Wednesday, November 18

Reviews

ஆரகன் _ விமர்சனம்

ஆரகன் _ விமர்சனம்

Reviews
ஆரகன் விமர்சனம் தவம் இருக்கும் முனிவர் ஒருவரை விஷப்பாம்பு ஒன்று கொத்த வருகையில், அவரது சீடன் முனிவரை காப்பாற்றுகிறார். உயிரைக் காப்பாற்றிய சீடனுக்கு என்ன வரம் வேண்டும் என முனிவர் கேட்க, அந்த சீடனோ எப்போதும் இளமையாக இருப்பதற்கு வரம் கேட்கிறான். அடுத்ததாக காலில் இரும்புச் சங்கிலி பிணைக்கப்பட்ட முதிய பெண் ஒருத்தி (கலைச்செல்வி) அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மூன்றாவதாக இளம் காதல் ஜோடியை பற்றிய கதை. காதலனாக மைக்கேல் தங்கதுரையும், காதலியாக கவிப்பிரியாவும் வருகின்றனர். பிரதான கதையாக நீள்கிறது இந்த காதல் ஜோடியின் கதை. திருமணத்திற்கு பின் சொந்தமாக வியாபாரம் நடத்தி வசதியாக வாழ நினைக்கும் காதலன் மைக்கேல் தங்கதுரை சில லட்சங்களை கையில் வைத்திருக்கிறார். மேலும் ஓரிரு லட்சங்கள் தேவைப்படுகிறது. எனவே காதலி கவிப்பிரியா வேலைக்கு சென்று அதை சம்பாதிக்க முடிவு செய்கிறார். வனாந்தர மலைப்பகுதியில் தன...
செல்லக்குட்டி _ விமர்சனம்

செல்லக்குட்டி _ விமர்சனம்

Reviews
செல்லக்குட்டி _ விமர்சனம் 1990ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறும் கதைதான் செல்லக்குட்டி. ஒரே பள்ளியில் டிட்டோ, மகேஷ் மற்றும்  தீபிக்‌ஷா மூவரும்  பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். டிட்டோவும் மகேஷும் இணை பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள். கவிதை எழுதுவதிலும் படங்கள் வரைவதிலும் திறமைசாலியாக திகழ்கிறார் மகேஷ். தாய், தந்தை இல்லாத மகேஷ் மீது தீபிக்‌ஷா அனுதாபத்துடன் அன்பு செலுத்த, அதை காதல் என்று புரிந்துக்கொள்ளும் மகேஷ், அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஆனால், தீபிக்‌ஷாவுக்கோ மகேஷின் நண்பர் டிட்டோவின்மீதுதான் ஈடுபாடு. மகேஷ்  தீபிக்‌ஷாவிடம் தனது காதலை சொல்ல, அதை தீபிக்‌ஷா நிராகரித்து விடுகிறார். காதலால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத மகேஷ்,  பொதுத் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார். மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள். ஒரு கட்டத்த...

மெய்யழகன் _ விமர்சனம்

Reviews
மெய்யழகன் _ விமர்சனம் நடிப்பு: கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, சுவாதி, ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு மற்றும் பலர் தயாரிப்பு : 2D என்டர்டைன்மெனட் சூர்யா ஜோதிகா இசை: கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜ் இயக்கம்: சி. பிரேம் குமார் பிஆர்ஓ : ஜான்சன் காதல் காட்சிகள் இல்லாமல், டூயட் பாட்டுகள் இல்லாமல், அதிரடி சண்டை காட்சிகளும் இல்லாமல் தரமான ஒரு படத்தை சுவைபட தர முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். தஞ்சை மாவட்டத்தின்  நீடாமங்கலத்தில் இருக்கும் தங்கள் பாரம்பரிய வீட்டையும்,  சொத்துக்களையும் குடும்ப தகராறு காரணமாக இழந்து சென்னையில் குடியேறுகிறது அரவிந்த்சாமியின் குடும்பம். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தங்கை உறவு முறையில் உள்ள ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அரவிந்த்சாம...

