Wednesday, October 28

Reviews

சரீரம் _ விமர்சனம்

சரீரம் _ விமர்சனம்

Reviews
சரீரம் _ விமர்சனம் நடிப்பு: தர்ஷன், சார்மி, ஜெ மனோஜ், பாய்ஸ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, மிலா, ஜிவி பெருமாள் தயாரிப்பு: ஜிவி பெருமாள் இசை: பாரதிராஜா ஒளிப்பதிவு: கே டோர்னளா பாஸ்கர், பரணிகுமார் இயக்கம் :ஜிவி பெருமாள் பி ஆர் ஓ: ஆர்.மணி மதன் காதலுக்காக காதலர்கள் உறவுகளை இழந்து இருக்கிறார்கள். உடைமைகளை துறந்து இருக்கிறார்கள். ஏன் உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். காதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்ட நாயகனை கூட சினிமாவில் கண்டிருக்கிறோம். ஆனால் காதலர்கள் இருவர் உயிரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக புதுமையாகவும் புரட்சிகரமாகவும் என்ன செய்கிறார்கள் என்பதை சொல்லும் படம் தான் சரீரம். கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவன் பிரியனும் மாணவி விஜயலட்சுமியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். பெரும் செல்வந்தர் ஒருவரின் மகளான விஜயலட்சுமியின் தாய் மாம...
படையாண்ட மாவீரா _ விமர்சனம்

படையாண்ட மாவீரா _ விமர்சனம்

Reviews
படையாண்ட மாவீரா _ விமர்சனம் மாவீரன் என்ற பட்டத்துடன் வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் படையாண்ட மாவீரா. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று மக்களுக்காக போராடிய குரு பாத்திரத்தில் இயக்குனர் வ.கவுதமன் தோன்றி நடித்திருக்கிறார். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தீனா ஓர் ஏழைப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறியும் குரு, அதற்கு நியாயம் கேட்கச் சென்றபோது போலீஸ்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் அவர்களை அடித்து துவம்சம் செய்து போலீஸ் நிலையத்தையே சூறையாடுகிறார். அதே சமயம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழை மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்திலும் இறங்குகிறார். முதலாளிகளும் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து குருவை தீர்த்து கட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதன் முடிவு  என்ன என்பதுதான் படையாண்ட மாவீரன் படத்தி...
ராயல் சல்யூட்  சினிமா விமர்சனம்

ராயல் சல்யூட்  சினிமா விமர்சனம்

Reviews
ராயல் சல்யூட்  சினிமா விமர்சனம் இந்திய ராணுவ வீரன் சக்திவேல் (பிரதீப்) இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரில் குண்டடிபட்டு உயிருக்குப் போராடும் தனது உயரதிகாரியை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இருக்கிறான். அந்த நேரத்தில் அவனது உயிருக்கு ஆபத்து உருவாக, அப்போதைய போரில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் வீரன் ஒருவன் சக்திவேலின் உயிரைக் காப்பாற்றுகிறான். அடுத்த சில மணி நேரத்திலேயே சக்திவேலுக்கு தன்னைக் காப்பாற்றியவனை கொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அந்த நிலைமையில் அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது படத்தின் உணர்வுபூர்வமான நிறைவுக் காட்சி. தனது உயரதிகாரியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை முதுகில் தூக்கிச் சுமந்து பல கிலோ மீட்டர் துரம் நடப்பது, உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிக்கித் தவிப்பது,  ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய பாகிஸ்தான் நாட்டு இந்திய ராணுவ வீரனை சுட்டுக் கொல...
தண்டகாரண்யம் _ விமர்சனம்

