Wednesday, November 18

Reviews

வாழை _ விமர்சனம்

வாழை _ விமர்சனம்

Reviews
வாழை _ விமர்சனம் Vaazhai Movie Review தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சம்பவங்களை அழகான திரைமொழியில் அற்புதமாகச்  சொல்லி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். இங்கு, விவசாய கூலி வேலை குடும்பம். குடும்பத் தலைவர் மறைந்துவிட்ட நிலையில், தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் வாழ்கிறான் சிறுவன் சிவனைந்தன். அம்மாவும், அக்காவும் லாரியில் சென்று, வாழைத் தோட்டங்களில், அறுக்கப்பட்ட வாழைத் தார்களை தலையில் சுமந்து வந்து சேர்க்கும் கூலி வேலை செய்கின்றனர். சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை தினங்களில் சிவனைந்தனும் செல்கிறான். அவனுக்கு அந்த வேலை பிடிப்பதில்லை. அத்தனை கடினம். தவிர சிறுவன் என்பதால் விளையாடும் ஆர்வம் இருக்கும் அல்லவா... ஒரு சனிக்கிழமை அன்று தாய்க்கு தெரியாமல், வாழைத்தோட்ட வேலைக்கு டிமிக்கி கொடுக்கிறான் சிறுவன் சிவனைந்தன். ஆனால் அக்காவிடம் மட்டும் சொல்லி அனுமத...
சாலா _ விமர்சனம்

சாலா _ விமர்சனம்

Reviews
சாலா _ விமர்சனம் சென்னையின் டெரர் ஏரியாவாகவே, திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வடசென்னை ஏரியாதான் இந்தப் படத்தின் கதைக்களமும். இங்கு பல வருடங்களாக பிரபலமாக விளங்கி வருகிறது பார்வதி பார். இதை நடத்தும் தாதாவுக்கு, குடும்பம் இல்லை. ஒரு சமயம், தன்னைக் காப்பாற்றும் சிறுவனை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த சிறுவன்தான் சாலா. வளர்ந்த பிறகும் தனக்கு ஆதரவளித்த பார்வதி பார் உரிமையாளர் அருள்தாஸ் மீது அதே பாசத்துடன் இருக்கிறார் சாலா. மதுக்கூடத்தை  கவனித்துக்கொள்கிறார். இந்நிலையில் பார் குறித்து பிரச்சினை ஏற்பட.. வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பார் மூடப்படுகிறது. அதைக் கைப்பற்ற இன்னொரு தாதா டீம் முயற்சிக்கிறது. இதனால் மோதல் ஏற்படுகிறது. இன்னொரு புறம் மதுவை எதிர்த்துப் போராடும் மலர் டீச்சரை காதலிக்கிறார் சாலா. அவர்கள் காதல் என்ன ஆனது... மலர் டீச்சரின் எண்ணம் நிறைவேறியதா, பார் பிரச்சினை எப்ப...
போகுமிடம் வெகு தூரமில்லை _ விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை _ விமர்சனம்

News, Reviews
போகுமிடம் வெகு தூரமில்லை _ விமர்சனம் அடுத்தவருக்கு உதவுவதே உன்னதமான வாழ்க்கை என்பதை உள்ளம் நெகிழச்சொல்லும் படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை மனைவியை பிரசவத்துக்காக, மருத்துவமனையில் சேர்த்துவிட்டு குழந்தையின் பிறப்புக்காக திக் திக் என்ற மனநிலையுடன் காத்திருக்கிறார் விமல். இந்நிலையில், பிரசவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை யாருக்கோ உதவியாக மனைவி கொடுத்ததும், பணம் வாங்கியவர் உரிய நேரத்தில் திரும்பக் கொடுக்காததும் அவருக்குத் தெரிய வருகிறது. அதிர்ந்து போகிறார் விமல்.  அமரர் ஊர்தி ஓட்டுநரான அவருக்கு, சென்னையில் இருந்து ஓர் உடலை, நெல்லைக்குக் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. பணம் கிடைக்குமே என்று ஒப்புக்கொள்கிறார். இறந்து போனவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் ஆடுகளம் நரேன், இரண்டாவது மனைவியின் மகன் பவன். இவர்களுக்குள், தந்தையான் உடலுக்கு யார் இறுதிச் சடங்கு செய்வது என்பதில...
வேதா _ விமர்சனம்

