Wednesday, November 18

Reviews

உயிர் தமிழுக்கு _  விமர்சனம்

உயிர் தமிழுக்கு _  விமர்சனம்

Reviews
உயிர் தமிழுக்கு _  விமர்சனம் படத்தின் தலைப்பு எல்லோரையும் கவரும் வகையில் இருப்பதுடன், படத்துக்கு மிகப்பொருத்தமாகவும் இருப்பது முக்கியம். அந்த வகையில் அனைவரையும் ஈர்க்கும் 'உயிர் தமிழுக்கு'  தலைப்பு படத்துக்கு பொருத்தமாகவும் அமைந்திருக்கிறது. படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு, மொழிக்காக போராடும் நாயகனின் கதை என நினைக்கத் தோன்றும். ஆனால், தமிழ்ச் செல்வி என்கிற இளம் பெண்ணை காதலித்து அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பாண்டியன் என்கிற இளைஞனின் உணர்வுதான் உயிர் தமிழுக்கு திரைப் படம். சரி, கதைக்கு வருவோம். தமிழ்ச்செல்வியை பார்த்ததும் பாண்டியன் காதலிக்க தொடங்க, மெல்ல மெல்ல தமிழ்ச்செல்வியும் பாண்டியனை காதலிக்க தொடங்குகிறார் தமிழ்ச்செல்வியின் அப்பா அரசியல் பிரமுகர். ஆகவே, பாண்டியனும் ( காதலுக்காக) ஒரு கட்சியில் சேர்ந்து, மாவட்ட செயலாளர் அளவுக்கு உயர்கிறார். இந்த நிலையில் தமிழ்ச...
ஸ்டார் _  விமர்சனம்

ஸ்டார் _ விமர்சனம்

Reviews
ஸ்டார் _  விமர்சனம் வளர்ந்து வரும் நாயக நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் கவின். குடும்பச் சித்திரமாக வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்திய டாடா படத்துக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் ஸ்டார். திரைப்பட நாயகனாக வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார், இளைஞர் கலை. இந்த சூழ் நிலையில், விபத்து ஒன்றில் சிக்கி, முகத்தில் காயம் காயம் ஏற்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர், குடும்பத்துக்காக வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார். திரை நாயகன் ஆக வேண்டும் என்கிற அவரது லட்சியம் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. துவக்கக் காட்சியில், ஸ்கூல் பையனாக சைக்கிளில் வரும்போதே மனதைக் கவர்கிறார் கவின். இடை வேளைவரை, இளமைத் துடிப்புடன் அதகளம் செய்கிறார். அதன் பிறகு விபத்தில் சிக்கி வீட்டிலே முடங்கிக் கிடக்கும் காட்சிகளிலும் பரிதாபத்தை வரவழைக்கிறார். தனக்கு நடிப்பு வரவில்லை என குமுறுவது, நிச்...
சபரி _ விமர்சனம் 

சபரி _ விமர்சனம் 

News, Reviews
சபரி விமர்சனம்  SABARI review தன் குழந்தையைக் காப்பாற்ற தன்னந்தனியாக போராடும் ஒரு தாயின் கதைதான் சபரி. வரலட்சுமி சரத்குமார் - கணேஷ் வெங்கட்ராமன் இருவரும் காதல் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு குழந்தை. இந்த நிலையில், கணவரின் ‘லீலைகள்’ தெரியவர, அவரைவிட்டு பிரிகிறார் வரலட்சுமி. அதுவரை வசித்து வந்த மும்பாய் நகரை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு வந்து  வேலைக்கு முயற்சி செய்கிறார்.வேலையோ அவ்வளவு எளிதில் கிடைத்த பாடில்லை. வரலட்சுமியின் வாழ்க்கை இப்படி போராட்டகரமாக சென்றுகொண்டிருக்க, அவரிடமிருந்து குழந்தையை கடத்த திட்டமிடுகிறார் முன்னாள் கணவர். இன்னொரு புறம், மனநலம் பாதித்த – குற்றப் பின்னணி உடைய மைம் கோபி, அந்த குழந்தையை கடத்த முயற்சி செய்கிறார். தன் குழந்தையை வரலட்சுமி போராடி காப்பாற்றுவதே கதை. வரலட்சுமி நடிப்பு அபாரம். கணவன் தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்பதை அறிந்து பொங்குவதும், தனியாக வா...
அரண்மனை 4 _ விமர்சனம்

