Wednesday, November 18

Reviews

இந்தியன் 2 _  விமர்சனம்

இந்தியன் 2 _  விமர்சனம்

Reviews
இந்தியன் 2 _  விமர்சனம் 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்த இந்தியன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஊழல் வாதிகளை களையெடுக்கும் இந்தியன் (தாத்தா), இதே குற்றச்சாட்டில் சிக்கும் தனது மகனையும் களையெடுப்பார். காவல்துறையினர் இவரை தேட வெளி நாட்டுக்குத் தப்பிவிடுவார். அவர் மீண்டும் இந்தியா வந்து, மறுபடி களையெடுக்கத் துவங்குவதுதான் இந்தியன் 2. 'பார்க்கிங் டாக்ஸ்' என்கிற பெயரில் யூடியூப் சேனலை சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜகன் ஆகியோர் நடத்துகின்றனர். நாட்டில் நடக்கும் லஞ்ச, ஊழல், அரசு தரப்பினரின் அலட்சியம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில், யூடியூப் வீடியோக்களால் பயனில்லை.. இந்தியன் தாத்தா திரும்பவந்து களையெடுக்க ஆரம்பித்தால்தான் நல்லது நடக்கும் என நினைக்கின்றனர். உடனே #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்கி, நாட்டில் நடக்கும் அநீதிகளை பதிவிடுகின்...
7G _ விமர்சனம்

7G _ விமர்சனம்

Reviews
7G விமர்சனம் ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ரோஷன் - ஸ்ம்ருதி வெங்கட் தம்பதி, தங்கள் மகனுடன், புதிதாக வாங்கியிருக்கும் அபார்ட்மெண்ட வீட்டில் குடியேறுகிறார்கள். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ரோஷனை ஒரு தலை காதலிக்கும் ஸ்னேகா குப்தா தன் காதல் நிறைவேறாத ஆத்திரத்தில், விருந்துக்கு வருகிறார். வந்தவர், மாந்த்ரீக சூனிய பொம்மை ஒன்றை புது வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டுச் சென்று விடுகிறார். புதுவீட்டுக்கு குடி வந்த சில நாட்களிலேயே ரோஷனுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. பயிற்சிக்காக வெளியூர் சென்றுவிடுகிறார். ஸ்ம்ருதி வெங்கட்டும் தனது பணியை விட்டுவிட்டு, மகனுடன் அந்த வீட்டில் வசிக்கிறார். அப்போது அந்த வீட்டில் அமானுஷ்ய திகில் சம்பவங்கள் பலநடக்கின்றன. ஸ்மிருதி வெங்கட் பயத்தில் தவிக்கிறார். இதற்கிடையே பக்கத்து வீட்டுக்காரர்களான சுப்ரமணிய சிவாவு...
ககனாச்சாரி – மலையாளப்பட விமர்சனம்

ககனாச்சாரி – மலையாளப்பட விமர்சனம்

Reviews
ககனாச்சாரி – மலையாள சினிமா விமர்சனம் 2040-ம் வருடம் கதை நடக்கிறது… அந்தக் காலக்கட்டத்தில் பெய்த மழை, வெள்ளத்தினால் கேரள மாநிலத்தில் பெருமளவு நிலப்பரப்பு அழிந்துபோய் பூமிக்கு அடியில் மறைந்துவிடுகிறது. அப்போதைய ஆட்சியும் மக்களை ஒடுக்கி சர்வாதிகாரம் செய்கிறது. குடிமக்கள் ஒவ்வொருவரையும், தீவிரமாக கண்காணிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் அரசின் உளவு கருவி பொருத்தப்பட்டுகிறது. இதன் மூலம் காவல்துறை, மக்களை வேவு பார்க்கிறது. இந்த நிலையில், மக்களை காப்பாற்ற வேற்றுக் கிரகவாசிகளை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கே.பி.கணேஷ்குமார், ஏலியன்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான கட்டிடத்தில் தனது உதவியாளர்களான கோகுல் சுரேஷ் மற்றும் அஜூ வர்க்கீஸூடன் மறைந்து வாழ்கிறார். முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் குறித்து ஆவணப் படம் தயாரிப்...
கல்கி — விமர்சனம்

