Wednesday, November 18

Reviews

வல்லான் _ விமர்சனம்

Reviews
வல்லான் _ விமர்சனம் மிகப்பெரும் செல்வந்தர் ஒருவரின் மருமகன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. உயிர் காவல் துறை அதிகாரி ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுந்தர் சியை இந்த வழக்கை புலன்விசாரணை செய்யும்படி கேட்டுக்கொள்கிறார். சுந்தர் சியும் துப்பு துலக்கிக் கொண்டிருக்கும்போதே,  இந்த வழக்கு. தொடர்பான செய்திகளை வெளியிட்டுக்  கொண்டிருக்கும் ஒரு பெண்ணும் மரணமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். துப்பு எதுவும் கிடைக்காமல் காவல்துறையும் சுந்தர் சி யின் திணறிக் கொண்டிருக்க,  மற்றொரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் சடலத்துக்கு அருகில் மற்றொரு பெண்ணின் பிணமும் கிடைக்கிறது. இறந்து கிடக்கும் பெண்ணின் அடையாளத்துடன் தனது காதலி தான்யா ஹோப்  அடையாளமும் ஒத்துப்போக இறந்து கிடப்பது தனது காதலிதானோ என்று எண்ணி சுந்தர் சி க...
’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்

Reviews
எத்தனை முறை கேட்டாலும் எந்த வடிவத்தில் பார்த்தாலும் அழுக்காத இதிகாசம் ராமாயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் ராமாயண கதையை கார்ட்டூன் வடிவத்தில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். வால்மீகி எழுதிய ராமாயணத்திற்கும், கம்பர் எழுதிய ராமாயணத்திற்கும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதியராமாயணத்திற்குமே  சில வேறுபாடுகள் உண்டு. ஜப்பானைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய இந்த ராமாயணம் திரைப்படம் ஒரு வித்தியாசமான அனுபவம் என்பதில் ஐயமில்லை. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட விதம் அருமையாக அமைந்திருக்கிறது . ராமர் வேடத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில்குமார், சீதை வேடத்திற்கு குரல் கொடுத்திருக்கும் மகேஸ்வரி, ராவணன் வேடத்துக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன்குமார் ஆகியோர் படத்திற்கு பலம் சே...
’கலன்’ திரைப்பட விமர்சனம்

’கலன்’ திரைப்பட விமர்சனம்

Reviews
’கலன்’ திரைப்பட விமர்சனம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம் இருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் வேங்கை, அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்கிறார். வேங்கை உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால், அவரது நண்பன் மூலமாகவே அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்துவிடுகிறது. அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க வேங்கையின் தாய் வெட்டுடையார் காளியும், ...
தென் சென்னை _ திரைப்பட விமர்சனம்

தென் சென்னை _ திரைப்பட விமர்சனம்

Reviews
'தென் சென்னை' _ திரைப்பட விமர்சனம் சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தென் சென்னையை மையமாகக் கொண்டு பரபர திரைக்கதையில் விறுவிறுப்பாக செல்லும் திரைப்படம்தான் 'தென் சென்னை'. சென்னைக்கு பல முகங்கள் உண்டு பல கதைகளும் உண்டு ஆனால் வட சென்னை பற்றி எண்ணற்ற தமிழ் திரைப்படங்கள் வந்திருந்தாலும் இதுவரை தென் சென்னை பற்றி யாரும் படமெடுக்கவில்லை. அந்தக்குறையை போக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தென்சென்னை. இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் எப்படி இர...
சூது கவ்வும் 2  விமர்சனம்

சூது கவ்வும் 2  விமர்சனம்

Reviews
சூது கவ்வும் 2  விமர்சனம் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சூது கவ்வும்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்திருக்கிறது. டார்க் காமெடி குறித்து அதிகம் அறிமுகம் இல்லாத தமிழ் பட ரசிகர்களுக்கு அன்று வந்த 'சூது கவ்வும்' நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அத்துடன் விஜய் சேதுபதியின் மார்க்கெட் நிலை பெற வழி வகுத்த முக்கிய படங்களில் ஒன்று 'சூது கவ்வும்'. இரண்டாம் பாகம் எப்படி இருக்கின்றது என பார்ப்போமா? ஆளும் கட்சி நிறுவனரான வாகை சந்திரசேகர் கோமாவுக்கு சென்று விட,  ஊழல்வாதியான ராதாரவி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். நேர்மையான அரசியல்வாதியான எம் எஸ் பாஸ்கரின் மகன் கருணாகரன், ஊழல் அரசியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் கருணாகரனுக்கும், முதல்வர் ராதா ரவிக்கும் முடிவு கட்ட திட்டமிட்டு களத்தில் இறங்குகிறார் வாகை ச...
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ _ விமர்சனம்

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ _ விமர்சனம்

Reviews
பல ஆண்டுகளாக பத்திரிகை துறையில் அனுபவம் பெற்ற கேப்டன் எம் பி ஆனந்த் ஃப்ரைடே பிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ஒன்ஸ் அப்பான டைம் இன் மெட்ராஸ். ராணுவ குடியிருப்புக்கு அருகில் உள்ள குடிசை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அங்குள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்கும் என்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தான். தமிழகத்தையே பதைபதைவைக்க வைத்த இந்த சம்பவம் செய்திகளில் பரபரப்பானது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கூவத்தில் போலீசார் கைப்பற்றினர். கூவம் ஆற்றில் வீசப்பட்ட துப்பாக்கி வளைகரம் ஒன்றில் சிக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாகியிருப்பதுதான் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. நான்கு கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜி மிகவும் விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு அருமையாக படமாக்கப்பட்டு இருக்கிறது. முதல் கதையில் சுகாதாரப் பணியாளரான அபிராமி தன் மகனை ...
பணி _ விமர்சனம்