தண்டகாரண்யம் _ விமர்சனம்

Reviews
தண்டகாரண்யம் _ விமர்சனம் PRODUCED BY *S. SAI DEVANAND* *S. SAI VENKATESWARAN* *PA.RANJITH *WRITER - DIRECTOR* ATHIYAN AATHIRAI , DOP - PRATHEEP KALIRAJA MUSIC - JUSTIN PRABHAKARAN EDITOR - SELVA RK ART - T. RAMALINGAM *Artiste* Dinesh Kalaiyarasan Dancing rose Shabeer Balasaravanan Rythvika Vinsu Sam Arul doss Muthukumar Yuvan mayilsamy ACTION - STUNNER SAM, A.S.SUDESHKUMAR, PC STUNTS LYRICS - UMADEVI, THANIKODI இயக்குநர் அதியன் ஆதிரையின் உரத்த சிந்தனையில் உருவாகியிருக்கும்  தண்டகாருண்யம் திரைப்படம்,  உள்ளத்தை உருக்கும் வகையிலும் உதிரத்தை கொதிக்கச் செய்யும் வகையிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி வனப்பகுதியில் மனைவி ரித்விகா, தம்பி கலையரசன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் தினேஷ். தீவிரவாதிகளுக்கு மறுவாழ்வு தருவதற்காக மத்திய அரசு...
மிராய் _ விமர்சனம்

மிராய் _ விமர்சனம்

Reviews
மிராய் _ விமர்சனம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரேயா சரண், தனக்கு பிறக்கும் மகன் ஓர் இனத்தையே காக்க வேண்டிய பெரும் பொறுப்பில் இருப்பதை. ஆனால் அவருக்குப் பிறந்து வளர்ந்து வாலிபனாக உலா வரும் தேஜா சஜ்ஜா சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார். அவரை சந்திக்கும் ரித்திகா நாயக் இந்த உலகையே ஆள்வதற்கு ஆற்றலைத் தரும் ஒன்பது புனித நூல்களை தேடி ஒரு தீய சக்தி கொடூர பலத்துடன் இயங்குவதையும்,  அதை தடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதையும் தேஜாவுக்கு சுட்டிக் காட்டுகிறார். இந்தக் கொடூர சக்தியை அடக்கி அழிப்பதற்கு ராமர் காலத்தில் இருந்த மிராய் என்ற ஆயுதத்தை கண்டுபிடித்து எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் ஒன்பது புனித நூல்களை தேடும் தீய சக்தியை அழிக்க இயலும் என்றும் கூறுகிறார். மிராய் ஆயுதத்தை தேடி தேஜா சஜ்ஜா மேற்கொள்ளும் பயணமும்,  அதை கண்டுபிடித்து எடுத்து வந்து  தீய சக்தியை அ...
குமார சம்பவம் _ விமர்சனம்

குமார சம்பவம் _ விமர்சனம்

Reviews
குமார சம்பவம் _ விமர்சனம் சமூகப் பிரச்சனைகளுக்காக போராடும் இளங்கோ குமாரவேலுக்கு,  தனது வீட்டை வாடகைக்கு கொடுக்கிறார் ஜி எம் குமார். அவரது பேரன் குமரன் தங்கராஜுக்கும் இளங்கோவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பேரன் குமரனுக்காக படம் எடுக்க,  தன் வீட்டை விற்று பணம் கொடுக்க நினைக்கிறார் ஜி எம் குமார். வீட்டை விற்கும் பணத்தில் ஒரு பகுதியை நண்பன் இளங்கோ குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விடுகிறார். இதன் காரணமாக குமரனுக்கு இளங்கோவின் மீது இன்னும் கோபம் அதிகமாகிறது. இந்த சூழ்நிலையில் இளங்கோ குமாரவேல் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். போலீசின் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்கிறார் குமரன் தங்கராஜன். இந்த மர்ம மரணத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக நண்பர்களுடன் தானே புலனாய்வு மேற்கொள்...
பாம் _ விமர்சனம்

பாம் _ விமர்சனம்

News, Reviews
பாம் _ விமர்சனம் நடிப்பு: அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி தயாரிப்பு: சுதா சுகுமார் இசை: டி இமான் ஒளிப்பதிவு: பிஎம்.ராஜ்குமார் கதை திரைக்கதை: மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் வசனம்: மகிழ்நன் பிஎம் இயக்கம்: விஷால் வெங்கட் பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவா காளக்கண்மாய்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் இரண்டு பிரிவினர் மேல் ஜாதி கீழ் ஜாதி என மோதிக் கொண்டு, காளப்பட்டி மற்றும் கம்மாபட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிந்து வசிக்கின்றனர். இந்த இரண்டு சமூகத்தினரிடையே எப்போது மோதல் வரும் என்று சொல்ல முடியாது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இருதரப்பும் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். உயர் போலீஸ் அதிகாரி,கலெக்டர் என்று பலர் வந்தும் இவர்கள் பிரச்சனையை தீர்க்க முடிவதில்லை. இந்த இரண்டு...
யோலோ_ விமர்சனம்

