Wednesday, November 18

Reviews

டியர் _ விமர்சனம்

டியர் _ விமர்சனம்

Reviews
முதலில் ஒரு விசயத்துக்காக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரனை பாராட்ட வேண்டும். சமீபத்தில் வெளியான குட் நைட் படத்தைப் போலவே இதுவும் குறட்டை – அதனால் ஏற்படும் பிரச்சினையை சொல்லும் படம் என்றாலும், முற்றிலும் வித்தியாசமாக படத்தை் கொடுத்துள்ளார். ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து வரும் அர்ஜுன் (ஜி.வி. பிரகாஷ்) லேசா சத்தம் கேட்டாலும் எழுந்து விடும் பழக்கம் கொண்டவர். குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தீபிகா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தூக்கத்தில் முரட்டுத்தனமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். அதன் காரணமாகவே திருமணம் லேட்டாகி வருகிறது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிறது. குறட்டை பிரச்சினையை தீர்க்க, ஆளுக்கு ஒரு நாள் தூங்குவது என முடிவெடுக்கிறார்கள். அப்படி ஒருநாள் இரவு முழுதும் கண் விழிக்கிறார் பிரகாஷ் குமார். அதனால் மறுநாள் பேட்டி எடுக்க வேண்டிய நேரத்தில், டிவி அலுவலகத்தின் பாத்ரூ...
ஆலகாலம் – விமர்சனம்

ஆலகாலம் – விமர்சனம்

Reviews
ஆலகாலம் - விமர்சனம் தயாரிப்பு : ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : ஜெய கிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா ஷங்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர், பாபா பாஸ்கர் மற்றும் பலர். இயக்கம் : ஜெய கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு : கா சத்யராஜ் இசை : என். ஆர். ரகுநந்தன் எடிட்டர் காசி விஸ்வநாதன் வெளியீடு : ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ். பெரும்பாலான திரைப்படங்கள் குடியை ஒரு கொண்டாட்டமாகவும் கேளிக்கையாகவும் வெளிப்படுத்தி வரும் நிலையில் 'குடி குடியை கெடுக்கும்' என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதிய பொழிப்புரை தரும் வகையில் குடியை மையப்படுத்திக் கதை அமைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் 'ஆலகாலம்'. இப்படத்தை அறிமுக இயக்குநரும், நடிகருமான ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்து பார்க்கலாம். விழுப்புரத்திற...
வெப்பம் குளிர் மழை _ விமர்சனம்

வெப்பம் குளிர் மழை _ விமர்சனம்

Reviews
வெப்பம் குளிர் மழை விமர்சனம் என்னதான் அறிவியல் வளர்ச்சி பெற்ற காலம் என்றாலும் சில மூட நம்பிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக, குழந்தை பேறு இல்லை என்றால், “அதற்கு பெண்தான் காரணம்” என்று (தவறாக) தீர்மானித்து மலடி என கூறி, பெண் மனதை புண்படுத்துவது தொடரத்தான் செய்கிறது. இந்த பிரச்சினையை அடிப்படையாக வைத்து படத்தை அளித்து உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு தம்பதிக்கு, பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. ஊரும், மாமியாரும் அந்த பெண்ணை குற்றம் சொல்லி மனதை புண்படுத்துகிறார்கள். அப்பெண் தனது கணவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைக்கிறார். கணவனோ வர மறுக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வருகிறார். பரிசோதனையின் முடிவில் கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரியவருகிறது. மருத்துவத்தின் உதவியால் கணவனுக்கு தெரியாம...
நேற்று இந்த நேரம் – விமர்சனம்

நேற்று இந்த நேரம் – விமர்சனம்

Reviews
நேற்று இந்த நேரம் - விமர்சனம் ஜப்பானிய இயக்குனர் அகிரா குருசேவா இயக்கிய 'ரோஷமான்' சிவாஜி நடித்த 'அந்த நாள்' கமல் நடித்த 'விருமாண்டி' ஆகிய பட பாணியில் வந்திருக்கும் ஒரு புதுமைச் சித்திரம் 'நேற்று இந்த நேரம்'. அதாவது நடந்த சம்பவம் ஒன்றை வெவ்வேறு நபர்கள் அவர்களது கோணத்தில் சொல்லும் கதை இது. அறிமுக இயக்குநர் சாய் ரோஷன்  உருவாக்கி இருக்கும் 'நேற்று இந்த நேரம்' எனும் கிரைம் திரில்லர் ஜேனரிலான திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். சீரியல் கில்லர் ஒருவன் பல கொலைகளை செய்வதாக கூறப்படும் மலைப்பகுதி ரிசார்ட் ஒன்றில் கல்லூரி மாணவ மாணவியர் சிலர் வந்து தங்குகின்றனர். நிகில் ( ஷாரிக ஹஸன்) எனும் இளைஞரை சுற்றி கதை நடைபெறுகிறது. நாயகன் நிகிலின்  பெற்றோர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு நிகிலின் தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு வெளி...
ஹாட்ஸ்பாட் – விமர்சனம்

ஹாட்ஸ்பாட் – விமர்சனம்

Reviews
நடிகர், நடிகைகள் : கலையரசன் சோஃபியா சாண்டி அம்மு அபிராமி ஜனனி சுபாஷ் கௌரி ஜி. கிஷன் ஆதித்யா பாஸ்கர் தொழில்நுட்ப கலைஞர்கள் : எழுத்து & இயக்கம் - விக்னேஷ் கார்த்திக் ஒளிப்பதிவு - கோகுல் பினோய் இசை - சதீஷ் ரகுநாதன் | வான் படத்தொகுப்பு - முத்தையன் யூ எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் என்று சொல்லத் தகுதியான படம் ஹாட்ஸ்பாட். எடுத்துக்கொண்ட கதையாகட்டும், அதைச் சொன்ன விதமாகட்டும் உண்மையில் மிகப் புதுமையாகவும் ரசிக்கத் தக்க வகையில் சொன்னதற்காக படத்தை எழுதி இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கை முதலில் பாராட்டிவிடலாம். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு கதைகளை ஓர் இளைஞர் சொல்வது அப்படியே திரையில் கதையாக விரிகிறது. Happy Married Life என்ற முதல் கதையில் காதலர்களான ஆதித்யா பாஸ்கரும் கெளரி கிஷனும்...
ரெபல் _  விமர்சனம்:

