Sunday, October 4

Reviews

சாருகேசி _  விமர்சனம்

சாருகேசி _ விமர்சனம்

Reviews
சாருகேசி: விமர்சனம் இசையையே தன் உயிராக நினைக்கும் ஒரு ,வித்துவானுக்கு, முதுமையும் மறதி நோயும் (அல்சைமர்) சாட்டையடி கொடுக்கும்போது, அவரும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் படும் மன உளைச்சல்தான் இந்தத் திரைப்படத்தின் மையக்கரு. 'சாருகேசி' என்ற அந்த ராகத்தின் பெயரிலேயே கதையின் மொத்த ஜீவனும் அடங்கியிருக்கிறது. கர்நாடக இசை உலகில் கொடிகட்டிப் பறக்கும் வித்வானாக ஒய்.ஜி.மகேந்திரன். உலகம் முழுக்க அவருக்குப் பாராட்டு மழை பொழிந்தாலும்,  அன்பான மனைவி கண்ணை இமை காப்பது போல் காத்தாலும் அவரது நெஞ்சில் இரண்டு முட்கள் குத்திக் கொண்டே இருக்கின்றன. அது, சொந்த மகன் அவர் மீது காட்டும் வெறுப்பும்,  மாட்டுப் பெண்ணாய் வரும் மருமகள் ஏற்படுத்தும் வலியும்தான். இந்த வலியை அவர் தாங்கிக்கொள்வதும், மனைவி மீது பொழியும் காதலும், நோய் முற்றிய பின் குழந்தையாக மாறும் காட்சிகளும் என மனிதர் நடிப்பில் அள்ளுகிறார். அவ...
இரட்டையர் _ விமர்சனம்

இரட்டையர் _ விமர்சனம்

Reviews
‘இரட்டையர் விமர்சனம் ‘இரட்டையர்’ - இருக்கை நுனிக்கே  ரசிகர்களை இழுத்து வரும் சைக்கலாஜிகல் திரில்லர் என்று ஒரே வரியில் சுருக்கமாக விமர்சித்து விடலாம் எத்தனையோ மொழிகளில் ஏராளமான த்ரில்லர் படங்களை பார்த்துப் பழகியிருப்போம். ஆனா, இது அப்பிடி இல்ல பாஸ்! டோட்டலா வேற ரூட்டுல வந்து மிரட்டுற பக்கா சைக்கலாஜிகல் த்ரில்லர் தான் இந்த ‘இரட்டையர்’. ஏசியா ஐகானிக் ஸ்டுடியோஸ் தயாரிப்புல ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத் கண்ணன் கூட்டணியில இந்த வாரம் தியேட்டருக்கு வந்திருக்கு. புது இயக்குநர் ஜெகதீஷ் ஃபர்ஸ்ட் மேட்ச்லயே சிக்ஸர் அடிச்சிருக்காரா இல்லையா? வாங்க பார்ப்போம்! கதை இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை பிரதேசம் ஒரு குடும்பம் காதலி சென்று கொண்டிருக்கிறது. எதிர்பாராமல் நடக்கும் ஒரு கோர விபத்துல அப்பா ஸ்பாட் அவுட்! அம்மாவோட முகமும் முழுமையாக சிதைந்து விடுகிறது. அப்புறம் என்ன, பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்ட...
பெத்தி _ விமர்சனம்

பெத்தி _ விமர்சனம்

Reviews
பெத்தி _ விமர்சனம ’ராம் சரணின் மிரட்டல் பிளாக்பஸ்டர் என்று பத்து படத்தை ஒரே வரியில் சுருக்கமாக விமர்சனம் செய்து விடலாம். புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் - ஜான்வி கபூர் கூட்டணியில் உருவான 'பெத்தி' தியேட்டர்களை அதிரவைக்கும் அட்டகாசமான படமாக தூள் கிளப்பிக்  கொண்டிருக்கிறது. லப்பர் பந்து படத்தின் கிரிக்கெட் எமோஷனையும், பைசன் படத்தின் குஸ்தி ஆக்ஷனையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்த ஒரு வெறித்தனமான அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது! படத்தின் மெயின் ஸ்டோரி: விஜயநகரம் தாண்டிய ஒரு மலைக்கிராமம். அங்கே 1800-க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் வாழ்கிறார்கள். கண் முன்னாடி ரயில் போனாலும், அந்த ஊரில் நிற்காது. கிலோமீட்டர் கணக்கில் நடந்தே செல்லும் அவலம். இந்த ஊரில் பிறந்து, கூலி கொடுத்தால் யாருக்காகவும் மேட்ச் ஆடக்கூடிய ஒரு 'ஆட்டக்கூலி' தான் நம்ம பெத்தி (ராம் சரண்). ...
பரிமளா அண்ட் கோ _ விமர்சனம்