யோலோ_ விமர்சனம்

Reviews
யோலோ_ விமர்சனம் CAST Dev Devika Aakash Premkumar Badava Gopi Vj Nikki Subhashini Kannan Praveen Yuvaraj Ganesan  DIRECTOR - S. SAM PRODUCER - MAHESH SELVARAJ (MR Motion Pictures) STORY -RAMS MURUGAN SCREENPLAY - S. SAM, RAMS MURUGAN, PANBU SELVAN, MAHESH SELVARAJ CINEMATOGRAPHER - SOORAJ NALLUSAMI MUSIC - SAGISHANA XAVIER EDITOR - A.L. RAMESH எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கும் படம் யோலோ. ஆரம்பமே அட்டகாசமாக அமையும் வாய்ப்பு சில திரைப்படங்களுக்கு மட்டுமே அமையும். அப்படி அமைந்த ஓரு படம்தான் யோலோ. ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் தேவிகாவை பெண் பார்க்க வருகின்றனர் விஜே நிக்கியின் குடும்பத்தார். தேவிகாவை பார்த்த நிக்கியின் மூத்த சகோதரி, "இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது" என்று சொல்லி தேவிகாவின் அப்பா ...
காயல்_ விமர்சனம்

காயல்_ விமர்சனம்

Reviews
காயல்_ விமர்சனம் தயாரிப்பு - ஜெ ஸ்டுடியோ, ஜேசு சுந்தரமாறன் . இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடிகர்கள், அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக், எழுத்து இயக்கம், தமயந்தி தன் வலிமையான எழுத்துக்களால் புகழ் பெற்ற தமயந்தி,  இயக்குனர் பொறுப்பை ஏற்று காதலர்களின் வலியை சொல்லும் திரைப்படம் காயல். ஐசக் வர்கீஸ், அனுமோள் தம்பதியின் செல்ல மகள் காயத்ரி, வேறு ஜாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை காதலிக்கிறார். போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஐசக், தன் மகளின் காதலை ஏற்றுக் கொண்டாலும், தாயார் அனுமோள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார். எனவே தங்கள் இனத்திலேயே ஒரு மாப்பிள்ளை பார்த்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் எதிர்பாராமல் காயத்ரி தற்கொலை செய்து கொள்கிறார். மகளின் மனம் விரும்பிய மணவாழ்க்கைக்கு அனுமதிக்காமல், மரணத்துக்...
மதராஸி_ விமர்சனம்

மதராஸி_ விமர்சனம்

Reviews
மதராஸி_ விமர்சனம் 'துப்பாக்கி' என்ற தலைப்பிலேயே ஒரு படத்தை உருவாக்கிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக உருவாக்கி இருக்கும் படம் தான் 'மதராசி'. தமிழ்நாட்டில் விநியோகிப்பதற்காக ஆறு கண்டெய்னர் லாரிகளில் வட இந்தியாவில் இருந்து வரும் துப்பாக்கிகளை தடுத்து அழிக்க திட்டமிடுகிறார்கள் என் ஐ ஏ அதிகாரிகள். தற்கொலைக்கு பலமுறை முயற்சி செய்து தோல்வியடையும் சிவகார்த்திகேயனை இந்த திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள் அதிகாரிகள். சிறு வயதிலேயே தன் குடும்பத்தை இழந்த சிவகார்த்திகேயன், டெல்யூஷன் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். யாருக்காவது ஏதாவது ஆபத்து என்றால், தானாக முன்வந்து அவர்களைக் காப்பாற்றுவார் சிவகார்த்திகேயன். அவரது இந்த நோயைப் பற்றியும், குண இயல்பைப் பற்றியும் தெரிந்து கொண்ட ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனை காதலிக்க தொடங்குகிற...