்கும் மன்சூர் அலி கானிடமிருந்து கருப்பு பல்சரை 'செகண்ட் ஹேண்ட்' ஆக வாங்கி வருகிறார். இந்த வண்டியில், தான் மணந்து கொள்ளவிருக்கும் ரேஷ்மாவுடன் மகிழ்ச்சியாக செல்லும் போது விபத்தில் சிக்குகிறார் தினேஷ். இந்தக் கருப்பு பல்சர் தொடர்பாக மேலும் பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் அமானுஷ்யம் என்ன என்பது சுவையான பிளாஷ் பேக் கதையாக விரிகிறது. இறுதியில் நாயகன் தினேஷும...
ஹாட் ஸ்பாட் 2 மச்_ விமர்சனம்

ஹாட் ஸ்பாட் 2 மச்_ விமர்சனம்

Reviews
ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஹாட் ஸ்பாட் 2 மச் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் நான்கு கதைகள் இருந்ததுபோல் இதில் மூன்று  வெவ்வேறு கதைகள் இருக்கின்றன. முதல் கதையே தன் அபிமான நடிகனுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் சினிமா வெறியர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறது. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் வெறித்தனமான சினிமா ரசிகர்களின் நெருங்கிய உறவுகளை கடத்தி, அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து திருத்தும் வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் பிரமாதமாக நடித்திருக்கிறார். இரண்டாவது கதையில் தம்பி ராமையாவின் மகள் வெளிநாடு சென்று படித்து விட்டு திரும்பும் போது அரைகுறையாக ஆடை அணிந்து வருவதுடன், விருந்தினர்கள் வரும்போதுகூட வீட்டிலும் அவ்வாறே இருப்பதும் அதை நியாயப்படுத்தி பேசுவதுமாக இருக்கிறார். மகளுக...
மாய பிம்பம் _ விமர்சனம்

மாய பிம்பம் _ விமர்சனம்

Reviews
மாய பிம்பம் _ விமர்சனம் உடல் நலமின்றி தூங்கும் சிறைக் கைதி ஒருவரை அடிக்கிறார் ஜெயிலர். சற்று நேரத்தில்  ஜெயிலர் சாப்பிடும்போது, உணவு புரையேறி தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடும் அவரை சவரக்கத்தியில் தொண்டையிலே குத்தி காப்பாற்றுகிறார் அடி வாங்கிய கைதி. இப்படி ஒரு சுவாரஸ்யமான காட்சியுடன் பிளாஷ் பேக்கில் சொல்லப்படும் 'மாய பிம்பம்'  திரைப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. கல்லூரி மாணவரான ஆகாஷ் பேருந்தில் பயணிக்கும் போது, பக்கத்து பேருந்தில் பயணிக்கும் நாயகி ஜானகியைப் பார்த்ததும் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது. விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆகாஷை ஜானகி அடிக்கடி சந்தித்து பழகும் சூழல் ஏற்படுகிறது. இந்த சூழலே இருவருக்கும் காதலை ஏற்படுத்த வழி வகுக்கிறது. ஆனால் ஆகாஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனோ ஆகாஷுக்கு சரியான வழிகாட்டுதலை கொடுக்காமல் ...
அனந்தா _ விமர்சனம்

அனந்தா _ விமர்சனம்

Reviews
அனந்தா _ விமர்சனம் பாபா என்று பக்தர்களால் அழைக்கப்படும் புட்டபர்த்தி சாய்பாபா, மனமுருகி தன்னிடம் வேண்டும் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் படம் தான் அனந்தா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து 'பாட்ஷா'  'அண்ணாமலை' என்று மகத்தான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, வணிக வெற்றிக்கு தேவைப்படும் எந்தவித மசாலாவும் இல்லாமல் பாபாவுடன் ஏற்பட்ட ஆன்மீக அற்புதங்களை மட்டும் பக்தி மணம் கமழ வழங்கியிருக்கும் படைப்பு அனந்தா. பாபாவின் முழுமையான வாழ்க்கை வரலாறோ அல்லது வாழ்க்கை சம்பவங்களின் ஒரு பகுதியோ இதில் இடம்பெறவில்லை. மாறாக ஐந்து பக்தர்கள், பாபா தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை விளக்குவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் ஜெகபதி பாபுவின் ஆன்மீக அனுபவம், விமான பயணத்தில் த...
வா வாத்தியார் _ விமர்சனம்