பரிமளா அண்ட் கோ _ விமர்சனம்

Reviews, Uncategorized
பரிமளா அண்ட் கோ _ விமர்சனம் ஃபேமிலி டிராமா எனப்படும் குடும்பப்  பாங்கான படங்களை உருவாக்குவதில் முத்திரை பதித்த இயக்குனர் பாண்டிராஜ் வழக்கமான பாசம், அழுகை சென்டிமென்ட் டிராக்குகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கிவிட்டு, இந்த முறை முழுக்க முழுக்க கலகலப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் ரூட்டில் புது வண்டியை ஓட்டியிருக்கிறார். கதை ஆரம்பத்தில் ஒரு ஜாலியான, கலகலப்பான குடும்பக் கதையாகத் தான் படம் தொடங்குகிறது. ஆனால், சட்டென்று கியரை மாற்றி, ஒரு கொலை வழக்காக மாறி மர்மத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்கிறது திரைக்கதை. அடுத்து என்ன நடக்கப் போகுது? என்ற ஆர்வத்தை க்ளைமாக்ஸ் வரை தக்க வைத்தது தான் இயக்குநரின் சாமர்த்தியம். அதோடு, இன்றைய தலைமுறைக்கு அவசியமான போதைக்கு எதிரான ஒரு வலுவான கருத்தையும் திரைக்கதையில் நேர்த்தியாகப் பிணைத்திருக்கிறார்கள். யார் யாருடைய ஆட்டம் எப்படி? ஜெயராம் - ஊர்வசி கெமிஸ்ட்ரி அபாரம். இவர்க...
சம்ஹாரம் _ விமர்சனம்

சம்ஹாரம் _ விமர்சனம்

Reviews
சம்ஹாரம்: விமர்சனம் ஒரே வீட்டுக்குள் அதுவும் ஒரே இரவில் நடப்பது போன்ற ஒரு கதையை சஸ்பென்ஸ் தெளிவாக கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு சம்ஹாரம் படத்தின் மூலம் அட்டகாசமான பதிலை தந்திருக்கிறார் இயக்குனர் ராம் பிரபா. அடுத்த நாள் காலை திருமணம்.ஆனால் மணப்பெண்ணுக்கு இந்தத் திருமணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லை. காரணம், அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை ஒரு குடிகாரன் மற்றும் ரவுடி. மேலும் அந்த மணப்பெண் தன் காதலனுடன் முதல் நாள் இரவே ஓடிப்போகத் திட்டம் போடுகிறாள். இதை மோப்பம் பிடிக்கும் அண்ணன், தங்கையை அறைக்குள் பூட்டி வைக்கிறான். ஆனால் அந்தப் பெண்ணோ அசராமல், நைஸாகத் தன் காதலனை அதே வீட்டுக்குள்ளேயே வரவழைத்து விடுகிறாள். இவர்கள் போதாதென்று, அந்த ரவுடி மாப்பிள்ளையும் நள்ளிரவில் அங்கே வந்து இறங்குகிறார். கூடவே இன்னும் சிலரும் வந்து சேர, அந்த வீடே ஒரு பரபரப்பான சூழலுக்கு மாறுகிறது. இங்குதான் ...

வாரண்ட்’ : இணைய தொடர் விமர்சனம்

Reviews
வாரண்ட்' : இணைய தொடர் விமர்சனம் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் 'வாரண்ட்' வெப் சீரிஸ், போலீஸ் க்ரைம் த்ரில்லராக மட்டுமல்ல; சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜையும் அழுத்தமாகப் பேசுகிறது.. 'விலங்கு' சீரிஸ் பாணியில், திருச்சியின் அசல் கிராமத்து மண்ணையும், காவல் நிலையத்தின் இறுக்கமான பக்கங்களையும் அப்படியே அச்சுப்பிசகாமல் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். @ கதைக்களம் ரொம்பவே சாதுவான, அப்பாவியான ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தால் எப்படி ஒரு கொடூரமான மனிதனாக மாறுகிறான் என்பதுதான் இந்த 'வாரண்ட்' படத்தின் ஒன்லைன். தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அரசு வேலைக்காக முட்டி மோதும் இளைஞன் கோட்டைக்கருப்பு. ஒவ்வொரு எக்ஸாமிலும் நூலிழையில் வாய்ப்பை கோட்டைவிடும் கருப்புக்கு, (பிரசாந்த் பாண்டியராஜ் ). ஒருவழியாக போலீஸ் வேலை கிடைத்துவிடுகிறது. திருச்சி ...
எக்ஸாம்: தொலைக்காட்சி தொடர் விமர்சனம்