சட்டம் என் கையில் _ விமர்சனம்  

Reviews
  சட்டம் என் கையில் _ விமர்சனம் துவக்கத்திலிருந்து இறுதிவரை இப்படி ஒரு விறுவிறுப்பான படத்தை பார்த்து எவ்வளவு காலம் ஆயிற்று? ஒரே இரவில் நடக்கும் அட்டகாசமான அதிரடி த்ரில்லர் சட்டம் என் கையில். ஏற்காடு மலை... இரவு நேரம்...  ஏதோ சிந்தனையுடனும், ஒருவகை  பரபரப்புடனும் மது அருந்தியபடி காரை ஓட்டிக்கொண்டு வருகிறார் சதீஷ். காரிருள் நேரத்தில் எதிரே வந்த பைக் மீது சற்றும் எதிர்பாராமல் கார் மோதுகிறது. பைக் ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணடைகிறார். பயத்தில் என்ன செய்வது என்று புரியாத நிலையில் இறந்தவரின் உடலை உடலை தனது கார் டிக்கியில் ஏற்றி பயணத்தைத் தொடர்கிறார் சதீஷ். இடையில் போலீஸ் செக் போஸ்ட்... திடீரென டென்ஷன் ஆனால் வார்த்தைகள் குளறி வாய் திக்குவது சதீஷ்க்கு ஏற்படும் வழக்கம். இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் போது சதீஷுக்கு வாய் திக்குவதால் இன்ஸ்பெக்டர் திக்குவாயன் என்று  சொல்ல ...
லப்பர் பந்து _ விமர்சனம்

லப்பர் பந்து _ விமர்சனம்

Reviews
லப்பர் பந்து: விமர்சனம் இன்னும் ஒரு கிரிக்கெட் படமா என்று ஆரம்பத்தில் சற்று அயற்சி தோன்றினாலும் இது முற்றிலும் மாறுபட்ட ரசிக்கத் தகுந்த கிரிக்கெட் படமாக மலர்ந்திருக்கிறது. ஜாலி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் குழுவின் தலைவன் காளி வெங்கட். தனது ஊரில் உள்ள இந்த கிரிக்கெட் குழுவில் விளையாட வேண்டும் என்பது சிறு வயது முதலே ஹரிஷ் கல்யாண் ஆசை. ஹரிஷ் கல்யாண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை காரணம் காட்டி அவரது கிரிக்கெட் ஆசையில் மண்ணை போடுகிறார்  வைஸ் கேப்டன். இதேபோல் மற்றொரு ஊரில் உள்ள கிரிக்கெட் குழுவில் விளையாடும் அட்டக்கத்தி தினேஷ் கெத்து என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். கைக்குட்டையை சுருட்டி பேட்டின் கைப்பிடியை சுற்றி கெத்து காட்டுவதில் துவங்கி, மட்டையை சுழற்றி பந்தை அடிப்பது வரை கெத்து காட்டுவது இவரது ஸ்பெஷாலிட்டி. கெத்துவின் மனைவிக்கோ கணவன் கிரிக்கெட் விளையாட செல்வது பிடிக்காது. ஆயினு...
கோழிப்பண்ணை செல்லதுரை _ விமர்சனம்

கோழிப்பண்ணை செல்லதுரை _ விமர்சனம்

Reviews
கோழிப்பண்ணை செல்லதுரை _ விமர்சனம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும்  நடுத்தர குடும்பம். திருமணத்தை மீறிய உறவு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார் குடும்பத்தலைவி. இதனால் வெறுப்படைந்த குடும்பத்தலைவர், இரண்டு பிள்ளைகளையும் நிர்க்கதியாக விடுகிறார். அந்த பிள்ளைகள்... பதினோரு வயது சிறுவன், எட்டு வயது சிறுமி... இருவரும் தூரத்து சொந்தமான பெரியப்பாவிடம் அடைக்கலமாகிறார்கள். பெரியப்பாவின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து, தங்கையை கல்லூரிவரை படிக்கவைக்கிறான் அண்ணன். பிரிந்து சென்ற தாய், தந்தையை ஒரு நாள் சந்திக்கறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை. தென் மேற்கு பருவகாற்று படத்தில் விஜய் சேதுபதியை அடையாளம் காட்டியதுபோல இந்த படத்தில் ஏகனை அடையாளம் காட்டி இருக்கிறார் சீனு ராமசாமி. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு. வாழ்த்துகள். ஜெயசுதா, பிரிகிடா சகா...
நந்தன் _ விமர்சனம்

