Wednesday, October 28

Reviews

பைசன்_ விமர்சனம்

பைசன்_ விமர்சனம்

Reviews
பைசன்_ விமர்சனம் சமூகப் பிரக்ஞை உள்ள மிகச் சில இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் மிகுந்த பொறுப்புணர்வுடன் திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவர். தென் தமிழகத்தில் தலை விரித்தாடும் ஜாதிய மோதல்களை கபடி விளையாட்டின் பின்னணியில் எந்த சார்பு நிலையும் இன்றி அற்புதமான படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கபடி விளையாட்டுக்காக இந்திய அரசிடமிருந்து அர்ஜுனா விருதை பெற்ற கபடி வீரர் மணத்தி சண்முகம் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை பைசன். கபடி விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட துருவ் விக்ரம் தன் தந்தை பசுபதி, மற்றும் மூத்த சகோதரி ரதிஷா விஜயன், ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணத்தி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். கபடி விளையாட்டு தன் மகனின் வாழ்க்கையில் "விளையாடி" விடக் கூடாது என்பதற்காக துருவ் கபடி  ஆடுவதை தடுக்க முயல்கிறார் தந்தை பசுபதி. ஆயின...
கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம்

கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம்

Reviews
கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம் எண்ணற்ற வசதிகளை நமக்குத் தரும் நவீன விஞ்ஞானத்தில், பல அளெகரியங்களும் சில ஆபத்துகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. உலகையே நம் கைக்குள் கொண்டு வரும் கைபேசியில் சூதாட்டம்கூட வந்துவிட்டது. அதேபோல் விரல் அசைவில் கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்குபவரின் திருப்பி செலுத்தும் திறன்பற்றி எல்லாம் சிறிதுகூட ஆய்வு செய்யாமல் உடனடியாக கடன் வழங்கும் செல்பேசி செயலிகள் வரமா?  அல்லது சாபமா? ஆன்லைன் சூதாட்டம்மூலம் ஒருவன் எப்படி பணத்தை இழந்து, கடன்களைப் பெற்று அதை அடைக்க முடியாமல் சிக்கி சீரழிவதை அழகாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யும் அருமையான படமாக வந்திருக்கிறது 'கேம் ஆப் லோன்ஸ்'. வேலையை இழந்து வருமானமின்றி வீட்டில் இருக்கும் விஷ்வா, வேலைக்குச் செல்லும் தன் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்கிறான். சூதாடும் பழக்கமுள்ள விஷ்வா ஆன்லைன் செயலி மூலம் பணம் கடன் வாங்குகிறான். இந்தப் ...
வில்  _ விமர்சனம்

வில் _ விமர்சனம்

Reviews
வில் _ விமர்சனம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலிடம்,  இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்கு மாடி வீட்டின் உரிமையை கோரி ஓர் இளம் பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் விசாரணைக்கு வருகிறது. இறந்து போன, வயது முதிர்ந்த அந்த வீட்டின் சொந்தக்காரர் உறவினராக இல்லாத ஒரு இளம் பெண்ணுக்கு தன் வீட்டை எழுதி வைத்தது குறித்து நீதிபதி சோனியாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ராந்த்துக்கு உத்தரவிடுகிறார். வீட்டுக்கு உரிமை கோரிய இளம் பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய் என்று தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து உண்மையான வாரிசுதாரர் யார் என்பதை தேடிச் செல்கிறார் விக்ராந்த். பொய்யாக அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடிய பெண்ணுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இறந்த முதியவருக்கும் உயில் மூலம் தனது வீட்டை எழுதி வைத்த இளம் பெண்ணுக்கு...
வேடுவன்_ வெப் சீரிஸ் விமர்சனம்

வேடுவன்_ வெப் சீரிஸ் விமர்சனம்

Reviews
வேடுவன்_ வெப் சீரிஸ் விமர்சனம் ஜீ 5 தொலைக்காட்சியில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகும் வெப் தொடரான வேடுவன் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் இளம் திரைப்பட நடிகர் கண்ணா ரவிக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு வருகிறது. வலுவான கதை, கம்பீரமான தனது பாத்திரம் இரண்டுமே அருமையாக அமைந்த இந்தப் படம்,  தனக்கு கண்டிப்பாக பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடிக்க தொடங்குகிறார் கண்ணா ரவி. ஆனால் கதைப்படி இறுதிக்காட்சியில் துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் நடிப்பதற்கு மறுக்கிறார் கண்ணா ரவி. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும்,  உண்மையில் அவரது இறப்பில் வேறு ஏதோ மர்மம் இருக்கிறது எ...
மருதம் _ விமர்சனம்