அரண்மனை 4 _ விமர்சனம்

Reviews
அரண்மனை 4: விமர்சனம் திகிலும், நகைச்சுவையும் கலந்து கட்டும் அரண்மனை வரிசையில் சுந்தர் சி அளிக்கும் நான்காவது திரைப்படம் அரண்மனை 4. வழக்குரைஞராகப் பணியாற்றும் சுந்தர் சியின் தங்கையான தமன்னா, காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார். அவரைப் பற்றிய தகவலே பத்து வருடங்களாக இல்லை. இந்த நிலையில் அவரும் அவரது கணவரும் இறந்துவிட்டதாக வரும் செய்தி கேட்டு பதறுகிறார் அண்ணன் சுந்தர் சி. உடனே, தமன்னா வாழ்ந்த அரண்மனைக்கு தனது அத்தையுடன் வருகிறார். தங்கை தற்கொலை செய்துகொள்ளவில்லை… கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று உணர்கிறார். கொலைக்கான காரணத்தை ஆராய ஆரம்பிக்கிறார். அப்போது ஓர் அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. நிலத்திலும் நீரிலும் வாழும் 'பாக்' என்ற அமானுஷ்ய தீயசக்தி வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டு கிராமத்துக்கு வருகிறது. சிலரை அந்த தீய சக்தி கொலை செய்கிறது. அந்த கொலை வரி...
குரங்கு பெடல் _ விமர்சனம்

குரங்கு பெடல் _ விமர்சனம்

Reviews
குரங்கு பெடல் விமர்சனம் குழந்தைகள் படம் என்ற பெயரில் வரும் அபத்த களஞ்சிய படங்களுக்கு மத்தியில் நெஞ்சை தொடும் விதத்தில் வந்திருக்கும் நிஜமான குழந்தைகள் படம் குரங்கு பெடல். சிறுவயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்ட அனுபவம் பலருக்கும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கும். அத்தகைய அழகான அனுபவங்களை வைத்து, ரசிக்கத்தக்க காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட படம்தான் குரங்கு பெடல். கிராமத்தில் நெசவு வேலை செய்யும் காளி வெங்கட் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளாததாலேயே பல இடங்களுக்கு நடந்தே செல்கிறார். இதனால் அவரை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கேலி செய்கிறார்கள். அவரது மகன் சந்தோஷ் வேல்முருகன் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட பழகுகிறார். சொந்தமாக ஒரு புதிய சைக்கிளை கொண்டு வரும் நண்பனுடன் மற்ற நண்பர்கள் சென்றுவிட, தனியாகவே வாடகைக்கு ஒரு சைக்கிள் எடுத்து குரங்கு பெடல் போட்டு பழகுகிறான் சந்தோஷ்....
ரத்னம் _ விமர்சனம்

ரத்னம் _ விமர்சனம்

Reviews
ரத்னம் _ விமர்சனம் சிறுவயதில் தாயை இழந்த சிறுவன் ரத்னம் (விஷால்) தன்னை பாதுகாத்து வளர்க்கும் பன்னீர் செல்வத்துக்காக (சமுத்திரகனி) கொலை ஒன்றை செய்துவிடுகிறார். இதன் காரணமாக கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, பன்னீர்செல்வம் எம்எல்ஏ ஆகியிருக்கிறார். அவருடனேயே இருந்து அடிதடி, பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறார் ரத்னம். அதுவும் நேர்மையாக. அதாவது அவரே சொல்வது போல, ‘கொள்கைகாக கொலை செய்யும் ரவுடி’. ஒருநாள் எதிர்பாராத விதமாக இளம்பெண் மல்லிகா (ப்ரியா பவானி சங்கர்)வை சந்திக்கும் ரத்னம் அவர் மீது அளவு கடந்த பாசத்தை செலுத்துகிறார். அந்த பெண்ணை கொல்ல வரும் வில்லன்களை அடித்து துவம்சம் செய்கிறார். மல்லிகா மீது அவர் அன்பு செலுத்துவது ஏன், மல்லிகாவுக்கு என்ன பிரச்சினை, அதை தீர்த்துவைத்தாரா என்பதே சுவாரஸ்யமான மீதிக்கதை. முரட்டு அடியாள் கதாபாத்திரத்து...
ஒரு நொடி’ விமர்சனம்

ஒரு நொடி’ விமர்சனம்

Reviews
‘ஒரு நொடி’ விமர்சனம் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒரு நொடி’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 26 – வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் வழங்குகிறார். தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்ய, சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார். ஒரு நொடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு நிகழ்வு, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் எப்படி புரட்டிப்போட்டு விடுகிறது என்பதை திகிலும், த்ரில்லுமாக அளித்து உள்ளனர். மதுரை அருகே, போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார் எம்.எஸ். பாஸ்கர். தனது மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கி, திரும்ப அடைக்க முடியாமல் திண்டாடுகிறார். ஒரு வழியாக பணத்தை புரட்டி திருப்பித் தரவிருக்கும் ...
ஃபைண்டர் _ விமர்சனம்

