Thursday, November 12

Reviews

குட் நைட் – திரைப்பட விமர்சனம்

குட் நைட் – திரைப்பட விமர்சனம்

Reviews
மனம் விட்டு இப்படி சிரித்து மகிழ்ந்து ஒரு படத்தைப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன. ஐடி நிறுவனமொன்றில் பணியாற்றும் மணிகண்டன் தன் தாய், தங்கை அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறார். அக்காவுக்கு மணமாகிவிட்டாலும், தன் கணவர் ரமேஷ் திலக்குடன் அம்மா வீட்டிலேயே வசிக்கிறார். மணிகண்டனின் மிகப்பெரிய பிரச்சனையே தூங்கும்போது அவர் விடும் குறட்டை சத்தம்தான். அவர் விடும் குறட்டையின் டெசிபல் சத்தம் பக்கத்து வீடு எதிர்வீடு வரை கேட்கும். மோகன் என்ற பெயர் கொண்ட அவரைஅலுவலக நண்பர்கள் மோட்டார் மோகன் என்று அழைக்கும் அளவுக்கு அவரது குறட்டை பிரபலமாக இருக்கிறது. அலுவலக்த்தில் உடன் பணியாற்றும் தோழியிடம் ப்ரபோஸ் பண்ண நினைக்கும்போது, ஒரு பஸ் பயணத்தில் தூங்கும் மணிகண்டன் விடும் குறட்டையைப் பார்த்து  "ஒரு சின்ன பஸ் பயணத்திலேயே உங்கள் குறட்டையை என்னால் சகிக்க முடியவில்லை, வாழ்க்கை முழுக்க உங்களுடன் சேர்ந்து...
விரூபாக்ஷா – திரைப்பட விமர்சனம்

விரூபாக்ஷா – திரைப்பட விமர்சனம்

Reviews
விரூபாக்ஷா - திரைப்பட விமர்சனம் ஆன்மீகத்தையும் அமானுஷ்யத்தையும் அழகாக கலந்து நெய்யப்பட்ட அருமையான கதையம்சம் கொண்ட படம்தான் விருபாக்ஷா. தன் சொந்த கிராமமான ருத்ராவனத்துக்கு தாயாருடன் வருகிறார் நாயகன் சூர்யா. அங்கே கிராமத்து பெரியதனக்காரர் ஹரி சந்திராவின் மகளான நந்தினியின் அழகில் மயங்கி அவளை காதலிக்கத் துவங்குகிறார். நந்தினியும் சூர்யாவைக் காதலித்தாலும் தன் காதலை வெளிப்படையாக சொல்ல ஏனோ தயங்குகிறாள். இந்த சூழலில் கிராமத்தில் வசிக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அதாவது ஒருவர் மரணிப்பதை முதன் முதலாக பார்க்கும் நபர் அடுத்ததாக மர்மமான முறையில் இறக்கிறார். இது தொடர்கதையாக சில மரணங்கள்வரை நீளவே, நாயகன் சூர்யா இந்த மர்மத்தை கண்டு பிடிக்க களம் இறங்குகிறார். அவர் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா.. மர்ம மரணங்களுக்கு காரணம் என்ன என்பதை சுவைபட விளக்குகிறது விரூபா...
தீர்க்கதரிசி – திரைப்பட விமர்சனம்

தீர்க்கதரிசி – திரைப்பட விமர்சனம்

Reviews
தீர்க்கதரிசி - திரைப்பட விமர்சனம் வழக்கமான பாணி திரைப்படங்களையே பார்த்து சலித்த மனங்களுக்கு தீர்க்கதரிசி திரைப்படம் கண்டிப்பாக ஒரு மாறுபட்ட விருந்தாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றபவர் சீமான். மரங்கள் நிறைந்தஅடையாறு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் உள்ள பெண் கொல்லப்படப்போகிறாள் என்று ஒரு நாள்  போன் வருகிறது. அந்த தொலைபேசி தகவலை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் அலட்சியப்படுத்தவே, நிஜமாகவே ஒரு பெண் கொல்லப்படுகிறாள். அடுத்ததாக அண்ணாசாலையில் விபத்தி ஒன்று நடக்கப்போவதையும் அதில் ஒருவர் இற்கப்போவதையும் சொல்லி எச்சரிக்கிறது அந்த மர்மக் குரல். போலீசார் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும்போதே, அந்த விபத்து நடந்து ஒருவர் இறந்து போகிறார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மட்டும் தகவல் தராமல் ஊடகங்களுக்கும் இந்த செய்தியை சொல்லுகிறது ...
தெய்வ மச்சான் – திரைப்பட விமர்சனம்