ரெபல் _  விமர்சனம்:

Reviews
ரெபல் _  விமர்சனம்: அரசியல் காரணங்களால் கேரளவுக்குள் முடங்கிப்போன தமிழர்  படும் அவஸ்த்தைகளைச் சொல்லும் திரைப்படம். தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் கவனத்தை ஈர்த்து வரும் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் நிகேஷ் உருவாக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் இ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகை மமிதா பைஜூ, சுப்ரணிய சிவா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். 80-களில் கேரளாவின் பாலக்காடு பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படியாக வைத்து படத்தை உருவாக்கி உள்ளனர். மூணாறு பகுதியில் வாழும் தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள். வறுமையில் உழலும் அவர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகள் படித்து முன்னேறட்டும் என, பாலக்காடு கல்லூரியில் சேர்க்கின்றனர். அங்கு பெரும்பான்மையாக படிக்கும் மலையாள மாணவர்கள், தமிழ் மாணவர்களை ராகிங் எ...
Razakar _ விமர்சனம்

Razakar _ விமர்சனம்

Reviews
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெர...
காடுவெட்டி _ விமர்சனம்

காடுவெட்டி _ விமர்சனம்

Reviews
காடுவெட்டி _ விமர்சனம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிய கிராமப்பகுதி. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவர் காதலிக்கின்றனர். இதை அந்தப் பெண்ணின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். அதோடு, “உன் மகளை கொன்றுவிடு” என அந்தப் பெண்ணின் தந்தைக்கு உத்தரவு போடுகின்றனர். அவரோ, தனது மகளை பணம், நகை கொடுத்து காதலனுடன் அனுப்பி வைக்கிறார். காதலனின் சாதியைச் சேர்ந்த தலைவர், ‘கெட்ட’ நோக்கத்துடன் செயல்பட.. காதலர்கள் வெளியூர் வந்து வசிக்கிறார்கள். அவர்களைக் கொல்ல திட்டமிடுகிறார் சாதித் தலைவர்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை. திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்து உள்ளார். வழக்கம்போலவே முரட்டுத்தனமான கதாபாத்திரம். மீசை முறுக்கி, அடிக்குரலில் பேசி கவர்கிறார். தன் சாதி மக்கள் மீது அவரது அளவு கடந்த பாசம், சாதி தலைவர் மீதான நேசம், மனைவி மீதான காதல், எதிர...
அமிகோ கேரேஜ் விமர்சனம்

அமிகோ கேரேஜ் விமர்சனம்

Reviews
அமிகோ கேரேஜ் விமர்சனம் ‘பீப்பிள் புடக்சன் ஹவுஸ்’ முரளி ஶ்ரீனிவாசன், என்.வி. கிரியேசன்ஸ் நாகராஜன் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கி உள்ள படம், அமிகோ கேரேஜ். இதற்கு முன் எத்தனையோ கேங்ஸ்டர் படங்களைப் பார்த்திருந்தாலும், அதிக கேரேஜ் அவற்றிலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது. தவறான நபர்களின் நட்பு, ஓர்  இளைஞனின் வாழ்க்கையை எந்த அளவுக்கு திசை மாற்றிவிடுகிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். நாயகன் ருத்ரன், தந்தை சொல் கேளாத மகன். போதை பழக்கம், தவறான நண்பர்கள் என ஊர் சுற்றுகிறார். பிறகு மனம் திருந்தி ஒரு வேலைக்குச் செல்கிறார். ஆனால் அவரது தவறான நட்புகள்- மதுப் பழக்கம் காரணமாக, தாதாவின் கையாள் ஒருவருடன் மோதல் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை கொலை செய்ய எதிரி குழு திட்டமிட.. தன்னை தற்காத்துக்கொள்ள இவரும் தாதாவாக மாறுகிறார். நாயகன் ருத்ரனாக நடித்து உள்ளார் மாஸ...
பிரேமலு _  விமர்சனம்

பிரேமலு _  விமர்சனம்

Reviews
பிரேமலு _  விமர்சனம் இளமைத்துள்ளல் மற்றும் காமெடி என்று குறிவைத்து அடித்திருக்கிறார்கள். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ்வரை ரசிக்க.. சிரிக்க வைத்து இருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த சச்சின், நம்ம சேலத்தில் கல்லூரியில் படிக்கிறார். சக மாணவி மீது காதல். ஒருவழியாக, கல்லூரி முடியும் – நான்காம் வருட இறுதியில் - காதலை சொல்கிறார். அந்தப் பெண், ‘நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்’ என்று சொல்ல.. நாயகன் துவண்டு போகிறார். பிறகு வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுக்கிறார். அதுவும் நிறைவேறாமல் போகிறது. பிறகு ஹைதராபாத்தில் எம்.டெக் படிப்புக்கான கேட் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்கிறார். அதுவும் சரிவரவில்லை. ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என தீர்மானிக்கிறார். பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆசிரியரின் திருமணம், தெலுங்கானாவிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடக்கிறது. அங்கு செல்லும்போது, ரீனு என்கிற இளம்பெண...