கல்கி — விமர்சனம்

Reviews
கல்கி -- விமர்சனம் இந்திய திரையுலக வரலாற்றில் பிரம்மாண்டமான புராண + சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக வெளியாகி இருக்கிறது, கல்கி. மகாபாரதப் போர் நடக்கிறது. கெளரவர்கள் சார்பாக போரிடும், அஸ்வத்தாமன், பாண்டவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தையை தாயின் வயிற்றிலேயே கொல்கிறார். இதனால் ஆத்திரமான கிருஷ்ண பகவான், அஸ்வத்தாமாவுக்கு சாகாவரத்தை சாபமாக அளிக்கிறார். மேலும், “கலியுகத்தில் நான் மீண்டும் அவதாரம் எடுப்பேன். அப்போது நீ என்னை காப்பாற்றினால் மட்டுமே தனது இந்த சாபத்தில் இருந்து மீள்வாய்” என பாப விமோசனம் சொல்கிறார். பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அது கி.பி. 2898ம் வருடம். பெரும் அழிவுக்குப் பிறகு, உலகத்தின் கடைசி நகரமாக மிச்சம் இருக்கிறது, காசி. அந்நகரை சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன் ) என்கிற கொடுங்கோலன் அரசாள்கிறான். தான் மட்டும் வசதியாக வாழ்ந்து, மக்களை வறுமையில் சிக்க வைத்து இர...
‘பயமறியா பிரம்மை’ _ விமர்சனம்

‘பயமறியா பிரம்மை’ _ விமர்சனம்

Reviews
‘பயமறியா பிரம்மை’ _ விமர்சனம் கொலையை செய்யும் கொலைகாரர்கள் தாங்கள் செய்த கொலையை நியாயப்படுத்துவதை படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் தான் செய்த கொலைகளை கலை என்று சொல்லும் ஒரு கொலைகாரனைப் பற்றிய படம்தான் ‘பயமறியா பிரம்மை' சாகித்திய அகாடமி விருது பெற்ற  எழுத்தாளர் கபிலன், கொடூர சிறைக்கைதி ஜெகதீசை சந்திக்கிறார். அவன், 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்தவன். அவன் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதே எழுத்தாளர் கபிலனின் எண்ணம். எழுத்தாளர் கபிலன் தன்னுடையஎழுத்துகளைப் படைப்புகள் என சொல்ல.. கொலைகாரன் ஜெகதீசும், தன்னுடைய கொலைகளும் படைப்புகள் என்கிறான். மேலும், தான் செய்த ஒவ்வொரு கொலையையும் விளக்கிச் சொல்கிறான். அதை ஜெகதீஷின் தோற்றத்தை வைத்துச் சொல்லாமல், புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களின் முகத்தை வைத்து சொல்கிறார்கள். எழுத்தாளராக வரும் வினோத் சாகர், கைதியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஜெடி, ...
லாந்தர் _ விமர்சனம்

லாந்தர் _ விமர்சனம்

Reviews
லாந்தர் _ விமர்சனம் விதார்த் நடிப்பில், ஷாஜி சலீம் இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் ‘லாந்தர்’ . கோவை மாநகரில் உதவி காவல் ஆணையராக பணிபுகிரிறார் அரவிந்த் (விதார்த்). இவர், மிக நேர்மையான அதிகாரி. ஒரு நாள் இரவு கருப்பு ரெயின் கோட் அணிந்த ஒரு சைக்கோ மனிதன் ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி கண்ணில் படுவோரை எல்லாம் கொடூரமாகத் தாக்கி வருகிறான். இவனைப் பிடிக்கும் முயற்சியில் சில காவல் அதிகாரிகளும் படுகாயம் அடைகிறார்கள். ஒருவன் மீது சந்தேகம் அடைந்து விரட்டி செல்கின்றனர் காவலர்கள். அவனோ, காவல் துறை வாகனம் மோதி இறந்துவிடுகிறான். அதன் பிறகும் கொலைகள் தொடர்கின்றன. ஒரிஜினல் கொலைகாரன் பட்டுக்கோட்டையில் இருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. அந்த சைக்கோ கொலைகாரனை விதார்த் பிடித்தாரா? கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். விதார்த் வழக்கம் போலவே சிறப்பாக நடித்து உள்ளார். க...
ரயில் _ விமர்சனம்