வேதா _ விமர்சனம்

Reviews
வேதா _ விமர்சனம் என்னதான் அறிவியல் யுகத்தில் வாழ்கிறோம் என பெருமைப்பட்டுக் கொண்டாலும், இன்னமும் சாதீய ஏற்றத்தாழ்வு கொடுமைகள் நிகழ்ந்தபடிதான் உள்ளன என்பதை சொல்லும் படம் வேதா. வட இந்தியாவின் பின்தங்கிய கிராமம். இந்த காலத்திலும் சாதிய அடிமை முறை நிலவுகிறது. சுற்றுப்பட்டு கிராமங்களை அடக்கிவைத்திருக்கும் ஜமீன் குடும்பத்தின் எதேச்சகாரம் தூள் பரத்துகிறது. இங்கே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், குத்து சண்டை கற்க விரும்புகிறாள். அவளது அண்ணனும்,  ஓர் உயர் சாதி பெண்ணும் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன ஆனது என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கும் படம்தான் வேதா. ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக, தனது வர்க்க வலியை கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஷர்வாரி. சாதி இழிவுக்கு ஆளாவது, அதிலிருந்து மீள போராடுவது, அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் என இந்தப் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ...
வீராயி மக்கள் _ விமர்சனம்

வீராயி மக்கள் _ விமர்சனம்

Reviews
வீராயி மக்கள் _ விமர்சனம் வேல ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் சகோதரர்கள். இருவருக்குள்ளும் ஈகோ - பகை. பேசிக்கொள்வது இல்லை. இந்த பகை, அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது. இந்த நிலையில், வேல.ராமமூர்த்தியின் மகன்களில் ஒருவரான (நாயகன்)  சுரேஷ் நந்தா.  இரண்டு குடும்பங்களுக்குள் நிலவும் பகையை முடித்துவைக்க முயல்கிறார். இந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதே வீராயி மக்கள் திரைப்படம். வேல ராமமூர்த்தி தனது வழக்கமான பாணியில் செயற்கைத்தனமான ஆத்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது தம்பியாக வரும் (மறைந்த) மாரிமுத்து வழக்கம்போல, இயல்பாக தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கவர்கிறார். படத்தின் நாயகன் என்றாலும், அடக்கிவாசித்திருக்கிறார் சுரேஷ் நந்தா. பிரிந்து கிடக்கும் குடும்பங்களை ஒன்று சேர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன. காதல், மோதல் காட்சிகளிலும் நிறைவான நடிப...
அந்தகன் _  விமர்சனம்

அந்தகன் _  விமர்சனம்

Reviews
அந்தகன் _  விமர்சனம்  இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தில் தமிழ்ப் பதிப்புதான் அந்தகன். ஆனால் இதை ரீமேக் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிற்பபாக ரீமேட் செய்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன். பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர். தன்னை பார்வையற்றவராக பிறர் நம்பினால், தனது இசைத் திறமைக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறார். ஆகவே பார்வையிழந்தவர் போல் நடிக்கிறார். இந்த நிலையில், ஒரு கொலையை "பார்த்து" விடுகிறார் பிரசாந்த். கொலையாளிகள், "இவர் பார்வையற்றவர்தானே" என்று விட்டுவிடுகிறார்கள். பிறகு சந்தேகம் ஏற்படவே, அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை நிஜமாகவே பார்வையற்றவராக ஆக்கிவிடுகிறார்கள். இந்த நிலையில், பிரசாந்தின் கிட்னியை எடுத்து விற்க "டாக்டர்" குழு ஒன்று திட்டமிடுகிறது. மறுபுறம், கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். பிரசாந்துக்கு என்ன ஆனது என்பதே சுவாரஸ்யமான மீதிக்...
பேச்சி _  திரை விமர்சனம் 