தெய்வ மச்சான் – திரைப்பட விமர்சனம்

Reviews
தெய்வ மச்சான் - திரைப்பட விமர்சனம் விமல், பாண்டியராஜன், அனிதா சம்பத், பால சரவணன், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் தெய்வ மச்சான் படத்தை கலகலப்பான நகைச்சுவை விருந்து என்று ஒரே வரியில் சுருக்கமாக விமர்சித்து விடலாம். பாண்டியராஜனுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மூத்த மகன் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் தந்தையுடனே வசிக்கிறார். இரண்டாவது மகன்தான் விமல். அடிக்கடி விமல் கனவில் வெள்ளை குதிரையுடன் வரும் வேல.ராமமூர்த்தி சொல்லும் ஜோதிடம் அப்படியே பலித்துவிடுகிறது. விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. ஜமீந்தார் என்ற பந்தாவுடன் அனிதா சம்பத்தை பெண் பார்க்க வருபவர் வயது அதிகமாக இருப்பதால், அந்த சம்பந்தத்தை நிராகரிக்கிறார் விமல். இதனால் ஆத்திரமடைந்த ஜமீந்தார் அனிதா சம்பத்துக்கு திருமணம் நடக்காமல் தடுக்க முயற...
ரிப்பப்பரி – திரைப்பட விமர்சனம்

ரிப்பப்பரி – திரைப்பட விமர்சனம்

Reviews
ரிப்பப்பரி - திரைப்பட விமர்சனம் மாஸ்டர் மகேந்திரனும் அவரது நண்பர்கள் இருவரும் யூட்யூபில் சமையல் நிகழ்ச்சி நடத்துகிறோம் என்ற பெயரில் ஊருக்குள் ஏகப்பட்ட அலப்பறைகள் செய்கிறார்கள். யூட்யூப் நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகை தங்க மீன் என்ற புனைப் பெயரில் மாஸ்டர் மகேந்திரனை பாராட்டி வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்புகிறார். மகேந்திரனும் காணாத அந்தக் காதலியை மனதிற்குள் காதலிக்க ஆரம்பிக்கிறார். மகேந்திரனின் நண்பர் ஒருவர் காதல் திருமணம் செய்துகொண்டு மகேந்திரனைக் காண வரும்போது, ஒரு பேயால் கொலை செய்யப்படுகிறார். இதுவரை நகைச்சுவையாக சென்று கொண்டிருந்த கதை இப்போது பேய் பிசாசு என கொஞசம் ட்ராக் மாறியும் நகைச்சுவை தண்டவாளத்திலேயே பயணிக்கிறது. மகேந்திரனின் நண்பனைக் கொன்ற பேய் ஜாதி வெறி பிடித்த பேய் என்றும் (?) அது ஜாதி மாறி திருமணம் செய்துகொள்பர்களைக் கொன்று விடும் (!)  என்ற மகேந்திரனுக்கு தெரிய வருகிற...
சொப்பன சுந்தரி – விமர்சனம்

சொப்பன சுந்தரி – விமர்சனம்

Reviews
சொப்பன சுந்தரி - விமர்சனம் எஸ்.ஜி.சார்லஸ் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா, வாய் பேச முடியாத அக்கா மற்றும் அம்மாவுடன் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். பொறுப்பாக இருக்கக வேண்டிய ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் கருணாகரனோ தன் பொறுப்பை மறந்து திருணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் சென்று விடுகிறார். நகைக்கடை பரிசுக்கூப்பன் ஒன்றின் மூலம் ஒரு கார் ஐஸ்வர்யாவுக்கு பரிசாகக் கிடைக்கிறது.பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வருவதை நினைத்து குடும்பமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. பரிசாக வரும் காரை வைத்து அக்காவின் திருமணத்தை நல்லவிதமாக நடித்திவிடலாம் என ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டமிடுகிறார். ஆனால் ...

‘செங்களம்’ – வெப் சீரிஸ் விமர்சனம்

Reviews
அரசியலை மையமாக வைத்து இப்படி ஒரு வெப் சீரிஸ் தமிழில் வந்திருக்கிறதா என யோசிக்கத் தோன்றும் வகையில் அடி முதல் நுனிவரை சமகால அரசியலை நினைவு படுத்தும் வகையில் வந்திருக்கும் வெப் சீரிஸ்தான் செங்களம். துவக்கமே அபாரமாக இருக்கிறது. கருவேலங்காட்டுப் பகுதியில் ஒரு பெண்மணி சாப்பாட்டு தூக்குடன் நடந்து வர, துணையாக வரும் நாயின் கழுத்திலும் ஒரு சாப்பாட்டு தூக்கு தொங்குகிறது. ஓரிடத்தில் நின்று அந்தப் பெண் குலவை சத்தமிட ஒளிந்திருக்கும் மூன்று இளைஞர்கள் வெளியே வருகின்றனர். அந்தப் பெண்மணியின் மகன்கள்தான் அந்த மூவரும் என தெரிய வர, அவர்கள் ஒளிந்திருக்கும் காரணம் ப்ளாஷ் பேக் காட்சிகளாக விரிகிறது... சுமார் நாற்பது ஆண்டுகாலம் விருதுநகர் நகராட்சித் தலைவர் பொறுப்பில் பரம்பரை பரம்பரையாக சரத் லோகித்ஸவா குடும்பம் ஆட்சி செய்கிறது. சிட்டிங் சேர்மனான அவரது மகன் பவன், விபத்தொன்றில் அகால மரணமடைய அந்த இடத்துக்க...
ஷூட் தி குருவி – விமர்சனம்

