Tuesday, October 6

Reviews

தேரே இஷ்க் மே _ விமர்சனம்

தேரே இஷ்க் மே _ விமர்சனம்

Reviews
தேரே இஷ்க் மே_ விமர்சனம் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் நடித்து வெளியான இந்திப் படத்தின் தமிழ் டப்பிங் வடிவம் இது. இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றும் தனுஷ்,  அதீத கோபம் காரணமாக தன் பணியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. அவர் மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று,  தகுதிச் சான்றிதழை வாங்கித் தந்தால்தான் மீண்டும் பணியை தொடர முடியும் என்ற சூழல் உருவாகிறது. தனுஷுக்கு கவுன்சிலிங் கொடுக்க அவரது முன்னாள் காதலியான கிருத்தி சனோன் வருகிறார். இருவருக்கும் இடையிலான கல்லூரி கால காதல் பிளாஷ் பேக் காட்சிகளாக விரிகிறது. கல்லூரியில் படிக்கும் போது அடி தடி உதை என்று கெத்தாக வலம் வருகிறார் தனுஷ். முனைவர் பட்டம் பெறுவதற்காக தனுஷின் கோபத்தை நீக்கி அவரை நல்லவனாக மாற்ற முயற்சி செய்கிறார் கிருத்தி சனோன். அரசாங்கத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான க...
ரேகை _ விமர்சனம்

ரேகை _ விமர்சனம்

Reviews
ரேகை _ விமர்சனம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கதை ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர்தான் ரேகை. ஜீ 5 தமிழில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் சீரிசை சிங்காரவேலன் தயாரிக்க, தினகரன் இயக்கியிருக்கிறார். சப் இன்ஸ்பெக்டர் பால ஹாசனும் அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் பெண் காவலர் பவித்ரா ஜனனியும் முன்னாள் காதலர்கள். தற்போது இருவருக்கும் பிரேக் அப் ஆகி, பவித்ராவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆயினும் தங்கள் பணியில் இருவருமே மிக நேர்மையாக இணைந்து கடமையாற்றுகின்றனர். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆக பணியாற்றிய ஒரு மாணவன் மீது மிகவும் அன்பு கொண்டு அவன்  படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார் பால ஹாசன். இந்த சூழ்நிலையில் அந்த மாணவன் தங்கியிருந்த ஹாஸ்டலில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வரவே புலன் விசாரணையில் இறங்குகிறார் பால ஹாசன். அதேசமயம் வே...
ரஜினி கேங்_ விமர்சனம்

ரஜினி கேங்_ விமர்சனம்

Reviews
ரஜினி கேங்_ விமர்சனம் ஞாபக மறதிக்காரரான கதையின் நாயகனான ரவி கிஷன் நிகழ்ச்சிகளுக்கு ஆடியோ ஏற்பாடு செய்யும் ஆடியோ செட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தன் காதலி திவிவிகாவுடன் இரவு ஊரை விட்டு ஓடிப்போகும் திட்டத்தில் இருக்கும் தினத்தன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த  திட்டத்தையே மறந்து விடுகிறார். திவிவிகா போன் செய்து நினைவூட்டும்போது,  தான் மைக் முன்னால் நின்று கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து போனில் காதலியுடன் பேசுவது ஊர் முழுக்க கேட்கிறது. காதலர்கள் இருவரையும் ஊரார் துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க முனிஷ்காந்த் ஓட்டி வரும் காரில் காதலர்கள் ஏறி கொள்கின்றனர். சற்று தூரம் சென்றதும் ஒரு கொள்ளை சம்பவத்தை நடத்திவிட்டு நகைகளுடன் வரும் திருடன் கல்கியும் அந்த காரில் லிப்ட் கேட்டு ஏறி கொள்கிறார். கார் சேலத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க, தா...
ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம்

