Thursday, October 29

Reviews

சென்னை  ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம்

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம்

Reviews
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் _ விமர்சனம் மதுரையில் வாழ்ந்து மறைந்த பிரபல மர்மக்கதை ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்களை தொடராக எழுதுவதற்கு ஒரு பத்திரிகை முடிவு செய்கிறது. இதற்காக ஆசிரியர் குழுவை சேர்ந்த சில்பா மஞ்சுநாத், நாவலாசிரியரின் மகன் வெற்றியை சந்தித்து பேசுகிறார். சில்பா மஞ்சுநாத்துக்கு உதவ சென்னைக்கு வருகிறார் வெற்றி. வந்த இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் ஏற்படுகிறது. கொலை ஒன்றை துப்பறியும் பணியில் இருந்த தம்பி ராமையாவுக்கு துப்பறியும் கதாசிரியர் மகன் வெற்றி உதவ முன் வருகிறார். கொலை ஒன்றுடன் நிற்காமல் தொடர்கிறது. மேலும் பல கொலைகள் தொடர்ந்து நடக்கவே சீரியல் இல்ல யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாகிறது. இந்த சூழலில் போட்டித் தேர்வுக்கு படித்து வந்த தம்பி ராமையாவின் மகள்,  வணிக வளாகம் ஒன்றின் மேல் தளத்திலிருந்து குதித்து தற்கொ...
உசுரே _ விமர்சனம்

உசுரே _ விமர்சனம்

Reviews
உசுரே _ விமர்சனம் ஆந்திரா, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூரில் நடப்பதாக சித்தரிக்கப்படும் 'உசுரே' படத்தின் கதை ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாயகன் டீஜய் அருணாசலம் வீட்டுக்கு எதிர் வீட்டிற்கு தன் தாய் மந்த்ராவுடன் குடி வருகிறார் நாயகி ஜனனி. தன் மகளை யாராவது சாதாரணமாகப் பார்த்தாலே கன்னத்தில் 'பளார்' விடும் கண்டிப்பான தாயான மந்த்ராவை மீறி ஜனனியை காதலிக்கிறார் டீஜய். ஆரம்பத்தில் இந்தக் காதலை ஜனனி ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், டீஜய் தன்மீது கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான காதலைப் புரிந்து கொண்டு ஜனனியும் காதலிக்க தொடங்குகிறார். மகளின் காதல் மந்த்ராவுக்கு தெரிய வர அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஆச்சரியங்களை மட்டுமல்ல பல அதிர்ச்சிகளையும் கொடுக்கிறது. 70 களிலும் 80 களிலும் வந்த திரைப்படங்களின் கதையைப் போல் சாதாரணமாக சென்று கொண்டிருந்த 'உ...
அக்யூஸ்ட்  _ விமர்சனம்

அக்யூஸ்ட் _ விமர்சனம்

Reviews
அக்யூஸ்ட் _ விமர்சனம் பலம் மிக்க அரசியல்வாதி ஒருவரை வெட்டிக் கொன்ற அக்யூஸ்ட் உதயாவை அஜ்மல் மற்றும் சில போலீஸ்காரர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். வழியில் ஒரு கும்பல் உதயாவை போட்டுத் தள்ள துடிக்கிறது. அவர்களிடமிருந்து அஜ்மல் உதயா காப்பாற்றுகிறார். உதயாவை சிலர் கொல்லத் துடிப்பது ஏன்? அவர்களிடமிருந்து உதயா தப்பித்தாரா என்பதுதான் அக்யூஸ்ட் படத்தின் கதை. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை உதயாவின் ஆதிக்கம் தான். கனமான பாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்து கவனம் இருக்கிறார் உதயா. முதல் பாதியில் உதயாவின் காதலியாகவும் இரண்டாம் பாதியில், உதயாவால் கை வெட்டப்பட்ட நபரின் மனைவியாகி, காதலனுக்கும் கணவனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் வேடத்தில் கதாநாயகி ஜான்விகா திறம்பட நடித்திருக்கிறார். லாட்ஜ் ஓனராக சில காட்சிகளே வந்தாலும் யோகி பாபு தன் முத்திரையை பதிக்க தவறவில்லை. ...

