Thursday, October 29

Reviews

ப்ரீடம் விமர்சனம்

Reviews
வேலூர் கோட்டை சிறை சாலையில் அடைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் 43 பேர், அங்கிருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்ற சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறது இந்த ப்ரீடம் திரைப்படம். இலங்கையில் இருந்து அகதியாக வரும் நூற்றுக்கணக்கான நபர்களுடன் சசிகுமாரும் வருகிறார். கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவி லிசா மோல் ஜோஸ் ஏற்கனவே அகதிகள் முகாமில் இருக்கிறார். சென்னை ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுகிறார். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சசிகுமார் உட்பட 43 ஈழத் தமிழர்களை விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் அடைத்துச் சென்று அடைத்து வைத்து சித்திரவதை செய்கின்றனர். போலீசாரின் கொடுமைகளை தாங்க முடியாத ஈழத் தமிழர்கள்,  ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து தப்பி செல்ல திட்டமிடுகின்றனர். கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அந்த சிறையில் இருந்து ஈ...

ஃபீனிக்ஸ் _ விமர்சனம்

Reviews
ஃபீனிக்ஸ் _ விமர்சனம் நடிகர்கள்: சூர்யா சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், மூனார் ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ் இசை: சாம் சி எஸ் ஒளிப்பதிவு: வேல்ராஜ் இயக்கம்: அனல் அரசு சிட்டிங் எம்எல்ஏ சம்பத் பட்டப்பகலில் படு பயங்கரமாக கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்த குற்றத்திற்காக சூர்யா சேதுபதியை கைது செய்யும் காவல்துறை,  அவரை நீதிமன்ற காவலில் அடைக்கிறது. எம் எல் ஏ சம்பத்தின் மனைவியான வரலட்சுமி சரத்குமார் தனது ஆட்களை சிறைக்கு அனுப்பி சூர்யா விஜய் சேதுபதியை தீர்த்துக்கட்டச் சொல்கிறார். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்து தன்னை காத்துக் கொள்கிறார் சூர்யா. இதனால் வெகுண்டெழும் வரலட்சுமி தரப்பு,  வட இந்தியாவில் இருந்து அடியாட்களை வரவழைத்து சூர்யாவின் கதையை முடிக்க சொல்கின்றனர். வட இந...

லவ் மேரேஜ் _ விமர்சனம் 4/5

Reviews
நடிகர்கள்: விக்ரம்பிரபு, சுஷ்மிதா, மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர் இசை – ஷான் ரோல்டன் படத்தொகுப்பு – பரத் விக்ரமன் இயக்கம்: சண்முக ப்ரியன் 30 வயதைக் கடந்த பிறகும் திருமணம் ஆகாமல், பெண் தேடிக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவை உறவினர்களும் ஊர்க்காரர்களும் கிண்டல் செய்கின்றனர். சுற்றுவட்டாரப் பகுதியிலேயே எந்த பெண்ணும் அமையாததால் கோபிசெட்டிபாளையத்தில் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்ய உறவினர்களுடன் புறப்படுகிறார் விக்ரம் பிரபு குடும்பத்தார். அழகு தேவதையாக இருக்கும் மணப்பெண் சுஷ்மிதாவை பார்த்ததும் விக்ரம் பிரபுவிற்கு மிகவும் பிடித்து விடுவதால் உடனே திருமணத்திற்கு ஓகே சொல்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்து ஊருக்கு புறப்படும் நேரத்தில் கோவிட் காரணமாக ஊரடங்கு போடப்படுகிறது. எனவே மணப்பெண் வீட்டிலேயே விக்ரம் பிரபு குடும்பத்தினர...
குட் டே_ விமர்சனம்