வா வாத்தியார் _ விமர்சனம்

Reviews
எம்ஜிஆரின் மிகத் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறந்த தினத்தன்று அதே நேரத்தில் பிறந்த பிறந்த தனது பேரன் கார்த்தியை வாத்தியாரின் அம்சமாகவே கருதி வளர்த்து வருகிறார். உழைக்காத பணத்தின் மீது ஆசைப்படக்கூடாது என்று சொல்லி கார்த்தி வாங்கிய லாட்டரிக்கு கிடைத்த பரிசை ஏற்க மறுத்து கிழித்து எறிந்து விடுகிறார் ராஜ்கிரண். இதனால் கோபமடையும் கார்த்தி எம்ஜிஆர் ஆவதற்குக்கு பதில் நம்பியாரைப்போல் ஆகி விடுகிறார். போலீஸ் வேலையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்து உதவ வேண்டும் என்று தாத்தா ராஜ்கிரண் சொன்னபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகும் கார்த்தி ஊழல் செய்ய ஆரம்பித்து விடுகிறார். இதனால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அது செய்தித்தாளிலும் வருகிறது. அரசியல் புரோக்கரான சத்தியராஜின் மகளுக்கு விபத்து ஒன்றிலிருந்து தப்பிக்க உதவி செய்து அவர் மூலம் தனது சஸ்பென்ஷன் உத்தரவையும் ரத்து செய்ய வைக்கிறார் கார்த்தி. கார...
ராஜா சாப்_ விமர்சனம்

ராஜா சாப்_ விமர்சனம்

Reviews
ராஜா சாப்_ விமர்சனம் தாய் தந்தை இல்லாமல் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார் பிரபாஸ். ஞாபக மறதி நோயால் அவதிப்படும் பாட்டிக்கோ இளம் வயதில் தன்னை விட்டு பிரிந்து போன கணவரை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பது ஆசை. காணாமல் போன தாத்தா,  சார்மினார் பக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இருப்பது தெரிந்து, அவரை தேடி அங்கு செல்கிறார் பிரபாஸ். அங்கே கன்னியாஸ்திரி ஆக மாற இருக்கும் நிதி அகர்வாலைப் பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார். சமுத்திரகனியின் பேத்தியான மாளவிகா மோகனனும் ஒரு பணப்பெட்டியுடன் பிரபாஸுக்கு உதவ வந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். போலீஸ்காரராக இருக்கும் விடிவி கணேஷ் உதவியுடன் பிரபாஸ் ஒரு வழியாக இறந்து போனதாக நம்பப்படும் தாத்தாவின் ஆவி நடமாடும் பேய் பங்களாவுக்குள் நுழைந்து விடுகிறார். இதுவரை இதுவரை ரொமான்டிக்காக சென்ற ராஜா சாப் திரைப்படம் ட்ராக் ம...
டியர் ரதி _ விமர்சனம்

டியர் ரதி _ விமர்சனம்

Reviews
டியர் ரதி _ விமர்சனம் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நாயகன் சரவணா விக்ரம், பெண்களுடன் சகஜமாக பேசிப் பழக கூச்சப்படுபவர். அவரது இந்த பழக்கத்தை போக்குவதற்காக உடன் பணியாற்றும் நண்பர் ஒருவர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சந்திக்கும் நாயகி ஹஸ்லி அமானை சரவணா விக்கிரமுக்கு மிகவும் பிடித்து விடவே, ஒரு நாள் முழுவதும் அவருடனே இருக்க விரும்பி,  டேட்டிங் செய்ய முடிவு எடுக்கிறார். சரவணா விக்ரமுடன்  நாயகி ஹஸ்லி அமான் வெளியே சென்றுவிட அவர், தப்பித்துச் சென்று விட்டதாகக் கருதி மசாஜ் சென்டர் மேலாளர் தேடத் தொடங்குகிறார். அதே சமயம் ஹஸ்லி அமான் தன்னை விட்டு விலகிச் சென்றதால் பிசினஸ் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒருவரும் ஹஸ்லியை தேட ஆரம்பிக்கிறார். இந்தத் தேடலில் நடக்கும் தொடர் காமெடி கலாட்டாதான் டியர் ரதி. சற்றே இடைவெளிக்குப் பிறகு ரசிக...