Reviews
ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம் ஊரையே நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய ரவுடி சூப்பர் சுப்பராயனை, முன் பகை காரணமாக ஆந்திராவில் உள்ள ரவுடி அஜய் கோஷ் திட்டமிட்டு அதற்காக கூலிக்கு கொலை செய்யும் கல்யாண் மாஸ்டரை ஏற்பாடு செய்கிறார். ஒரு நாள் பெண் சுகம் தேடி சென்ற சூப்பர் சுப்பராயன் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். நிறை போதையில் நிற்கும் சூப்பர் சுப்பராயன், கீர்த்தி சுரேஷின் தாயார் ராதிகாவால் தாக்கப்பட்டு இறந்து போகிறார். சூப்பர் சுப்பராயன் இறந்ததை தெரிந்து கொண்ட ஒரு குழு பிணத்தைக் கைப்பற்றி அஜய் கோஷிடம் பணம் பெற துடிக்கிறது. வீட்டில் கிடக்கும் பிணத்தை அப்புறப்படுத்த கீர்த்தி சுரேஷ் தன் தாயார் ராதிகா மற்றும் இரு சகோதரிகளுடன் முயற்சி செய்கிறார். இதற்காகவே ஒரு காரை வாங்கி பிணத்தை ஆள் அரவமற்ற மறைவான இடத்தில் கொண்டு போய் போட்டு விட திட்டமிடுகின்றனர். இதற்கிடையில்...
வெள்ளக் குதிர _ விமர்சனம்

வெள்ளக் குதிர _ விமர்சனம்

Reviews
வெள்ளக் குதிர _ விமர்சனம் தவறான வாழ்க்கை வாழும் கதாநாயகன் ஹரிஷ் ஓரி,  ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்க,  தன் மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனோடு அடைக்கலம் வேண்டி மலை கிராமம் ஒன்றுக்கு செல்கிறார். "இனி எந்த தவறும் செய்ய மாட்டேன்... திருந்தி வாழ்வேன்..." என்று மகன் தலையில் சத்தியம் செய்து சொல்கிறார் ஹரிஷ். முன்னோர்கள் வசித்து வந்தபோது 400க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த அந்த மலை கிராமத்தில் தற்போது மிகச் சில வீடுகளே இருக்கின்றன. படிப்பறிவு இல்லாத அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, சொற்ப தொகை கொடுத்து அவர்களது நிலத்தை எழுதி வாங்கிக் கொள்கிறார் முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போதுள்ள பெண் ஊராட்சி தலைவரும் படிப்பறிவு இல்லாதவர் என்பதால் பெயருக்கு மட்டும் ரப்பர் ஸ்டாம்ப்போல் அவரை வைத்துக் கொண்டு தானே மறைமுக ஊராட்சி தலைவர் போல் செயல்படுகிறார் முன்னாள் ஊராட்சி தலைவர். அரசாங்கத்திலிருந்து வரு...
பிபி 180_ விமர்சனம்

பிபி 180_ விமர்சனம்

Reviews
பிபி 180_ விமர்சனம் மீனவ சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதுடன், மதிப்பிற்குரியவராகவும் வலம் வரும் பாக்கியராஜின் மகள் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து போகிறார். பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரேதத்தை போஸ்ட் மார்டம் செய்யாமல் தன்னிடம் கொடுத்து விடும்படி பாக்யராஜ் கேட்க, அதற்கு அரசு மருத்துவரான தன்யா ரவிச்சந்திரன் "கொலை தற்கொலை விபத்து ஆகியவற்றில் இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் கொடுக்க முடியும்" என்று சொல்லி மறுத்துவிடுகிறார். கொலை பாதக செயல்களுக்கு அஞ்சாத தாதா டேனியல் பாலாஜியின் உதவியை பாக்கியராஜ் நாட, அவரது மிரட்டலுக்கும் அடிபணியாத தன்யா பிரேத பரிசோதனை செய்து விடுகிறார். அந்தப் பிரேத பரிசோதனையில் இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியும் பாக்கியராஜுக்கு தெரிய வருகிறது. டேனியல் பாலாஜி தன்னை போனில் மிரட்டுவதை பதிவு செய்து அதை போலீசுக்கு புகாராகவும் கொ...

