தி பெட் _ விமர்சனம்
தி பெட் _ விமர்சனம்
சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் மற்றும் நண்பர்கள் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் மது அருந்துவது வழக்கம்.
இந்த வழக்கம் அலுப்பு தட்டி விட்டதால் ஒரு பெண்ணுடன் வீக் எண்டை கொண்டாட நினைத்து, பாலியல் தொழில் செய்யும் சிருஷ்டி டாங்கேயுடன் ஊட்டிக்கு செல்கின்றனர்.
நண்பர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மட்டை ஆகிவிட, ஸ்ரீகாந்தும் சிருஷ்டி டாங்கேயும் அர்த்த ராத்திரியில் ஊட்டியை சுற்றிப் பார்க்க வெளியே செல்கின்றனர்.
அப்போது ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கேயுடன் தனக்குள்ள காதலைச் சொல்ல, பாலியல் தொழில் செய்யும் தனக்கு அதை ஏற்க தகுதி இல்லை என்று சொல்லி மறுத்து விடுகிறார் சிருஷ்டி.
ஸ்ரீகாந்த் உடன் வந்த நண்பர்களில் ஒருவர் மர்மமான முறையில் கொலையுண்டு கிடக்க, சிருஷ்டி டாங்கேயும் காணாமல் போகிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பனை கொலை செய்தது யார்?
க...