ஹவுஸ் மேட்ஸ் _ விமர்சனம்

Reviews
ஹவுஸ் மேட்ஸ்_ விமர்சனம் தர்ஷன் _ ஹர்ஷா சாந்தினி பைஜூ தம்பதி அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்குகின்றனர். அங்கு குடியேறியதில் இருந்து, சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதை உணர்கின்றனர். தொடர்ந்து அந்த வீட்டில் உள்ள சுவரில் நீங்கள் யார் என்று எழுத, அந்த வீட்டில் அவர்களுக்கே தெரியாமல் காளி வெங்கட் மற்றும் வினோதினி தம்பதியினர் தங்கள் மகனுடன் வாழ்ந்து வருவது தெரிகிறது. ஒரு குடும்பம் வாழ்வதே மற்றொரு குடும்பத்திற்குத் தெரியாமல் இருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் நடக்கும் சம்பவங்களை இரு குடும்பத்தாரும் பகிர்ந்து கொள்ள, சில சிக்கல்கள் முளைக்கின்றன. விசித்திரமான இந்தப் பிரச்சனையில் இரு குடும்பத்தினரும் சிக்கிக் கொள்வதற்கு காரணம் என்ன? அவர்கள் அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் 'ஹவுஸ் மேட்' படத்தின் கதை. வழக்கமான பேய் படத்தில் இருந்து ச...
தலைவன் தலைவி _ விமர்சனம்

தலைவன் தலைவி _ விமர்சனம்

Reviews
தலைவன் தலைவி _ விமர்சனம் குடும்பப் படங்களை இயக்குவதில் தனித்துவம் மிக்க இயக்குனர் பாண்டிராஜ், தனது பாணியிலிருந்து சற்றே விலகி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கும் படம்தான் 'தலைவன் தலைவி'. தந்தை சரவணன், தாய் தீபா சங்கர், மற்றும் தம்பியுடன் இணைந்து ஹோட்டல் தொழில் ஈடுபட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு நித்யா மேனனுடன் திருமணம் நடந்து, குழந்தை ஒன்றும் பிறந்த பிறகு தம்பதிக்கிடையே ஏற்படும் பிரிவால் தாய் வீட்டில் செல்கிறார் நித்யா. மருமகன் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் நித்யா மேனனின் குழந்தைக்கு மொட்டை அடிக்க அவரது குடும்பமே குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறது. இந்தத் தகவல் தெரிந்து அவர்களுடன் சண்டை போடத் தயாராக விஜய் சேதுபதி கோவிலுக்கு வருகிறார். இதைத்தொடர்ந்து நடப்பது எல்லாம் சண்டை அல்ல... காமெடி கலாட்டா. பாதி மொட்டை போட்ட தலையுடன் குழந்தை இருக்க, இரு த...
மாரீசன் _ விமர்சனம்

மாரீசன் _ விமர்சனம்

Reviews
மாரீசன் _ விமர்சனம் திருட்டு வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்ற பகத்ஃபாஸில்,  விடுதலையாகி வெளியே வந்ததும் மீண்டும் தன் கைவரிசையை காட்ட தொடங்குகிறார். பக்தர் ஒருவரின் செல்போன், சாவியுடன் இருந்த மோட்டார் பைக் ஆகிய அத்தியாவசிய தேவைகளை(!) அலட்சியமாகத் திருடிக் கொண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டுக்குள் பெரிய அளவில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் நுழைகிறார். அப்போது அங்கே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வடிவேலுவை பார்க்கிறார். தனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாகவும், அதனால்தான் தன் மகன் இவ்வாறு கட்டிப்போட்டிருப்பதாகவும் கூறும் வடிவேலு, தன்னை வெளியே கொண்டு வந்தால் 25 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறுகிறார். வடிவேலுவை வெளியே அழைத்து வந்து ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது அவரது அக்கவுண்டில் லட்சக்கணக்கில் பணம் இருப்பது பகத்ஃபாஸிலுக்கு தெரிய வருகிறது. இந்த பெரிய தொகையை எப்படியாவது கைப்பற்றிவிட திட்டமிட்டு...
பன் பட்டர் ஜாம் _ விமர்சனம்

பன் பட்டர் ஜாம் _ விமர்சனம்

Reviews
பன் பட்டர் ஜாம் _ விமர்சனம் பிக் பாஸ் புகழ் ராஜு கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். கதாநாயகிகளாக ஆதியா மற்றும் பாவ்யா இருவரும் நடித்திருக்கின்றனர். ஃபிரண்ட், லவ்வர், பெஸ்டி என்றெல்லாம் இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் உச்சரிக்கப்படும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்பதை வைத்து இந்தப் படம் உருவாக்க பட்டதோ? ராஜுவின் தாயார் சரண்யா பொன்வண்ணனும், ஆதியாவின் அம்மா தேவதர்ஷணியும் இணைந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதாவது தங்கள் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும்போது, யாரையாவது காதலித்து தொலைத்து, கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக தங்கள் பிள்ளைகள் இருவரையும் ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்து, பழக வைத்து அவர்களை காதலிக்கவும் வைத்து, திருமணம் செய்து வைத்து விடலாம் என்பதுதான் அந்த (சிறப்பு)  திட்டம்.  பிள்ளைகளைப் பொறுத்தவரை அது லவ் மேரேஜ் ஆகவும், ...

