Thursday, October 29

Reviews

காந்தி கண்ணாடி _ விமர்சனம்

காந்தி கண்ணாடி _ விமர்சனம்

Reviews
காந்தி கண்ணாடி _ விமர்சனம் செக்யூரிட்டி வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேல், திருமண ஏற்பாடுகளை செய்து தரும் கே பி ஒய் பாலாவிடம் தன்னுடைய அறுபதாவது திருமண நிகழ்ச்சியை நடத்தித் தரும்படி கேட்கிறார். இதற்கான செலவுகளை எல்லாம் கணக்கிட்டு சுமார் 50 லட்ச ரூபாய் தேவைப்படும் என்று கூறுகிறார் பாலா. "அவ்வளவு பணத்தை எப்படி உங்களால் திரட்ட முடியும்?"  என பாலாவும் அவரது அலுவலகத்தில் உள்ளவர்களும் கிண்டல் செய்ய, தனது கிராமத்தில் உள்ள சொந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக பத்திரங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார் பாலாஜி சக்திவேல். கிட்டத்தட்ட ஒரு ஜமீன்தார் அளவுக்கு வசதியான வாழ்க்கையை இளம் பருவத்தில் வாழ்ந்த பாலாஜி சக்திவேல், காதலுக்காகவும், தான் காதலித்த அர்ச்சனாவுக்காகவும் அந்த வாழ்க்கையை துறந்து, இப்போது செக்யூரிட்டியாக வாழ்ந்து வருவது தெரிகிறது. திருமணத்திற்கு தேவைப்படும் பணத்தை கொண்டு வந்து பாலாவிடம...
லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம்

லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம்

Reviews
லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம் செவி வழி சொல்லப்படும் நாட்டுப்புறக் கதை ஒன்றை, நவீன காலத்துக்கு கொண்டு வந்து அட்டகாசமான தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் 'லோகா'. பெங்களூருவில் தன் நண்பர்களுடன் வசிக்கிறார் நஸ்லன். அவரது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் குடி வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். அவருடன் பழக ஆசைப்படும் நஸ்லன், நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைப்பு விடுக்க, கல்யாணியும் அதை ஏற்றுக் கொண்டு பார்ட்டிக்கு வருகிறார். அந்தப் பார்ட்டியில் போதைப் பொருட்கள் புழங்குவதாகச் சொல்லி சோதனை நடத்துவதற்கு வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாண்டி (மாஸ்டர்). நஸ்லன், கல்யாணி மற்றும் நண்பர்களுடன் இன்ஸ்பெக்டர் சாண்டிக்கு ஏற்படும் உரசல் பெரிதாகிக் கொண்டே போகிறது. அதே சமயம் நஸ்லன் _கல்யாணி நட்பும் பலப்பட்டுக் கொண்டே வருகிறது. கல்யாணியிடம் சில ஆச்சரியமான சக்த...
சொட்ட சொட்ட நனையுது  _ விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது _ விமர்சனம்

Reviews
சொட்ட சொட்ட நனையுது _ விமர்சனம் இளம் வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்து மனப் புழுக்கத்தில் இருக்கும் இளைஞர்களை பற்றி நகைச்சுவையுடன் சொல்லும் படம் சொட்ட சொட்ட நனையுது. இளைஞன் நிஷாந்த் ரூசோவுக்கு தலையில் வழுக்கை இருப்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள பெண்கள் மறுத்து விடுகின்றனர். இந்த சூழ்நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் வர்ஷினி அவரை திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார். விடிந்தால் திருமணம் என்ற சூழ்நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று மொபைல் மூலம் வர திருமணத்தை நிறுத்தி விடுகிறார் ரூசோ. பின்னர் சென்னைக்கு வந்து தலை முடி வளர்வதற்கான நவீன சிகிச்சையை மேற்கொண்டு, ஸ்டைலான ஹேர் ஸ்டைலுடன் ஊருக்கு திரும்புகிறார். பின்னர் பெற்றோர்கள் ஏற்பாடு செய்தபடி ஷாலினியுடன் அவருக்கு திருமணம்  நடக்க இருக்கிறது. இந்தத் திருமணத்திலும் சில பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து நிஷாந்த் ரூசோ திருமண...