பணி _ விமர்சனம்

Reviews
பணி _ விமர்சனம் கேரள மாநிலம் திருச்சூரில் தன் நெருங்கிய உறவினர்களுடன் மிகப்பெரிய தாதாவாக வலம் வருகிறார் ஜோஜூ ஜார்ஜ். மெக்கானிக்காக இருந்து கொண்டே,  நிழலான காரியங்களில் ஈடுபட்டு வரும் இரண்டு இளைஞர்கள் திட்டமிட்டு ஒரு கொலை செய்கின்றனர். கொலை செய்யச் சொன்னவரிடம் பேசிய பணத்தை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காத்திருக்கும் போது,  ஜோஜூ ஜார்ஜ் மனைவி அபிநயா அங்கே வருகிறார். அபிநயாவின் அழகில் மயங்கி அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர் இந்த இளைஞர்கள். இதை அறிந்த ஜோஜூ ஜார்ஜ் இளைஞர்கள் இருவரையும் சகட்டுமேனிக்கு அடித்து துவைத்து எடுக்கிறார். வெகுண்டு எழுந்த இளைஞர்கள் இருவரும் அபிநயாவின் வீட்டுக்கே சென்று அங்கு தனியாக இருக்கும் அவரை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். தன் மனைவி மீது கை வைத்தவர்களை சும்மா விடுவாரா தாதா? வெறிகொண்டு அவர்கள் இருவரையும் தேடுகிறார். ஆனால் அவர்களோ இ...
ஆலன் _ விமர்சனம்

ஆலன் _ விமர்சனம்

Reviews
ஆலன் _ விமர்சனம் சிறுவயதிலிருந்தே எழுதுவதில் ஆர்வமுள்ள சிறுவன் தியாகு விபத்து ஒன்றில் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்து,  ஆன்மீகத்திலாவது நிம்மதி கிடைக்குமா என்று எதிர்பார்த்து காசிக்கு வந்து விடுகிறான். விபத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாத தியாகுவுக்கு ஆன்மீகமும் அமைதி தரவில்லை. தியாகுவிடம் உள்ள எழுத்துத் திறமையை அறிந்த அவரது ஆன்மீக குரு எழுதுவதற்கு தியாகுவை ஊக்கப்படுத்துகிறார். "நீ சாதாரண மனிதனாக வாழ்ந்து உன் எழுத்து திறமையை மக்களிடம் நிரூபித்து அமைதி தேடு..." என்று அறிவுரை கூறுகிறார். அதனை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வரும் தியாகு, ஜெர்மனி பெண்ணான மதுராவை சந்திக்கிறான்.  மதுராவுடன் ஏற்படும் நட்பு,  பின்னர் காதலாக மலர்கிறது. சில சமூக விரோதிகள் மதுராவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடும்போது கீழே விழுந்து மதுரை இறந்து வ...
சார் _ விமர்சனம்

சார் _ விமர்சனம்

Reviews
சார் _ விமர்சனம் ஆதிக்க சக்தியை சேர்ந்த கிராமத்தலைவர், தன் ஊரில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பெரும் தடையாக இருக்கிறார். இவரை மீறி மக்களுக்கு எழுத்தறிவிக்க துணியும் ஆசிரியர்கள் படும் அ வஸ்த்தைதான் சார் திரைப்படம். ஊர் தலைவரின் எதிர்ப்பை மீறி விமலின் தாத்தா பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்ட , அவரை பைத்தியமாக்கி அமர வைத்து விடுகிறார்கள் ஆதிக்க சக்தியினர். விமலின் தந்தை பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்த முயல அவரையும் பைத்தியமாக்கி விடுகிறார்கள். வேறு ஊரில் உள்ள பள்ளியிலிருந்து மாற்றலாகி சொந்த ஊரில் உள்ள இந்த பள்ளிக்கு வருகிறரார்  நாயகன் விமல். அவருக்கும் ஊர் தலைவரின் வாரிசுகள் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு பள்ளியை நடத்திவிடாமல் செய்ய முயலுகின்றனர். இதை மீறி விமல் எவ்வாறு சாதித்தார் என்பதை விளக்குகிறது சார் திரைப்படம். விமலின் உடைகள் அந்தக் காலத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு...

பிளாக் _ விமர்சனம்

Reviews
பிளாக் _ விமர்சனம் தம்பதிகளான ஜீவா, பிரியா பவானி சங்கர் இருவரும் தாங்கள் வாங்கி இருக்கும் புதிய வீட்டில்  ஐந்து நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் திட்டமிட்டு அங்கு செல்கின்றனர். கடற்கரைக்கு வெகு சமீபத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அந்த குடியிருப்பில் அதுவரை யாருமே குடி வரவில்லை. அடுக்குமாடி குடியிருப்பாக அல்லாமல் தனித்தனி வில்லாவாக அமைந்துள்ள பகுதி அது. அங்கு நுழையும் போதே ஒருவித அமானுஷ்யத்தை உணர்கிறார் ஜீவா. திடீரென மின்தடை ஏற்படவே ஜீவா பிரியா பவானி சங்கர் இருவருமே கிளப் ஹவுஸ் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜெனரேட்டரை ஆன் செய்கிறார்கள்.  இதைத்தொடர்ந்து சில திகிலான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. யாருமே இல்லாத எதிர் வீட்டில் திடீரென்று விளக்கு எரிவது கண்டு இருவரும் அங்கு சென்று பார்க்கும்போது அதிர்ச்சியில் உறைகிறார்கள். காரணம் அச்சு அசலாக தங்களைப் போலவே தோற்றமளிக்கும் மற்றொரு ஜோடி அதாவ...