குட் டே_ விமர்சனம்

Reviews
குட் டே_ விமர்சனம் தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார் பிரித்விராஜ். அந்த நிறுவனத்தின் மேலாளர் செய்யும் தவறுகளை பிரித்விராஜ் தட்டிக் கேட்டதால் அவமானப்படுத்தப்படுகிறார். தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளருடனும் பிரச்சனை ஏற்படுகிறது. அவரது சம்பளம் வங்கிக் கணக்குக்கு வந்ததும் தன் தாயாருக்கும் மனைவிக்கும் பணம் அனுப்பிவிட்டு குடிக்க ஆரம்பிக்கிறார். சொந்தப் பிரச்சினை,  அலுவலகப் பிரச்சனை என்று பல்வேறு மன அழுத்தங்களில் இருக்கும் பிரித்திவிராஜ்,  அன்று இரவு முழுவதும் தொடர்ந்து குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் தான் குட் டே திரைப்படம். கல்லூரியில் உடன் படித்த தோழி 'மைனா' நந்தினிக்கு போன் செய்து பேசுகிறார் பிரித்விராஜ். இதனால் நந்தினிக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. நிறை போதையில் மேம்பாலம் ஒன்...
டி என் ஏ _ விமர்சனம்

டி என் ஏ _ விமர்சனம்

Reviews
டி என் ஏ _ விமர்சனம் நாயகன் அதர்வா காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் முழு நேர குடிகாரனாகி தன் குடும்பத்தாருக்கு பாரமாக இருக்கிறார். மற்றொருபுறம் மனவளர்ச்சியில் முதிர்ச்சியே இல்லாத பருவப் பெண்ணான நிமிஷா சஜயன் திருமணம் பலமுறை தள்ளிப் போகிறது. விதியின் விளையாட்டோ என்னவோ இந்த இருவருக்கும் பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். இரண்டு மைனஸ்கள் இணைந்து ஒரு பிளஸ் ஆவது போல் அதர்வாவும் நிமிஷாவும் மனமொத்த தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு ஓர்  அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் வந்திருக்கும் புதிய வரவு குறித்து எல்லோரும் சந்தோஷத்தில் திளைக்க,  நிமிஷாவிடம் குழந்தையை காட்டும் போது, அது தன் குழந்தை அல்ல என்று மறுக்கிறார் அவர். அதர்வா உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் நிமிஷா சொல்வதை ஆரம்பத்தில் மறுத்தாலும், பின்னர் அதில் உண்...
குபேரா_ விமர்சனம்

குபேரா_ விமர்சனம்

Reviews
கடலுக்கு அடியில் ஏராளமான எரிபொருள் வளம் இருப்பதை ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடிக்கிறது. இந்த எரிபொருள் வளத்தைக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு  இந்தியா எந்த நாட்டையும் சார்ந்திடாமல் எரிபொருள் தேவையை சுயசார்புடன்  பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்தத் துறை சம்பந்தமான மத்திய அமைச்சரை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு  தன் சுய லாபத்துக்கு இந்த எரிபொருள் வளத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் தொழிலதிபர் நீரஜ் மித்ரா. இதற்கான லஞ்சப் பணம் ஒரு லட்சம் கோடி ரூபாயை யார் யாருக்கு எவ்வளவு கருப்பு பணமாக தர வேண்டும் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி தொழிலதிபர் நீராஜ் மித்ராவிடம் கொடுக்கிறார் அமைச்சர். தொகை பெரிதாக இருப்பதால் இதை சரியான ஆளிடம் கொடுத்து செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார் நீரஜ். குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி சிறையில் இருக்கும் நேர்மையான சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனாவை வெளியே கொண்டு வந்து இந்த காரியத்துக்...
படைதலைவன் _ விமர்சனம்

படைதலைவன் _ விமர்சனம்

Reviews
படைதலைவன் _ விமர்சனம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் படை தலைவன். பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சேத்துமடை பகுதியில் கஸ்தூரிராஜா தனது மகன் சண்முக பாண்டியன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மணியன் என்ற கம்பீரமான யானை ஒன்றும் இவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே வளர்ந்து வருகிறது. கோடி கணக்கான ரூபாய் சம்பாதிப்பதற்காக யானை மணியனை வன காளிக்கு பலி கொடுக்க திட்டமிடுகிறான் வில்லன். இதற்காக பல சதி வேலைகளை செய்து யானையை காட்டுக்குள் கடத்திச் சென்று விடுகிறான் வில்லன். யானையைத் தேடிச் செல்லும் சண்முக பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? பலி கொடுக்கப்பட இருந்த யானை மணியனை எப்படி அவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படைத்தலைவன் படத்தின் கதை. சண்டை காட்சிகளில் அப்பா விஜயகாந்த் போலவே அதிரடி...
கட்ஸ் _ விமர்சனம்