ஃபைண்டர் _ விமர்சனம்

Reviews
ஃபைண்டர் _ விமர்சனம் குற்றமே செய்யாமல் – சந்தர்ப்ப சூழ்நிலையால் – சிறையில் வாடும் நபர்களை மீட்கும் கதை. சிறப்பானதொரு டிடெக்டிவ் த்ரில்லராக அளித்து இருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் . பீட்டராக வரும் சார்லி மீனவர். மனைவி மற்றும் ஒரே மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு திடீரென பெரும் பண பிரச்சினை வருகிறது. அதை சமாளிக்க, செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்று சிறைக்குச் செல்கிறார். அதற்காக பல லட்ச ரூபாய் பணம் தருவதாகவும், ஆறு மாதத்தில் விடுதலை பெற்றுத்த ருகிறோம் என (நிஜ) குற்றவாளி தரப்பு சொல்கிறது. ஆனால் ஒரு லட்ச ரூபாய் தருவதோடு பின்வாங்கி விடுகிறது குற்றவாளி தரப்பு. அதோடு அவரை சிறையில் இருந்து வெளிக்கொணரவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். பதின் வயதில் இருக்கும் மகள், தந்தையை மீட்க போராடுகிறாள். அவருக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனம் உதவ வ...
ரூபன்’ – விமர்சனம்

ரூபன்’ – விமர்சனம்

Reviews
‘ரூபன்’ – விமர்சனம் அடர்ந்த வனத்தை ஒட்டிய, சின்ன கிராமம். காட்டுப்பகுதியில் கிடைக்கும் தேனை எடுத்து விற்பதுதான் பலருக்கும் பிழைப்பு. இந்த கிராமத்தில் வசிக்கின்றனர் தம்பதியரான நாயகன் விஜய் பிரசாத் - நாயகியான காயத்ரி ரெமா. இருவருக்கும் நீண்ட காலமக குழந்தை பாக்கியம் இல்லை. இவர்களை ஊர் மக்களில் பலர் கிண்டல் செய்வதோடு ஒதுக்கியும் வைக்கின்றனர். ஒரு முறை நாயகன் விஜய் பிரசாத், காட்டுக்கு தேன் எடுக்கச் செல்கிறார். அப்போது நடுக்காட்டில் பச்சிளம் குழந்தை ஒன்று அழுதபடி கிடக்கிறது. குழந்தையின் பெற்றோரைத் தேடியும் கிடைக்காததால், குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். அவரும் மனைவியும் குழந்தையை பாசத்தோடு வளர்க்கின்றனர். இதற்கிடையே, காட்டு விலங்குகளை வேட்டையாடும் வில்லன் கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. அவர்களுக்கு தடையாக எதிர்த்து நிற்கிறார், நாயகன் விஜய் பிரசாத். இதனால் ஆத்திரமாகும் வில்ல...
வல்லவன் வகுத்ததடா _  விமர்சனம்

வல்லவன் வகுத்ததடா _ விமர்சனம்

Reviews
வல்லவன் வகுத்ததடா விமர்சனம் தயாரிப்பு : ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நடிகர்கள் : தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ், அருள் டி. சங்கர் மற்றும் பலர் இயக்கம் : விநாயக் துரை ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் பண தேவை என்பது ஏற்படுகிறது. இவர்களிடத்தில் எதிர்பாராவிதமாக கோடிக்கணக்கிலான பணம் கிடைக்கிறது. இந்த பணம் உண்மையில் கடைசியாக யார் கையில் சேர்கிறது என்பதுதான் படத்தின் கதை. ஏடிஎம் மிஷினில் காவலாளியாக பணியாற்றுபவரின் இளைய மகள் தனது காதலருடன் ஓடிவிட, அவருடைய மூத்த மகள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வாடகை வாகனத்திற்கு சாரதியாக பணியாற்றுகிறார். சில நாட்கள் கழித்து ஓடிப்போன இளைய மகள் கர்ப்பிணியாக தன் கணவருடன் தாய் வீட்டிற்கு வருகிறார். சீமந்தம் மற்றும் பிரசவத்திற்காக வருகை தந்திருக்கும் இளைய மகளுக்கு.. தந்தைக்குரிய கடமையை செய்ய, பை...