ஃப்ரைடே _ விமர்சனம்

Reviews
ஃப்ரைடே விமர்சனம் கேங்ஸ்டர் கதையை நேர்க்கோட்டில் சொல்லாமல்,நான் லீனியர் முறையில் வித்தியாசமாக சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ஃப்ரைடே. கூலிக்காக அடிதடி மற்றும் கொலைகள் செய்யும் கூட்டம் ஒன்றின் அடியாட்களில் ஒருவராக அனீஸ் மாசிலாமணி வேலை பார்க்கிறார். தன்னைப்போலவே தன் தம்பியும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, சமீபத்தில் திருமணமான தன் தம்பிக்கு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் தன் அண்ணனுக்கு தெரியாமல், ஒரு கொலை செய்வதற்கு சென்றவர்களுடன் உடன் சென்ற அனீஸ் மாசிலாமணியின் தம்பி எதிர்பாராத விதமாக கே பி ஒய் தீனாவால் சுடப்படுகிறார். கே பி ஒய் தீனாவால் ஏன் அவர் சுடப்படுகிறார்? தம்பி கொல்லப்பட்டதை அறிந்த அனீஸ் மாசிலாமணி அதன் பிறகு என்ன செய்கிறார் என்பதுதான் பிரைடே படத்தின் கதை. அடிதடி குத்துவெட்டு என்று இருந்தாலும் தன் குடும்பத்தாரிடம் பாசத்தை பொழிவதும், தம்பி த...
மாஸ்க்_ விமர்சனம்

மாஸ்க்_ விமர்சனம்

Reviews
மாஸ்க்_ விமர்சனம் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்று சுருக்கமாக ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். டார்க் ஹியூமர் பாணியிலான இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவை காட்சிகள், மிகப் பிரமாதமாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே "நான் கெட்டவன்தான்...ஆனால் எச்சை இல்லை..." என்று சொல்லும் கவின் நடித்த வேலு கதாபாத்திரத்தை இயக்குநர் செதுக்கியிருப்பதே பார்க்க புதிதாககவும் வித்தியாசமாகவும் உள்ளது. அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) எதிர் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை பெண்களை வைத்து பாலியல் தொழிலை நடத்தி வரும் பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறான். ப...
தீயவர் குலை நடுங்க_ விமர்சனம்

தீயவர் குலை நடுங்க_ விமர்சனம்

Reviews
தீயவர் குலை நடுங்க _ விமர்சனம் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த எழுத்தாளர் ஒருவர், முகமூடி அணிந்த மர்ம மனிதனால் கொலை செய்யப்படுகிறார். காவல்துறை அதிகாரி அர்ஜுன் இது குறித்து புலன் விசாரணையை தொடங்குகிறார். தூங்கும் போது குறட்டை வருவதை தெரப்பி மூலம் கட்டுப்படுத்தும் பணியை செய்து வரும் பிரவீன் ராஜாவை திருமணத் தகவல் மையம் ஒன்றின் மூலம் தொடர்பு கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அன்போடு கவனித்துக் கொள்ளும் பணியை செய்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் அவருடன் பழக ஆரம்பிக்கிறார். கொலையுண்ட எழுத்தாளருக்கும் தொழிலதிபர் ராம்குமாருக்கும் நட்பு இருப்பது போலீஸ் அதிகாரி அர்ஜுனுக்கு பெரிய வருகிறது. தொழிலதிபர் ராம்குமாரை விசாரிக்க அர்ஜுனின் உயர் அதிகாரி தடை போடுகிறார். இந்த நிலையில் அர்ஜுனை தனியாக கடற்கரையில் சந்தித்து சில ...
யெல்லோ _ விமர்சனம்

யெல்லோ _ விமர்சனம்

Reviews
  யெல்லோ _ விமர்சனம் 3.5/5 ஒரு கவிதையை போல் திரையில் மலர்ந்திருக்கும் டிராவல் ஸ்டோரி என்று யெல்லோ படத்தை ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். காதலி்ல் தோல்வி, வங்கிப் பணியில் ஏற்படும் மன அழுத்தம், உடல் நலம் இன்றி வீட்டிலே முடங்கிக் கிடக்கும் அப்பா என்று பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிகொண்டிருக்கும் ஆதிரை தற்காலிகமாகவேணும் அதிலிருந்து விடுபட, தன் சிறு வயது தோழமைகளை தேடி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறாள். ஆறு நாட்கள் மட்டுமே பழகிய ஒருவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் தன் தோழி ஜெனியை (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதிர்ச்சியுடன் எதிர்கொள்கிறாள். தன்னைப்போல் பயணம் செய்பவர்கள் தற்காலிகமாக தங்கும் ஹாஸ்டல் போன்ற தங்குமிடத்தில் தோழியின் ஆலோசனைப்படி தங்குகிறார் ஆதிரை. அங்கே வைபவ் முருகேசன் நட்பு கிடைக்கிறது. இருவருடைய எண்ண  அலைவரிசையும் ஒத்துப் போகிறது. அடுத்து தான் சந்திக்க திட்...