மருதம் _ விமர்சனம்

Reviews
மருதம் _ விமர்சனம் தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு : சி. வெங்கடேசன் நடிப்பு : விதார்த்,  ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ் எழுத்து-இயக்கம் : V கஜேந்திரன் இசை : என்.ஆர். ரகுநந்தன் ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம் எடிட்டிங் : B சந்துரு வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்யாமல் வேள்வியாகச் செய்து வருபவர் விதார்த். தனது நிலத்தில் ரசாயன உரங்களைப்  போடாமல் இயற்கை விவசாய முறையை கையாண்டு வெற்றி பெற்று,  ஊடகங்களின் பாராட்டையும் பெற்றவர் அவர். திடீரென ஒரு நாள் சில ஆட்கள் வந்து அவரது நிலத்தில் வேலி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களிடம் சண்டைக்குப் போகும் விதாரத்துக்கு அந்த நிலம் தனியார் வங்கியால் ஏலம் விடப்பட்டு விற்பனையானது தெரிய வருகிறது. இறந்து போன விதார்தின் தந்தை, அந்த நிலத்தின் மீது கடன் வாங்கியதாகவும்,  அதை திருப்பி செலுத்தாததால் ஏலம் விட்டதாகவும...
இறுதி முயற்சி  _ விமர்சனம்

இறுதி முயற்சி _ விமர்சனம்

Reviews
இறுதி முயற்சி _ விமர்சனம் ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காகவும், மகனின் இருதய ஆபரேஷன் செலவுக்காகவும் விட்டல் ராவிடம் எண்பது லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார் ரஞ்சித். அசலுக்கு மேல் வட்டி கட்டியும் அசலும் அடையவில்லை வட்டியும் பாக்கி இருக்கிறது என்று விட்டல் ராவும் அவரது தம்பியும் ரஞ்சித் குடும்பத்தையே கொடுமைப்படுத்துகின்றனர். ரஞ்சித்தின் மனைவி மெகாலி மீனாட்சி குளிக்கும் போது விட்டல் ராவின் அடியாட்கள் எட்டிப் பார்ப்பதுடன் அதை வீடியோவாகவும் எடுக்கின்றனர். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ரஞ்சித்தின் மகளான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று பகிரங்கமாக சொல்லி பயமுறுத்துகிறார் விட்டல். நண்பர்களிடம் பண உதவி கேட்கும் ரஞ்சித்திற்கு கைவிரித்து விடுகின்றனர் நண்பர்கள். எனவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார் ரஞ்...

காந்தாரா சேப்டர் 1 _ விமர்சனம்

Reviews
  காந்தாரா சேப்டர் 1 _ விமர்சனம் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியான காந்தாரா,  சிவன் தவம் செய்வதற்காக பார்வதி தேவியால் கொடுக்கப்பட்டது என்று அந்தப் பகுதியில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகள் நம்புகிறார்கள். வீரத்திலும் போர்க்கலையிலும் சிறந்து விளங்கும் இவர்களை அவ்வளவு எளிதில் யாராலும் வென்று விட முடியாது. இந்தக் கூட்டத்தில் ஒருவராக திகழ்கிறார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா வனப்பகுதியின் அருகிலேயே பாங்காரா என்ற சிறு நாடு இருக்கிறது. இந்த நாட்டின் மன்னராக இருந்து ஜெயராமன் ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் குல்சன் தேவய்யா, மகள் ருக்மணி வசந்த். இளவரசராக இருக்கும் மகன் குல்சன் தேவய்யாவுக்கு மகுடம் சூட்டி மன்னர் ஆக்குகிறார் ஜெயராமன். எப்போது பார்த்தாலும் சோம பானம் அருந்தியபடி போதையில் பெண்களுடன் கூத்தடித்து வரும் தேவய்யாவுக்கு ஈசனின் தோட்டமான காந்தாராவை கை...