ஷூட் தி குருவி – விமர்சனம்

Reviews
ஷூட் தி குருவி விமர்சனம் 2032ஆம் ஆண்டு மங்களூரில் வசிக்கும் வயது முதிர்ந்த குற்றவியல் ஆய்வாளர் ஒருவரை சந்திக்க ஓர் இளைஞனும், இளம் பெண்ணும் வருகின்றனர். 2020ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குருவி ராஜன் என்ற கேங்ஸ்டரைப் பற்றி அவரிடம் விசாரிப்பதுடன், தங்கள் கொண்டு வந்திருக்கும் சில புகைப்படத் துண்டுகளை அவரிடம் காட்டி யார் அந்த நபர் என அடையாளம் காண முயல்கின்றனர். ஆய்வாளரும் தன்னிடம் உள்ள சில புகைப்படத் துண்டுகளை அவற்றுடன் இணைக்க, ஓர் ஆணின் புகைப்படம் முழுமையாகத் தெரிகிறது. அவன்தான் குருவிராஜன் என்ற தகவலைச் சொல்லி அவன் கதையை விவரிக்க ஆரம்பிக்கிறார் ஆய்வாளர். ஆய்வாளர் விவரிக்கும் குருவி ராஜன் கதை மெலிதான நகைச்சுவை இழையோட மிக அழகாக திரையில் விரிகிறது. படம் முழுக்க விரவியிருக்கும் இந்த நகைச்சுவை பெரும்பாலன இடங்களில் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சீசன் பிசினஸ் குறித்து சிவ ஷா ரா விவரிப...
அயோத்தி – திரைப்பட விமர்சனம்

அயோத்தி – திரைப்பட விமர்சனம்

Reviews
அயோத்தி - திரைப்பட விமர்சனம் மதம் ஓர் அபினி என்றான் மார்க்ஸ். அதை ஏன் விஷம் என்று சொல்லவில்லை. மதம் என்ற போதையில் மனிதன் சிக்குண்டால், ஆயுள் முழுக்க அதிலிருந்து மீள முடியாமல் மூழ்கிக் கிடக்க வேண்டியதுதான். தீவிர மதப்பற்று மிக்கவரான யஷ்பால் ஷர்மா male chauvinist pig என்பதற்கு சரியான இலக்கணமாகவும் இருக்கிறார். மனைவி மகள், மகனுடன் தீபாவளிக்கு புனித யாத்திரையாக ராமேஷ்வரம் வரத் திட்டமிடுகிறார். மதுரை வந்திறங்கி அங்கிருந்து காரில் ராமேஷ்வரம் செல்லும் வழியில் ஒட்டுனருடன் தேவையின்றி தகராறு செய்வதால் கார் விபத்துக்குள்ளாகிறது. கார் ஓட்டுனரின் நண்பரான சசி குமார், நிலைமையை புரிந்து கொண்டு உதவ முன் வருகிறார். கடுமையாக காயமடைந்த யஷ்பால் மனைவி இறந்து விடுகிறார். விபத்து காரணமாக போலீஸ் கேஸாகி, போஸ்ட் மார்டம் செய்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இறந்தவர் உடலை பிணக்கூறாய்வு ச...

‘பொம்மை நாயகி’ – திரைப்பட விமர்சனம்

Reviews
'பொம்மை நாயகி' - திரைப்பட விமர்சனம் டீக்கடையி ல் பணியாற்றும் யோகிபாபு அன்பான மனைவி, அழகான மகள் பொம்மை நாயகியுடன் அன்றாடவாழ்க்கையை எளிமையாகக் கடக்கிறார். டீக்கடையை அதன் உரிமையளர் வேறு ஒருவருக்கு விற்க முடிவு செய்ய, யோகிபாபுவின் நலனில் அக்கறை கொண்ட நண்பர் எப்படியாவது பணம் புரட்டி டீக்கடையை உரிமையளரிடமிருந்து விலைக்கு வாங்கும்படி ஆலோசனை கூறுகிறார். யோகிபாபுவின் தந்தை ஜி.எம்.குமாருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மகன் அருள்தாஸ். இளைய தாரத்தின் மகன்தான் யோகிபாபு. தன் தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாலேயே அருள்தாஸ் அவரை வெறுத்து ஒதுக்க, இரண்டாம் மனைவி மற்றும் யோகிபாபுவுடன் குடிசையில் வாழ்கிறார் ஜி.எம்.குமார். கோவில் திருவிழா நடக்கும்போது, பொம்மை நாயகி அதே ஊரைச் சேர்ந்த இரண்டு கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். ஊர்ப்பெரியவர்கள் என்ற போர்வையில் இருக்கும்...