குற்றம் புதிது _ விமர்சனம்

Reviews
குற்றம் புதிது _ விமர்சனம் போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனன் மகள் பிரீத்தி பணியை முடித்துவிட்டு இரவு வெகு தாமதமாக  தன் வீட்டுக்கு புறப்படுகிறாள். தன் வண்டி பிரச்சனையாகி விட்டதால் ஆட்டோவில் வர இருப்பதாக தந்தைக்கு போன் செய்து தகவலும் தெரிவிக்கிறார். ஆனால் ப்ரீத்தி வீடு சென்று சேரவில்லை. அடுத்த நாள் காலை ஓர் இளம் பெண் கொலையுண்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கிறது.  திடீரென தலை மறைவான ஆட்டோ டிரைவர் ஒருவரின் ஆட்டோவில் இருந்த ரத்த கறைகள் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆட்டோ டிரைவர் தங்கி இருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருந்த உணவு டெலிவரி செய்யும் கதிரேசன் என்ற இளைஞன் தான் ஒரு கொலை செய்து விட்டதாக சொல்லி போலீசில் சரணடைய வருகிறான். விசாரணையின்போது தான் கொன்ற பெண் ப்ரீத்தியா  இல்லையா என்று தனக்குத் தெரியாது என்றும் புகைப்படத்தை பார்த்தால்தான் சொல்ல முடியும் என்றும் கூ...
கடுக்கா _ விமர்சனம்

கடுக்கா _ விமர்சனம்

Reviews
கடுக்கா _ விமர்சனம் கொங்கு பகுதியில் உள்ள கிராமம்தான் கதைக்களம். அங்கு வசிக்கும் எளிய மனிதர்கள் தான் படத்தின் பாத்திரங்கள். உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் நீட்டாக உடை உடுத்திக் கொண்டு வேலைக்கு செல்வது போல் புறப்பட்டு சென்று, பஸ் ஸ்டாப்பில் நின்று பெண்களை சைட் அடிப்பதையே வேலையாக கொண்டு இருக்கிறார் நாயகன் விஜய் கௌரிஷ். இந்த சூழலில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு புதிதாக குடி வருகிறார் நாயகி ஸ்மேகா.  ஸ்மேகாவிடம் கௌரிஷ் தன் காதல் வலையை வீச, வேண்டா வெறுப்பாக அவரும் நாயகனை காதலிக்க தொடங்குகிறார். அத்துடன் வேலைக்கு போய் சம்பாதிக்கும்படி அறிவுரையும் சொல்கிறார். சுவர் விளம்பரம் எழுதும் வேலையை செய்து வரும் கௌரிஷின்  நண்பன் ஆதர்ஷும் நாயகியை காதலிப்பதாக சொல்ல, அவருக்கும் காதலில் ஓகே சொல்கிறார் நாயகி. இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனி வேலைக்கு செல்கின்றனர். ஒரு நாள் தாங்கள் இர...
வீர வணக்கம் _ விமர்சனம்

வீர வணக்கம் _ விமர்சனம்

Reviews
வீர வணக்கம் _ விமர்சனம் கிராமத்தில் வசிக்கும் பரத்,  மிகப்பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்டு, பரிதவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் துணையாக நிற்கிறார். இந்த எளிய மக்களுக்கு சரியான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அருகாமையில் உள்ள கேரளா மாநிலத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள கம்யூனிசப் போராளியும் பிரபல பாடகிமான பிகே மேதினி அம்மா அவர்களை சந்தித்து உரையாட வைக்கிறார். மிகக் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்த விதத்தை,  பி.கே. மேதினி அம்மா விவரிக்க, அது கதையாக திரையில் மலர்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய புரட்சி வீரரான பிகே கிருஷ்ணபிள்ளையின் தலைமறைவு வாழ்க்கை நெஞ்சைத் தொடும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுக்க சுதந்திரப் போ...
நறுவீ _ விமர்சனம்