கட்ஸ் _ விமர்சனம்

Reviews
கட்ஸ்_ விமர்சனம் தந்தை மகன் என இரட்டை வேடமேற்று நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ரங்கராஜ். பிரசவத்துக்காக தன் மனைவி சுருதி நாராயணனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் போது ஒரு கும்பலால் கொலை செய்யப்படுகிறார் ரங்கராஜ். பிறக்கும்போதே தந்தையை இழந்த மகன் ரங்கராஜ்,  சிறுவயதிலேயே தாயையும் இழந்து விடுகிறார். தாயின் ஆசைப்படியே போலீஸ் அதிகாரியாகவும் ஆகிவிடுகிறார். மனைவி நான்சியுடன் மகிழ்ச்சிகரமாக வாழும் ரங்கராஜ் ஒரு திருநங்கை கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த நிலையில் ரங்கராஜ் மனைவி  நான்சி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். மனைவியை பறி கொடுத்துவிட்டு, வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கும் ரங்கராஜுக்கு கான்ஸ்டபிள் டெல்லி கணேஷ் மிகவும் ஆறுதலாக இருக்கிறார். இந்த சூழலில் தன் தந்தை ரங்கராஜையும் மனைவியையும் கொன்றது யார் என்பது இன்ஸ்பெக்டர் ரங்கராஜ...
பரமசிவன் பாத்திமா _ விமர்சனம்

பரமசிவன் பாத்திமா _ விமர்சனம்

Reviews
  பரமசிவன் பாத்திமா _ விமர்சனம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உள்ள சுப்ரமணியபுரம் மற்றும் யாக்கோபுரம் என்ற இரண்டு கிராமங்களில் இரண்டு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். யாக்கோபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றின் வரவேற்பு விழா முடிந்ததும் அன்று இரவே மணமகன் மர்மமான முறையில் மரணமடைந்து கிடக்கிறார். இதைப்போலவே சுப்பிரமணியபுரத்திலும் புது மாப்பிள்ளை ஒருவர் மரணமடைகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் தலைமையில் போலீசார் விசாரணையை துவக்குகின்றனர். திருமண சமயத்தில் மணமகனை மட்டுமே குறிவைத்து கொலைகள் நடக்க காரணம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் மரணம் என்ன என்பதுதான் பரமசிவன் பாத்திமா படத்தின் கதை. காதலுக்கு எதிராக இருக்கும் ஜாதிகளை பற்றிய படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கையில் இந்தப் படம் காதலுக்கு எதிராக நிற்கும் மதத்தை குறி வைக்கிறது. வழக்கமான 'டிபிக்கல்...
மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம்

மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம்

Reviews
மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம் எழுத்தாளரான சத்யராஜ் நடுத்தர குடும்பம் ஒன்றின் கதையை எழுத திட்டமிடுகிறார். இதற்காக அவர் ஆட்டோ டிரைவர் காளி வெங்கட்டின் குடும்பத்தை தேர்வு செய்கிறார். காளி வெங்கட்டுக்கு. நடுத்தர வர்க்கத்திற்குறுய சிற்சில இயல்பான பிரச்சனைகள் இருந்தாலும், மனைவி ஷெல்லி, மகள் ரோஷினி மற்றும் மகன் விஷ்வா ஆகியோருடன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகிறார்.  மனைவி, மகள், மகன் மட்டுமே தனது உலகம் என்று வாழும் காளி வெங்கட், தன் குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர். பெங்களூரில் பணியாற்றும் மகள் ரோஷினி திருமணத்துக்காக தன் பெற்றோர் தேர்வு செய்த ஒரு வரனை சந்திக்கச் செல்கிறார். இருவரும் தனியாக சந்தித்து பேசும் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்தாலும்,  அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போது ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. ரோஷினி தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை சுட்...