ரயில் _ விமர்சனம்

Reviews
ரயில் _ விமர்சனம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ்,வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ்வைத்யா , செந்தில் கோச்சடை உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ரயில். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஜே.ஜனனி இசையமைத்து உள்ளார். சிறு கிராமத்தில் மனைவியுடன் வசிக்கிறான் நாயகன். குழந்தை இல்லை. நாயகனுக்கு எலக்ட்ரீசியன் தொழில். ஆனால், தொழிலைவிட குடிப்பதையே முக்கியமாக கருதி நண்பனுடன் விட்டேத்தியாக திரிகிறான். இவன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கிறான், வடக்கில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் இளைஞன். அவனுடன் தன் மனைவி பேசுவது, நாயகனுக்கு பிடிக்கவில்லை. தவிர வட இந்தியர்களால்தான் தன்னைப் போன்ற மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என நினைக்கிறான். ஒரு கட்டத்தில் வட இந்திய இளைஞனை கொலை செய்ய திட்டமிடுகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை. ...
மகாராஜா _ விமர்சனம்

மகாராஜா _ விமர்சனம்

Reviews
மகாராஜா _ விமர்சனம் சிறிய முடிதிருத்கம் ஒன்றில் வேலை பார்க்கிறார் மகாராஜா (விஜய் சேதுபதி). அவரது மனைவி விபத்தில் மரணடைந்துவிட, மகள் ஜோதி (சச்சனா)யை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி வளர்க்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மகள், ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கிறார் மகாராஜா. அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். இரவு, வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து ‘லக்ஷ்மி’யை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் கூறுகிறார். ஆரம்பத்தில் புகாரை காவலர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ரூ.7 லட்சம் வரை (லஞ்சம்) கொடுப்பதாக மகாராஜா சொல்ல.. காணாமல் போன ‘லக்ஷ்மி’யை கண்டுபிடிக்க, களம் இறங்குகின்றனர் காவலர்கள். யார் இந்த லக்ஷ்மி, மகராஜாவின் நோக்கம் என்ன, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை. சலூன் கடை ஊழியர், ...
அஞ்சாமை _ விமர்சனம்

அஞ்சாமை _ விமர்சனம்

Reviews
அஞ்சாமை _ விமர்சனம் இந்தியா முழுதும் மருத்துவ கல்வியில் சேர்வதற்காக ஒன்றிய அரசு, ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை அமல்படுத்தியதை அடுத்து, தமிழ்நாட்டில் ஏற்பட்டபிரச்சினை- அதனால் பறிபோன உயிர்கள் - பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த விவகாரத்தை பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறது அஞ்சாமை திரைப்படம். தமிழ்நாட்டின் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராமத்தில் வாழ்கிறது 'சர்க்கார்' என்பவரது எளிய விவசாய குடும்பம். சர்க்காரின் மகன், அருந்தவம் மருத்துவம் படிக்க விரும்புகிறார். அதற்காக புதிய நுழைவுத் தேர்வு ( நீட்) எழுத வேண்டிய கட்டாயம். தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையம் கேட்டவருக்கு, ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையம் கிடைக்கிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர், தனது தந்தை சர்க்காருடன் ஜெய்ப்பூர் புறப்படுகிறார். கடைசி நேரத்தில் தேர்வு உத்தரவு வந்த காரணத்தால் ரயிலில் இடம்...
தி அக்காலி _  விமர்சனம்

தி அக்காலி _  விமர்சனம்

Reviews
தி அக்காலி _  விமர்சனம் ஆங்கில பட பாணியில் ஹாரர் திரில்லர்  படமாக உருவாகி இருக்கும் படம்தான் தி அக்காலி காவல்துறைஅதிகாரி ஹன்ஸா ரஹ்மான் (ஜெயக்குமார்), போதைப் பொருள் கடத்தல் குறித்து புலனாய்வு செய்கிறார். கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்கள் காணாமல் போவதாக அல்லது களவு போவதாக செய்தி. கல்லறைகளில் போதைப் பொருள் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புலனாய்வு செய்யும் ஜெயக்குமார் அமானுஷ்யமான சில நடவடிக்கைகளை கண்டறிகிறார். இதைத் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணிக்க, அங்கே, சாத்தானை வழிபடும் குழு ஒன்று, வித்தியாசமான முறையில் பூஜை செய்வதோடு, நரபலியும் கொடுப்பதை அறிந்து அதிர்கிறார். அந்த நரபலி கும்பல் யார், எதற்காக அந்த கொடூர வழிபாடு என்பதை எல்லாம் அவர் கண்டு பிடித்தாரா என்பதே கதை. இந்தக் கதையை நேரடியாக சொல்லி இருந்தாலே திரில்லராக இருந்திருக்கும் என்ன காரணத்தினாலோ தலையைச் சுற்...