நறுவீ _ விமர்சனம்

Reviews
நறுவீ _ விமர்சனம் நடிப்பு: ஹரிஷ் அலக்  விஷ்ணு, வி ஜே பப்பு, பாடினி குமார், ஜீவாரவி, பிரவீனா,  காத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால் தயாரிப்பு: ஏ அழகு பாண்டியன் இசை: அஸ்வத் ஒளிப்பதிவு: ஆனந்த ராஜேந்திரன் இயக்கம்: சுபராக் முபாரக் பி ஆர் ஓ: ஆர் மணி மதன் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதியில் ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று குன்னூருக்கு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள மலைவாழ்  மக்களின் குழந்தைகள், நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதற்காக தீரன் என்ற வசதியான இளைஞர் ஓராசிரியர்  பள்ளியை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் ஓர் இளம் பெண்ணுக்கு மேற்கொண்டு தொடர்ந்த படிக்க வேண்டும் என்று அளவு கடந்த ஆசை. ஆனால் நடைமுறையில் அது சிக்கலாக இருக்கிறது. ஆசிரியராக இருக்கும் தீரனே நல்ல வழிகாட்டியா...
இந்திரா_ விமர்சனம்

இந்திரா_ விமர்சனம்

Reviews
இந்திரா_ விமர்சனம் சென்னை நகரிலே தொடர்ச்சியாக சில கொலைகள் நடைபெறுகின்றன. சைக்கோ கொலையாளி ஒருவன் இந்த கொலைகளை செய்வதாக காவல்துறை சந்தேகிக்கிறது. கொலையுண்டவரின் கையை கொலையாளி வெட்டி எடுத்துச் சென்று விடுகிறான். மதுபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் ரவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அத்துடன் அவருக்கு திடீரென கண் பார்வை பறிபோகிறது. இந்த சூழ்நிலையில் வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரின் பிர்சோடாவும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். சைக்கோ கொலையாளி என போலீஸ் சந்தேகப்பட்டு, விசாரணை செய்யும் சுனில், தான் 28 கொலைகளை செய்ததாகவும் ஆனால் வசந்த் ரவியின் மனைவியை தான் கொல்லவில்லை என்றும் கூறுகிறார். கொலைகளை விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் கல்யாண், வசந்த் ரவிதான் தன் மனைவியை கொன்று இருப்பார் என சந்தேகம் ஏற்படுகிறது. உண்மையில் நிஜமான கொலையாள...
காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம்

காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம்

Reviews
காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம் வட சென்னை பகுதியில் உள்ள ரவுடி குழுக்கள் இடையே ஏற்படும் மோதலில் சிலர் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, நாயகன் மாஸ் ரவி மற்றும் நாயகி லட்சுமிபிரியா இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாறி மாறி பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாஸ் ரவி காணாமல் போகிறார். அவரது மொபைல் எண்ணுக்கு லட்சுமி பிரியா போன் செய்தால் யாரோ போனை எடுத்து ராங் நம்பர் என்று சொல்கிறார்கள். தாங்கள் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடங்களில் எல்லாம் காதலனை தேடி அலைகிறார் லஷ்மி பிரியா. சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு நாள் சாலையில் காதலனை சந்திக்கிறார் காதலி... எப்படி தெரியுமா? ஒரு ரவுடியாக... அடிதடிகளில் இறங்கும் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறி இருக்கிறார் மாஸ் ரவி. அவரது இந்த மாற்றத்துக்கு...
ராகு கேது _ விமர்சனம்

ராகு கேது _ விமர்சனம்

Reviews
ராகு கேது _ விமர்சனம் திரையில் சமுத்திரக்கனி – சிவன், விக்னேஷ் – மகா விஷ்ணு, கஸ்தூரி – துர்கா, சத்னா சங்கர் – லட்சுமி, பாலசுந்தரம் – சுபர்பானு திரைக்குப் பின் கதை, வசனம், பாடல்கள்  கலைமாமணி கே.பி.அறிவானந்தம் இயக்குநர்  துரை.பாலசுந்தரம் படத்தொகுப்பாளர் : பி. லெனின் ஒளிப்பதிவு: மோகன் பிரசாந்த் இசையமைப்பாளர் (பாடல்கள்) : சதா சுதர்சனம் பின்னணி இசை : பரணி தரன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் : கே.பி.அறிவானந்தம் இயக்கம் : டி.பாலசுந்தரம் மக்கள் தொடர்பு : ஆர்.மணி மதன் அந்த காலத்தில் தான் தயாரித்து இயக்கிய ஆன்மீகப் படங்களுக்கு அருட்செல்வர் ஏபி நாகராஜன் முன்னுரை கொடுப்பது போல், ராகு கேது படத்தின் இயக்குனரும் தனது குரல் மூலம் முன்னுரை வழங்கி இருக்கிறார். நவகிரகங்களில் முக்கியமான இரண்டு ராகு மற்றும் கேது. இவை இரண்டும் ...