இட்லி கடை _ விமர்சனம்

Reviews
இட்லி கடை _ விமர்சனம் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த ஒன்றரை வரி குறளை வைத்து  எடுக்கப்பட்ட ஓர் அற்புதமான திரைப்படம் தான் இட்லி கடை என்று ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். முந்தைய மூன்று படங்களில் இருந்து மாறுபட்ட முறையில் தனது இயக்கத்தில் உருவான  இட்லி கடை படத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ் . தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சிறிய அளவில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார் ராஜ் கிரண். இந்தக் கடையின் சிறப்பு என்னவென்றால் ஆட்டுக்கல்லில் மாவை ஆட்டி, இட்லி சுட்டு விற்பனை செய்வதுதான். வருமானத்திற்கான தொழிலாக மட்டும் இட்லி கடையை கருதாமல் அதை ஆத்மார்த்தமாக செய்து வரும் ராஜ்கிரணைப் பார்த்து அவரது மகனான தனுஷுகும் சிறுவயதிலிருந்தே சமையல் கலையில் ஆர்வம் ஏற்படுகிறது. இதனால் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு இட்லி கடை தொழில் விரிவுபடுத்த எண்ணுகிறார். இதற்காக உரிமை கி...

மரியா _ விமர்சனம்

Reviews
Maria Cast & Crew *Cast* SaiShri Prabhakaran  Pavel Navageethan  Sidhu Kumaresan  Vignesh Ravi Balaji Velan  Sudha Pushpa  Abinaya  *Crew detai Script & Direction: Hari K Sudhan Producer: Hari K Harasudhan Dop: Manishankar G Editors: Kaamesh K (&) Nishar sharef A மரியா _ விமர்சனம் கிறிஸ்துவ மதத்தில் நன் என்று சொல்லப்படும் கன்னியாஸ்திரி ஆகிவிட்ட இளம் பெண் மரியா, தன் உறவுக்கார பெண்ணுடன் தங்க அவள்  இருக்கும் வீட்டுக்கு வருகிறார். ஒரு பெண் தோழி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் வாடகையை பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வரும் மரியாவின் உறவுக்கார பெண் ஒரு வாலிபனுடன் லிவ் இன் உறவில் இருக்கிறார். இந்த ஜோடி இரவு நேரத்தில் அந்தரங்க உறவில் இருக்கும்போது ஏற்படும் சப்தங்கள் மரியாவை வெகுவாக தொந்தரவு செய்கின்றன. தான் எதையோ இழந்துவிட்டதையும், மனம் அதற்காக ஏங்குவதையும்  மரி...
ரைட் _ விமர்சனம்

ரைட் _ விமர்சனம்

Reviews
ரைட் _ விமர்சனம் நடிப்பு நட்டி என்கின்ற நடராஜ், அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, மூணாறு ரமேஷ், வினோதினி வைத்தியநாதன், ஆதித்யா சிவகுமார், யுவினா பார்த்தவி, எழுத்து இயக்கம் :சுப்பிரமணியம் ரமேஷ்குமார் தயாரிப்பு: ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர்கள் : திருமால் லட்சுமணன் டி சியாமளா ஒளிப்பதிவு: எம் பத்மேஷ் இசை: குணா பாலசுப்பிரமணியன் படத்தொகுப்பு :நாகூர் ராமச்சந்திரன் கலை இயக்கம்: தாமு தன் மகனை காணவில்லை என்று புகார் அளிக்க காவல் நிலையத்துக்கு வருகிறார் அருண் பாண்டியன். பிரதமரின் பாதுகாப்பு பணிக்காக நிலையத்தில் உள்ள பெரும்பாலான காவலர்கள் வெளியே சென்று விட்ட நிலையில் மீதமுள்ள ஓரிரு காவலர்களும் அருண்பாண்டியனை அலட்சியம் செய்கின்றனர். இந்த சூழலில் நிலைய எழுத்தர் மூணாறு ரமேஷ் இருக்கைக்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் இருக்கையில் இருந்து எழுந்தால் அது வெடித்து சித...