நந்தன் _ விமர்சனம்

Reviews
நந்தன் _ விமர்சனம் பஞ்சாயத்து தேர்தல்களில் பட்டியலின மக்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்று அரசாங்கமே ரிசர்வ் தொகுதி என ஒதுக்கி கொடுத்தாலும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட முடியாமலும், போட்டியிட்டால் ஆதிக்க சக்திகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையும் அப்பட்டமாக விவரிக்கும் படம் நந்தன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணங்கான்குடியின் ஊராட்சி மன்ற தலைவராக ஆதிக்க ஜாதியை சேர்ந்த கோப்புலிங்கம் குடும்பமே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம் திடீரென வணங்கான் குடி கிராமத்தை தனி தொகுதியாக அறிவித்து விடுகிறது. இதன் காரணமாக கோப்புலிங்கம் தன் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அம்பேத்குமாரை தலைவர் பதவிக்கு போட்டியிட செய்கிறார். கோப்பு லிங்கத்தையே தெய்வமாக நினைத்து, அவரது வாக்கையே வேதவாக்காக நினைக்கும் அம்பேத்குமார் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி ப...
நந்தன் _ விமர்சனம்

நந்தன் _ விமர்சனம்

Reviews
பஞ்சாயத்து தேர்தல்களில் பட்டியலின மக்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்று அரசாங்கமே ரிசர்வ் தொகுதி என ஒதுக்கி கொடுத்தாலும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட முடியாமலும்,  போட்டியிட்டால் ஆதிக்க சக்திகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையும் அப்பட்டமாக விவரிக்கும் படம் நந்தன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  வணங்கான்குடியின் ஊராட்சி மன்ற தலைவராக ஆதிக்க ஜாதியை சேர்ந்த கோப்புலிங்கம் குடும்பமே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம் திடீரென வணங்கான் குடி கிராமத்தை தனி தொகுதியாக அறிவித்து விடுகிறது. இதன் காரணமாக கோப்புலிங்கம் தன் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அம்பேத்குமாரை தலைவர் பதவிக்கு போட்டியிட செய்கிறார். கோப்பு லிங்கத்தையே தெய்வமாக நினைத்து,  அவரது வாக்கையே வேதவாக்காக நினைக்கும் அம்பேத்குமார் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரா...
ARM விமர்சனம்

ARM விமர்சனம்

Reviews
'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்' (ARM) விமர்சனம் மூன்று தலைமுறை வரலாறு, அமானுஷ்யம், சமூக நிகழ்வுகள் என அனைத்தையும் கலந்து, சுவாரஸ்யமாக. திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் படம்தான்  ARM அதாவது 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்'. கேரள மாநிலத்தின் ஒரு சின்ன கிராமம். அங்கு பாட்டி, தாய் ஆகியோருடன் வசிக்கிறார், இளைஞர், அஜயன். எலக்ட்ரிக் வேலைதான் அவர் தொழில். அவ்வப்போது மாணவர்களுக்கு பாடமும் சொல்லித் தருகிறார். ஆனால் சாதி ரீதியாகவும், திருட்டுப் பரம்பரை என்றும் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்படுகிறார். அந்த ஊர் ஜமீன் குடும்பத்துப் பெண்ணான லட்சுமிக்கும் இவருக்கும் காதல். இந்த நிலையில் கிராமத்து கோயிலைப் படமெடுக்க வந்திருக்கும் சுதேவ், ஊர் கோவிலில் உள்ள அதிசய விளக்கை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. மூன்று கெட் அப்களில் வருகிறார், டொவினோ தாமஸ். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும...
செம்பியன் மாதேவி _ விமர்சனம்

செம்பியன் மாதேவி _ விமர்சனம்

Reviews
செம்பியன் மாதேவி _ விமர்சனம் கிராமத்து இளைஞனும், பெண்ணும் காதலிக்க.. சாதி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை சொல்கிறது செம்பியன் மாதேவி திரைப்படம். செம்பியன் என்கிற சிறிய கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டு விரிகிறது காட்சிகள். நாயகன் வீராவுக்குச் சொந்தமான கோழிப்பண்ணை இருக்கிறது. அதில் முதியவர் ஒருவர் வேலை பார்க்கிறார். அவரது மகள் மாதேவியை காதலிக்கிறார் வீரா. சாதி பிரச்சினை காரணமாக, ஆரம்பத்தில் காதலை மறுக்கும் மாதேவி, பிறகு நாயகனின் தூய்மையான அன்பை உணர்ந்து காதலிக்கத் துவங்குகிறார். இருவரும் காதல் வானில் மிதக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஈருடல் ஓருடலாக.. நாயகி கர்ப்பமாகிறார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார். ஆனால் நாயகன் மறுத்துவிடுகிறார். அவர் ஏன் மறுத்தார்? அதன் பிறகு என்ன ஆனது என்பதே செம்பியன் மாதேவி படத்தின் கதை. வீராவாக வரும் நாயகன் லோகு பத்மநாபன், நிஜமான கிராமத்து ...