எக்ஸாம்: தொலைக்காட்சி தொடர் விமர்சனம்

Reviews
எக்ஸாம்: தொலைக்காட்சி தொடர் விமர்சனம் அரசு வேலை வாங்கணும்ங்குறது நம்ம ஊர்ல பல நடுத்தர குடும்பங்களோட ஆகப்பெரிய கனவு. ஆனா, அதற்காக நடக்கும்  போட்டித் தேர்வுகள்ல நடக்குற முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும் அந்தக் கனவை எப்படி சிதைக்குதுங்கிறத ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் கதையா சொல்ல வந்திருக்கு இந்த 'எக்ஸாம்' வெப் தொடர். ஏற்கனவே 'சுழல்', 'வதந்தி'னு சூப்பர் ஹிட் சீரிஸ்களைக் கொடுத்த புஷ்கர் - காயத்ரியின் வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்புல, இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கத்துல அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கு. துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ்னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே  நடிச்சிருக்காங்க. இந்தத் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா? அக்குவேறு ஆணிவேறா பாத்துடலாம். அது என்ன கதை? உதகம் மலைப் பகுதியில் இருக்குற தைக்காரா என்கிற இடத்துக்குப் புதுசா வர்ற போலீஸ் ...
சட்டென்று மாறுது வானிலை _விமர்சனம்:

சட்டென்று மாறுது வானிலை _விமர்சனம்:

Reviews
'சட்டென்று மாறுது வானிலை' _ விமர்சனம்: கவித்துவமான தலைப்பில் வெறும் காதல் கதையாய் மட்டும் சுருங்காமல், அதிரடியும் மர்மமும் ததும்பும் ஒரு பரபரப்பான காதல்- சென்ட்டிமெண்ட் - த்ரில்லராக இப்படம் மலர்ந்துள்ளது. கதையின் நாயகன் சந்துரு, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் துடிப்பான ஓர் அனாதை இளைஞன். அமைச்சரின் மகளான ஜானகி, தன் தந்தையின் போக்கில் விருப்பமில்லாமல் விடுதியில் தங்கி வாழ்பவள். எதிர்பாராத ஓர் தருணத்தில் சந்தித்துக் கொள்ளும் இவ்விருவருக்கும் இடையே காதல் தீ  பற்றுகிறது. யாருக்கும் தெரியாமல் சட்டென்று மணமுடித்துக் கொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நாயகனுக்கு வேலை பறிபோகிறது. இதனால் பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள். அதை சமாளிக்கவும் சற்று ஆடம்பரமாக வாழவும்  வட்டிக்குகடன் வாங்குகிறார்கள். இந்த நிலையில் தேனிலவு கொண்டாடக் கொடைக்கானல் மலைக்குச் செல்கிறார்கள். அங்கே கதை, காத...

கருப்பு _ விமர்சனம்

Reviews
கருப்பு _ விமர்சனம் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் அநீதிகளை அச்சமின்ற தோலுரித்துக் காட்டும் அட்டகாசமான படம் கருப்பு. ஆதிக்கம் மிக்க மனித சக்திகளால் நடைபெறும் அக்கிரமங்களை தட்டிக்கேட்க, எளியோர்களின் சாமியான கருப்பு மனித உருவில் வந்து நின்றால் எப்படி இருக்கும் என்கிற ஃபேண்டஸி + அதிரடி மசாலாதான் கருப்பு! கேரளாவிலிருந்து சென்னைக்குத் தன் மகள் பினுவின் அறுவை சிகிச்சைக்காக, வருகிறார் தந்தை இந்திரன்ஸ். ஆனால், சென்னை நகரம் அவர்களுக்குப் புதியது என்பதால் வழி தெரியாமல் தவித்து, துரதிர்ஷ்டவசமாக சில சமூக விரோதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த நகைகள் அனைத்தையும்  திருடர்கள் பறித்துச் செல்ல, செய்வதறியாது திகைக்கும் அந்தத் தந்தை, நியாயம் கேட்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைகிறார். அங்குதான் கதையின் முக்கியத் திருப்பம் ஏற்படுகிறது. அநீதிக்குத் ...
29 விமர்சனம்

29 விமர்சனம்

Reviews
29 விமர்சனம் 'மேயாத மான்', 'ஆடை' ஆகிய வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குனர் ரத்தினகுமார், மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்லி இருக்கும் படம் தான் 29. ஒரு மனிதனின் வாழ்வில் 29 வயது என்பது மிகவும் முக்கியமானது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், தான் யார் என்பதை நிரூபிக்கவும் இந்த வயதில் ஓர் உத்வேகம் ஏற்படும். இந்த விஷயத்தை கதைக்களமாக கொண்டு இயக்குனர் ரத்தினகுமார் வழங்கி இருக்கும் புதுமை படைப்பு 29. சேலத்தில் இருந்து சென்னை வந்து ஒரு மேன்ஷனில் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞன் சத்யாவின் வாழ்க்கையில் நுழைந்த விஜி என்ற இளம் பெண், அவனது வாழ்க்கையில் எந்த வகையான பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகிறாள்? அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் 29 திரைப்படத்தின் கதை. அனேகமாக எல்லா படங்களிலும்தான் காதல் வருகிறது. ஆனால் காதலை புதிய கோணத்தில் சொல்லும் படங்கள் மிகச் சில மட்டுமே. இந்த மிகச்சில...