ட்ரெண்டிங் _ விமர்சனம்

Reviews
ட்ரெண்டிங் _ விமர்சனம் இன்றைய இளைய தலைமுறை இணைய தலைமுறையாகவே தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருப்பது குறித்து உரத்த சிந்தனையை கிளரும் படம் ட்ரெண்டிங். கலையரசன் பிரியாலயா தம்பதி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வித்தியாசமான வீடியோக்களை போட்டு, அதன் மூலம் லட்சக்கணக்காண ஃபாலோயர்ஸைப் பெற்று வருமானமும் ஈட்டி, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். சமூக ஊடகத்தின் மூலம் புகழ் பெறும் இத்தம்பதி தங்களுக்கு கிடைக்கும் வருமானம் நிரந்தரம் என நினைத்து தங்கள் சக்திக்கு மீறிய ஆடம்பரமான வீட்டை மாத தவணை முறை மூலம் வாங்குகின்றனர். திடீரென அவர்களுடைய youtube சேனல் முடங்கி போய்விட செய்வதற்காக திகைத்து நிற்கின்றனர். இ எம் ஐ கட்ட முடியவில்லை... கடன் காரர்களின் மிரட்டல் என்ற நிலையில் இருக்கும்போது மர்மமான ஒரு தொலைபேசி அழைப்பு கலையரசனுக்கு வருகிறது. பிக் பாஸ் பாணியிலான ஒருவகை விளையாட்டில் ஈடுபட்டால...
மிஸஸ் அண்ட் மிஸ்டர் _/விமர்சனம்

மிஸஸ் அண்ட் மிஸ்டர் _/விமர்சனம்

Reviews
மிஸஸ் அண்ட் மிஸ்டர் _ விமர்சனம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசித்து வருகின்றனர் வனிதா ராபர்ட் தம்பதியர். 40 வயதைக் கடந்து விட்ட நிலையில் வனிதாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ராபர்ட் . திருமணமாகாத இளம் காதலர்களைப் போலவே இந்த ஜோடி பரஸ்பரம் அன்பு செலுத்தி கொண்டாட்டமாக தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது இருவருக்கும் குழந்தைகள் இல்லை. அதை ஒரு குறையாகவே நினைக்காமல் அது பற்றிய கவலையே இல்லாமல் சந்தோஷமாகவே இந்தத் தம்பதியினர் வாழ்கின்றனர். ஆனால் மற்றவர்கள் இவர்களை குழந்தை பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை சொல்கின்றனர். இனியும் தாமதப்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டால் அவ்வளவுதான்... என்று சுற்றிலும் உள்ளவர்கள் தூண்டி விடவே அம்மாவாகிய தீருவது என்ற முடிவுக்கு வருகிறார் வனிதா. ஆனால் அவரது கணவர் ராபர்ட்டோ குழந்தையை வேண்டாம் என்று நினைக்கிறார். எனவே வனிதா சாம,...

சட்டமும் நீதியும் இணைய தொடர் விமர்சனம்

Reviews
சட்டமும் நீதியும் இணைய தொடர் விமர்சனம் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் 'சட்டமும் நீதியும்',  திரைப்படத்தைவிட வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் தொடர் என தாராளமாகச் சொல்லலாம். நீதி மன்ற வளாகத்திலேயே ஒரு முதியவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்யும் முதல் காட்சியே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்கிறது. ஏன் அந்த நபர் தற்கொலை செய்து கொள்கிறார்? அவருக்கு கிடைக்காமல் போன நீதி என்ன என்பது காட்சிகளாக விரியத் தொடங்குகிறது. வழக்கறிஞரான 'பருத்தி வீரன்'  சரவணன், கேஸ் எதுவும் கிடைக்காமல் நீதிமன்ற வளாகத்திலேயே டீக்கடைக்கு அருகில் நோட்டரி பப்ளிக் என்ற போர்டை வைத்துக்கொண்டு, சக வழக்கறிஞர்களின் ஏளனத்துக்கு ஆளாகிறார். கோர்ட்டில் மட்டும் இல்லை. வீட்டிலும் மகன்கூட மதிப்பதில்லை. ஆனால் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சரவணனின் திறமைகளை அறிந...