பேச்சி _  திரை விமர்சனம் 

Reviews
பேச்சி _  திரை விமர்சனம்  அடர்ந்த மலை வனத்தில், பேச்சி என்கிற கொடூர சக்தியிடம் சிக்கும் ஐந்து பேரின் கதைதான் பேச்சி. டிரெக்கிங் செய்வதில் ஆர்வம் உள்ள ஐந்து பேர், நெடிதுயர்ந்து நிற்கும் மலை ஒன்றில் டிரெக்கிங் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக வருகிறார் வனத்துறை கடை நிலை ஊழியர். இந்த ஊழியர், காட்டுப் பகுதியில் உள்ள சில இடங்கள் ஆபத்தானவை என்றும் அங்கே செல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த  நண்பர்கள் குழு அதைக் கேட்காமல், 'பேச்சி' என்கிறஅமானுஸ்ய சக்தி உள்ள பகுதிக்குள் சென்றுவிடுகிறார்கள். மரத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருக்கும் பேச்சி, மீண்டும் சக்தி பெற்றி வெளியே  வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை திகிலாச் சொல்லி இருக்கிறார்கள். வனத்துறை கடை நிலை ஊழியராக வருகிறார் பால சரவணன். எப்போதுமே இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர். இதிலும் அதே போல ரசிக்கவைக்கிறார். மலையேற ...
போட்  _  திரைப்பட விமர்சனம்

போட் _ திரைப்பட விமர்சனம்

Reviews
போட் _ திரைப்பட விமர்சனம் 1943ம் ஆண்டு... ஆங்கிலேயர் ஆட்சி காலம்.. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டு இருக்கிறது... வெள்ளையர்களின் ஆட்சியில் இருக்கும் சென்னையின் மீது குண்டு மழை வீசத் தயாராகிறது, எதிர்த் தரப்பில் இருக்கும் ஜப்பான். இதனால் பெரும்பாலான மக்கள், தங்கள் சொத்து சுகத்தை விட்டுவிட்டு வெளியேறுகின்றனர். வெட்ட வெளியில்தான் நீதிமன்றம், காவல் நிலையம், மருத்துவமனை எல்லாம் நடக்கின்றன. இந்த நிலையில், மீனவரான யோகி பாபு கடற்கரையில் செயல்படும் காவல் நிலையத்துக்கு தனது பாட்டியுடன் வருகிறார். சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேயரின் விசாரணையில் இருக்கும் தனது தம்பியை மீட்பதுதான் அவரது திட்டம். அந்த நேரத்தில் வானில் விமானங்கள் பறந்து வர... ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்று அலறியடித்து ஓடுகிறார்கள் மக்கள். மீனவர் யோகிபாபு ஒரு திட்டம் போடுகிறார். கடலுக்குள் போட்டில் சென்று...
வாஸ்கோடகாமா’ திரைப்பட விமர்சனம்

வாஸ்கோடகாமா’ திரைப்பட விமர்சனம்

Reviews
'வாஸ்கோடகாமா' திரைப்பட விமர்சனம் நகுல் ,அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார்,முனீஷ்காந்த் ராம்தாஸ், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி,மதன்பாப்,நமோ நாராயணா ,ஆர். எஸ் .சிவாஜி, லொள்ளு சபா சேஷு ,பயில்வான் ரங்கநாதன் , படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். சதீஷ்குமார் என். எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார்.அருண் என்.வி இசையமைத்துள்ளார்.5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். நாட்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகுவதை நினைத்து கலிகாலம் முற்றிவிட்டது என்பார்கள். அநியாயம் அதிகரிக்கின்ற இந்த யுகத்தையே கலியுகம் என்று கூறுகிறார்கள். இதில் விரோதங்களும் குரோதங்களும் துரோகங்களும் அதிகரித்து இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே நிலை எப்படி மாறி இருக்கும் என்கிற...
ராயன் _ விமர்சனம்

ராயன் _ விமர்சனம்

Reviews
பவர் பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ராயன். பெற்றோர் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், தனது இரு தம்பிகள் மற்றும் ஒரு தங்கையுடன் சென்னைக்கு வருகிறான் சிறுவன் ராயன் (தனுஷ்). மார்க்கெட்டில் வேலை பார்த்து, தம்பி தங்கையை காப்பாற்றுகிறான். வளர்ந்து, பாஸ்ட் புட் கடை வைக்கிறான். சின்ன தம்பி கல்லூரியில் படிக்க.. பெரிய தம்பி வெட்டியாக ஊர் சுற்றுகிறான். தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ராயன் திட்டமிடுகிறார். அப்போது அந்த பகுதியில் இரண்டு கேங்ஸ்டர்களான சேது மற்றும் துரை இருவரும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். , இந்த இரு ரவுடிகளையும் ஒழித்துக் கட்ட... அவர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடுகிறார் காவல் அதிகாரி ஒருவர். இவர்களுக்கு இடையில் எதிர்பாராத விதமாக சிக்கிவிடுகிறார் ராயனின் தம்பி. தம்பியை காப்பாற்ற, ராயன...